Author: Editor web2
நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே பழிக்குப் பழியாக நடந்ததாகக் கூறப்படும் கொடூர தாக்குதலில் தந்தை மற்றும் அவரது 5 வயது மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (40). இவர் தனது மகன்களான சின்னதுரை (15) மற்றும் ஜெயராஜ் (5) ஆகியோருடன் இன்று பிற்பகலில், இருசக்கர வாகனத்தில் வீரவநல்லூர் அருகே உள்ள வல்லத்தி நம்பிகுளம் பகுதியில் இருந்து சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர்களைப் பின்தொடர்ந்து வந்த காரில் இருந்த மர்ம கும்பல், இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் அனைவரும் கீழே விழுந்த நிலையில், 5 வயது ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தப்பி ஓட முயன்ற காளிமுத்துவை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்ததுடன், அவரது தலையை துண்டித்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில்…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மாநிலத் தலைவர் மு. வீரபாண்டியன், காஞ்சிபுரத்தில் இன்று கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றும் நடவடிக்கையை கண்டிப்பதாகவும், அதற்கு பதிலாக 200 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கோவளத்தில் நடைபெற்ற தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர், “புதிய கூட்டணியை அமைக்க முயற்சி மேற்கொள்ளும் முதல்வர் விஜய்க்கு எங்களது வாழ்த்துகள்” என்றார். அந்தக் கூட்டத்தில் சிபிஐ பங்கேற்காதது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “நாங்கள் அங்கு சென்றிருந்தால் இயல்பாக சில கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கும். அது அந்தக் கூட்டத்தின் நோக்கத்தையும், அங்கிருந்த சூழலையும் பாதிக்கும் என்பதால் நாகரிகம் கருதி பங்கேற்கவில்லை. ஆனால் வெளியில் இருந்து எங்களது ஆதரவு எப்போதும் இருக்கும்” என்று தெரிவித்தார். திமுக ஆளுநரிடம் அளித்துள்ள…
தமிழகத்தில் மாதம் ஒருமுறை மின் கட்டண கணக்கீட்டு முறையை அமல்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி என்னவாயிற்று என தவெக அரசுக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ’தவெக ஆட்சிக்கு வந்தவுடன், தற்போது இருக்கும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணக் கணக்கீடு நீக்கப்பட்டு, மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடுவது அமல் படுத்தப்படும்’ என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் தவெக அரசு அமைந்து இரண்டுமாதங்கள் முடியவிருக்கிறது. இந்நிலையில் தமிழக மக்கள் தொடர்ந்து இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணத்தைச் செலுத்தி, பெரும் துன்பத்திற்கும், கடும் மனஉளைச்சலுக்கும் ஆளாகி வருகிறார்கள். கடந்த திமுக ஆட்சி பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றியதைப்போல, தவெக அரசும் ஏமாற்றி விடுமோ என்ற அச்சம் தமிழக மக்களிடையே பரவலாக…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் . எஸ்.பி. வேலுமணி, கட்சிப் பொறுப்புகள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பாக தாங்கள் எழுதிய கடிதம் குறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், “நாங்கள் எழுதிய கடிதத்தில் எங்களது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம் முதல் கட்சிக்காக உழைத்தவர்களும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலத்தில் கட்சியை வளர்க்க பாடுபட்டவர்களுக்கும் உரிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை. அதனால்தான் நானும், அன்பழகனும், தங்கமணியும் எங்களுக்கு வழங்கப்பட்ட பதவிகள் தேவையில்லை; சாதாரண உறுப்பினர்களாகவே தொடர்கிறோம் என்று தெரிவித்தோம்” என்றார். அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “வழக்கமாக வளர்மதி கூட்டத்திற்கு அழைப்பார். இந்த முறை எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. அதற்கு முன்பே நாங்கள் கடிதம் கொடுத்திருந்ததால், அந்தக் கூட்டத்திற்கு எங்களை அழைக்காமல் இருந்திருக்கலாம்” என்று கூறினார். ‘ஜாம்பவான்கள்’ என்ற தனது…
வட மாநிலங்களில் காலியாக உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாதது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய் அத்தொகுதியை ராஜினாமா செய்தது, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக உள்ளன. இது குறித்து மாநில அரசு மற்றும் சட்டப்பேரவைச் செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரப்பூர்வ தகவல்களை ஏற்கனவே அனுப்பிவிட்டதாக சொல்லப்பட்டது. இதையடுத்து, ஜூலை முதல் வாரத்தில் இடைத்தேர்தல் அட்டவணை வெளியாகும் என அரசியல் கட்சிகள் எதிர்பார்த்திருந்தன. ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த தாமதத்தின் பின்னணியில், குதிரை பேர குற்றச்சாட்டும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கும் முக்கிய…
சென்னை அருகே கோவளத்தில் இன்று நடைபெற்ற தவெக தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், மாநில உரிமைகள், கூட்டணி ஒருங்கிணைப்பு, மதச்சார்பற்ற அரசியல் மற்றும் எதிர்கால தேர்தல் வியூகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமாவளவன் ஆச்சரியம் கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “ஆட்சி அமைக்கும்போது பாஜக ஆதரவில் இருந்த அதிமுகவை நாடாமல், மதச்சார்பற்ற கட்சிகளான IUML, காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயன்றது வரவேற்கத்தக்கது. அதனால்தான் நாங்கள் ஆதரவு அளித்தோம். திமுக கூட்டணியில் இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எப்படி ஆதரவு அளிக்கும் என்ற கேள்வி இருந்தாலும், அவர்கள் எடுத்த முடிவு என்னை ஆச்சரியப்படுத்தியது” என்று தெரிவித்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காதர் மொய்தீன் மகிழ்ச்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், ஆட்சியில் பங்குதந்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்ததுடன், கூட்டணிக்கு…
தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வந்த டாஸ்மாக் பார்களை திடீரென மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால், பார் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சங்கத் தலைவர் அன்புசெல்வன் மற்றும் பொருளாளர் ராமநாதன் கூறியதாவது: டாஸ்மாக் பார்களை இயக்குவதற்கான காலக்கெடு 2025 டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அதனை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து ஜூன் 30, 2026 வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த பார்களை உடனடியாக மூடும் நடவடிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் நிர்வாக இயக்குநர், புதிய உத்தரவு வெளியாகும் வரை பார்களை தொடர்ந்து இயக்கலாம் என தெரிவித்திருந்ததாகவும், அதனை நம்பி வணிக நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் திடீரென முன்னறிவிப்பின்றி மூட உத்தரவிடப்பட்டதால், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட சரக்குகள் வீணாகி பெரும் நிதி…
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் அருகே அணுக்கனிமச் சுரங்கத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டு ஆணையை ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது குறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற்ற தவெக செயற்குழுக் கூட்டத்தில், இதே திட்டத்தை “தென் தமிழகத்தை பாழ்படுத்தும் நச்சுத் திட்டம்” என்று கூறி எதிர்த்த கட்சி, தற்போது ஆட்சியில் இருந்து அதற்கான ஒதுக்கீட்டை நீட்டிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நச்சுத் திட்டம் என்று கூறிய திட்டம், தற்போது எப்படி நலத்திட்டமாக மாறியது? இதற்கு முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், மேலூர் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தாம் ஆதாரங்களுடன் குரல் கொடுத்ததையும் நினைவுகூர்ந்த எடப்பாடி பழனிசாமி, மக்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து அதிமுக குரல் கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.…
சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள ‘தாஜ் பிஷர்மென்ஸ் கோவ்’ (Taj Fisherman’s Cove) தனியார் நட்சத்திர விடுதியில், தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவருமான விஜய் தலைமையில் தோழமைக் கட்சிகளின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்று முடிந்தது. தவெக அரசுக்கு ஆதரவளித்து வரும் காங்கிரஸ் கட்சி தரப்பில் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஜோதிமணி எம்.பி) விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் முகைதீன் ஆகிய தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த நிலையில், இன்று நடைபெற்ற தவெக தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில்காங்கிரஸ் கட்சியின் புதிய மாநிலத் தலைவராக பி. மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்ட பிறகு, தவெக -…
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட அன்வர் ராஜா, ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 324 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் முகமது ஜலீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரிய அன்வர் ராஜாவின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்த நிலையில், அதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேசமயம், 2014 தேர்தலைத் தொடர்ந்து 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களும் நடைபெற்றுவிட்டதால், இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பதால் எந்த நடைமுறைப் பயனும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும், சட்டப்படி தேவையான அடுத்தகட்ட உத்தரவுகளை உயர்நீதிமன்றம் பிறப்பிக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில், நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள்காட்டி, திமுக வேட்பாளர்…