Close Menu
    What's Hot

    ” வைகோவுக்கு சங்கடம்… திருமாவுக்கு ஆச்சரியம்…” – கோவளம் கூட்டத்தில் நடந்தது என்ன?

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: பார் உரிமையாளர்கள் எச்சரிக்கை!

    “நச்சுத் திட்டம் நலத்திட்டமாக மாறியது எப்படி?” – முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: பார் உரிமையாளர்கள் எச்சரிக்கை!
    Featured

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: பார் உரிமையாளர்கள் எச்சரிக்கை!

    Editor web2By Editor web2July 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tasmac 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வந்த டாஸ்மாக் பார்களை திடீரென மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால், பார் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சங்கத் தலைவர் அன்புசெல்வன் மற்றும் பொருளாளர் ராமநாதன் கூறியதாவது:

    டாஸ்மாக் பார்களை இயக்குவதற்கான காலக்கெடு 2025 டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அதனை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து ஜூன் 30, 2026 வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த பார்களை உடனடியாக மூடும் நடவடிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

    ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் நிர்வாக இயக்குநர், புதிய உத்தரவு வெளியாகும் வரை பார்களை தொடர்ந்து இயக்கலாம் என தெரிவித்திருந்ததாகவும், அதனை நம்பி வணிக நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் திடீரென முன்னறிவிப்பின்றி மூட உத்தரவிடப்பட்டதால், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட சரக்குகள் வீணாகி பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

    மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நாளை சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களுடன் மதுபானக் கடைகளையும் பூட்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம் எச்சரித்துள்ளது.

    BreakingNews LiquorShops tamilnadu Tasmac
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“நச்சுத் திட்டம் நலத்திட்டமாக மாறியது எப்படி?” – முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
    Next Article ” வைகோவுக்கு சங்கடம்… திருமாவுக்கு ஆச்சரியம்…” – கோவளம் கூட்டத்தில் நடந்தது என்ன?
    Editor web2
    • Website

    Related Posts

    ” வைகோவுக்கு சங்கடம்… திருமாவுக்கு ஆச்சரியம்…” – கோவளம் கூட்டத்தில் நடந்தது என்ன?

    July 1, 2026

    “நச்சுத் திட்டம் நலத்திட்டமாக மாறியது எப்படி?” – முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

    July 1, 2026

    வசூல் வேட்டை!. அருந்ததி சாதனையை முறியடித்த சமந்தாவின் ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம்!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ” வைகோவுக்கு சங்கடம்… திருமாவுக்கு ஆச்சரியம்…” – கோவளம் கூட்டத்தில் நடந்தது என்ன?

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: பார் உரிமையாளர்கள் எச்சரிக்கை!

    “நச்சுத் திட்டம் நலத்திட்டமாக மாறியது எப்படி?” – முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

    வசூல் வேட்டை!. அருந்ததி சாதனையை முறியடித்த சமந்தாவின் ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம்!

    அரசுப் பள்ளி ஆசிரியரின் அநாகரிக செயல்!. மதுபோதையில் பொதுவெளியில் ரகளை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.