Author: Editor web2
சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் தோல்வி, கட்சி மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால அமைப்பு பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பல வெற்றிகளையும் தோல்விகளையும் கடந்த இயக்கம். தேர்தல் தோல்வியால் தொண்டர்கள் மனம் தளர வேண்டிய அவசியமில்லை” என்றார். தேர்தல் முடிவுகளைப் பற்றி பேசிய அவர், “வெற்றிக்கான காரணம் என்ன என்பதை ஆராயத் தேவையில்லை. கவர்ச்சிகரமான ஒரு மாயையை நம்பி மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால், அந்த மாயை குறித்து மக்கள் தற்போது ஒரு மாதத்திலேயே உணரத் தொடங்கியுள்ளனர்” என்று குறிப்பிட்டார். மேலும், சமீப காலமாக அதிமுகவில் இருந்து பிற கட்சிகளுக்கு சென்றவர்களை மறைமுகமாக விமர்சித்த அவர், “கட்சியை விட்டு சென்றவர்கள் உண்மையான…
தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்து சேவையை நவீனப்படுத்தும் முயற்சியாக, மாநில அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,000 புதிய மின்சார ஏசி பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பயணிகளுக்கு தரமான, பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து வசதியை வழங்கும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன வசதியுடன் பொதுமக்கள் பயணிக்கக்கூடிய பேருந்து சேவையை விரிவுபடுத்த இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் பார்த்திபன், “ஏசி பேருந்துகளில் பயணம் செய்வது உயர்ந்த வருமானம் கொண்டவர்களுக்கு மட்டுமே என்ற நிலையை மாற்ற வேண்டும். சாதாரண பொதுமக்களும் குறைந்த கட்டணத்தில் ஏசி பேருந்துகளில் பயணிக்கும் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்” என்று தெரிவித்திருந்தார். அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அடுத்த மூன்று மாதங்களுக்குள் 2,000 மின்சார ஏசி பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு…
நடிகர் தனுஷின் ரசிகர் நற்பணி இயக்கத்தின் அதிகாரப்பூர்வக் கொடி இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது ரசிகர் மன்றத்தை பல ஆண்டுகளாக நற்பணி இயக்கமாக செயல்படுத்தி வருகிறார். கல்வி உதவி, ரத்ததானம், மரக்கன்றுகள் நடுதல், நிவாரண உதவிகள் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளில் தனுஷ் ரசிகர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ரசிகர் நற்பணி இயக்கத்தின் புதிய அதிகாரப்பூர்வக் கொடி இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இயக்கத்தின் அடையாளத்தையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கொடி, இனி மாநிலம் முழுவதும் நடைபெறும் ரசிகர் மன்ற நிகழ்ச்சிகள் மற்றும் நற்பணி நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொடி அறிமுகத்துடன் வெளியிடப்பட்ட “எண்ணம் போல் வாழ்க்கை… எண்ணம் போல் தான் வாழ்க்கை!” என்ற வாசகம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தனுஷ் ரசிகர்கள் புதிய கொடியின் படங்களைப் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி…
கிருஷ்ணகிரி: அதிமுக மற்றும் தவெக இணையும் என தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு, இனியும் இதுபோன்ற கருத்துகளை வெளியிட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி-தர்மபுரி மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுகவில் இருந்த ஜாம்பவான்கள் எல்லாம் தவெகவுக்கு சென்று விட்டார்கள், அதிமுகவில் தற்போது லெட்டர் பேட் மட்டுமே உள்ளது” என்ற ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு பதிலளித்தார். “அதிமுகவில் இருப்பவர்கள் எல்லாம் ஜாம்பவான்கள் தான்.தொண்டர்களால் உருவாக்கப்பட்டவர்கள் தான் இந்த விஜய் பாஸ்கர்கள்.இவர்கள் ஓடுகாலிகள், சந்தர்ப்பவாதிகள், துரோகிகள். ஜாம்பவான்கள் முழுவதும் அதிமுகவில் உள்ளனர். லெட்டர் பேடு வைத்து ஏமாற்றியவர்கள் மட்டுமே தவெகவுக்கு ஓடி உள்ளனர்” என்றார். மேலும், “அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான், எதிர்காலத்தில் இணையும் என்று ஆதவ் அர்ஜுனா கூறி வருகிறார்.…
பனைத் தொழிலை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கில், 55 அடி உயரமுள்ள பனைமரத்தில் ரூ.60 ஆயிரம் செலவில் இரும்பு படிக்கட்டு அமைத்துள்ள இளைஞரின் முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட சாலைப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் தினகர், விவசாயத்துடன் பாரம்பரிய பனைத் தொழிலையும் செய்து வருகிறார். பல தலைமுறைகளாக அவரது குடும்பம் பனைத் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. தினகரின் தந்தை ஏசுதாசன் (70) பல ஆண்டுகளாக பனை ஏறும் தொழிலாளியாக பணியாற்றியவர். வயது முதிர்வு காரணமாக தற்போது பனைமரத்தில் ஏற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பனைத் தொழில் அழியாமல் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில், தனது வீட்டின் அருகே உள்ள 55 அடி உயரமுள்ள பனைமரத்தில் ரூ.60 ஆயிரம் செலவில் இரும்புக் கம்பிகளால் வளைவு வடிவிலான நிரந்தர படிக்கட்டை அமைத்துள்ளார். இந்த படிக்கட்டு மூலம் இளைஞர்கள் மட்டுமின்றி பெண்கள், சிறுவர்கள்…
முற்போக்கு சிந்தனைகளை பொம்மலாட்டக் கலையின் மூலம் இளைய தலைமுறைக்கு கொண்டு சென்ற மறைந்த கலைமாமணி மு.கலைவாணனின் படத்திறப்பு விழா சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு, ஓவியர் டிராட்ஸ்கி மருது உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். விழாவில் பேசிய கி.வீரமணி, “மறைந்த கலைவாணனின் தந்தை முத்துக்கூத்தன், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டிருந்தாலும், கலைத்துறையில் என்.எஸ். கிருஷ்ணனையே தனது குருவாக ஏற்றுக்கொண்டார். அதனால் தான் தனது மகனுக்கு கலைவாணன் என்று பெயர் வைத்தார்” என்றார். மேலும், “சமூக மாற்றத்திற்கான கருத்துகளை கலைவாணர் திரைப்படங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சென்றார். இன்று சிலர் எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் திராவிட பாரம்பரியம் தேர்தல் வெற்றி, தோல்விகளைத் தாண்டி நிலைத்து நிற்கும். அதை யாராலும் அசைக்க…
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 2023 செப்டம்பர் மாதம் முதல் அப்போதைய திமுக அரசால் மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டமாக தொடங்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, திமுக மற்றும் அதிமுக தலா ரூ.2,000 வழங்குவதாகவும், தவெக ஆட்சிக்கு வந்தால் 60 வயதுக்குட்பட்ட அனைத்து தகுதியுள்ள பெண்களுக்கும் மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. தவெக அரசு பொறுப்பேற்ற பிறகும், முன்பிருந்த ரூ.1,000 உரிமைத்தொகை திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், தேர்தல் வாக்குறுதிப்படி ரூ.2,500 எப்போது வழங்கப்படும் என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வந்தன. இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இன்று நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம், “ரூ.2,500 எப்போது வழங்கப்படும்?” என்று பெண் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர், தற்போது ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை எந்த தடையும் இன்றி வழங்கப்பட்டு வருவதாகவும்,…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் தலைவர்கள் குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு, ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த டிரம்ப், “ஈரான் மக்கள் அயதுல்லா காமேனியின் இறுதிச்சடங்குக்காக ஈரான் தலைவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியிருக்கிறார்கள். நாங்கள் நினைத்தால் ஒரே தாக்குதலில் அவர்களை அனைவரையும் அழிக்க முடியும். ஆனால், அதற்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்த யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால் அதைச் செய்யவில்லை. நாங்கள் நல்லவர்கள் என்பதால் அவர்களுக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுத்துள்ளோம்” எனக் கூறியிருந்தார். இந்த நிலையில், டிரம்பின் இந்தக் கருத்துக்கு ஆர்மீனியாவில் உள்ள ஈரான் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ளது. “மனிதர்களைக் கொல்ல முடியும், ஆனால் கொள்கைகளைக் கொல்ல முடியாது. நீங்கள் அயதுல்லா காமேனியைக் கொன்றுவிட்டதாக நினைக்கிறீர்கள். ஆனால், உண்மையில் நீங்கள் ஒரு நறுமணப் பாட்டிலை உடைத்திருக்கிறீர்கள். இப்போது அதன் வாசம் எல்லா இடங்களிலும் பரவத் தொடங்கியுள்ளது.…
நடப்பு ஆண்டுக்கான உலகளாவிய பாஸ்போர்ட் தரவரிசையில் கடந்த ஆண்டைவிட இந்தியா மேலும் ஒரு இடம் பின்தங்கி உள்ளது. ஆண்டு தோறும் உலகளாவிய பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. சர்வதேச பயணங்களுக்கான எளிமை, பிற நாடுகளில் வசிப்பதற்கும், பணிபுரிவதற்கும் மற்றும் முதலீடு செய்வதற்கும் நாடுகளின் பாஸ்போர்ட் வழங்கும் நன்மைகள் அடிப்படையில் தரவரிசைப்படுத்துகிறது. இந்நிலையில், 2026-ம் ஆண்டுக்கான உலகளாவிய பாஸ்போர்ட் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 197 நாடுகளில் இந்தியா 125-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2025-ம் ஆண்டில் 124-வது இடத்தில் இருந்த இந்தியா ஒரு இடம் பின்தங்கி உள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 26 நாடுகளுக்கு விசா இல்லாமலே செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. விசா இல்லாமல் பயணியக்கூடிய நாடுகளில் இந்தோனேசியா, பூட்டான், மாலத்தீவு, தாய்லாந்து, கென்யா உள்ளிட்ட நாடுகள் அடங்கும். ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, பின்லாந்து, ஜெர்மனி, டென்மார்க், நெதர்லாந்து, அயர்லாந்து, இங்கிலாந்து, நார்வே, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.
இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் கொண்ட கட்டண விளம்பரங்களை நீக்குமாறு மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் இன்ஸ்டா தளத்தில் இருந்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் கொண்ட கட்டண விளம்பரங்களை நீக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 7 நாட்களுக்குள் இது குறித்து விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பிபிசி நிறுவனத்தின் விசாரணை மூலம் இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் கொண்ட கட்டண விளம்பரங்கள் குறித்து விவரம் அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இதை தீவிரமாக ஆராயும் வகையில் புதிதாக இன்ஸ்டா கணக்கை பிபிசி தொடங்கி உள்ளது. அதில் பாலியல் ரீதியாகத் தூண்டும் உள்ளடக்கம் குறித்த பரிந்துரை வந்துள்ளது. அதை மேலும் ஆராயும் வகையில் பாலியல் ரீதியான பதிவுகளை பகிரும் 10 இன்ஸ்டா ஃப்ரொபைல்களை ஃபாலோ செய்துள்ளது. அதன்…