Author: Editor web2
சென்னையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுகவுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையேயான உறவை யாராலும் பிரிக்க முடியாது என்று உறுதிபட தெரிவித்தார். அவர் பேசுகையில், “இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமிய சகோதரர்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள். நாட்டில் தற்போது என்ன நடக்கிறது என்பதை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்று சிலர் ‘சோஃபா’ வந்தவுடன் நம்மை விட்டு சென்றிருக்கலாம். ஆனால், நீங்கள் அனைவரும் திமுகவுடன் இருப்போம் என்ற உறுதியோடு இங்கு வந்துள்ளீர்கள்” என்றார். மேலும், “இஸ்லாமியர்களுக்கும் திமுகவுக்கும் இடையேயான உறவை யார் வந்தாலும் பிரிக்க முடியாது. யார் என்ன சொன்னாலும், எந்த அவதூறுகளை பரப்பினாலும், சிறுபான்மை மக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் திமுக என்றைக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கும்” என்று தெரிவித்தார். தொடர்ந்து, “தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் பேரிடர் காலத்தில் இருந்து மாநிலத்தை திமுக நிச்சயம் மீட்டெடுக்கும்” என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
மதுரை மருத்துவக் கல்லூரி அரங்கில் அரசு ஆய்வக நுட்புனர் சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு மலர் வெளியீட்டு விழா, இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கல்லாணை, கோபிசன் உள்ளிட்டோர் பங்கேற்பதாக அழைப்பிதழிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அமைச்சர் நிர்மல்குமாருக்கு அடுத்தடுத்த அரசு நிகழ்ச்சிகள் இருந்ததால், திட்டமிட்ட நேரத்திற்கு சுமார் 10 நிமிடங்கள் முன்னதாகவே காலை 9.50 மணியளவில் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வந்தார். ஆனால், அப்போது மேடையில் விழா ஏற்பாட்டாளர்கள், சங்க நிர்வாகிகள், அழைக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் என முக்கிய பிரமுகர்கள் யாரும் வராத நிலையில், பின்னணியில் தவெக கட்சிப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. மேடைக்கு விரைந்து சென்ற அமைச்சர், அங்கு யாரும் இல்லாததை பார்த்ததும் அப்செட் ஆனார். அவரிடம், “இன்னும் சில நிமிடங்களில் எம்.எல்.ஏ.க்களும், சங்க நிர்வாகிகளும் வந்து விடுவார்கள்” என்று விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். ஆனால், தொடர்ந்து…
உலகின் மிகப் பெரிய மெசேஜிங் தளமான வாட்ஸ்அப், பயனர்களின் மொபைல் எண்ணை வெளிப்படுத்தாமல் தொடர்புகொள்ளும் வகையில் “Username” என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. ஆனால், இந்த அம்சத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பே, அதனைத் தற்காலிகமாக நிறுத்துமாறு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வாட்ஸ்அப்புக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால், தனியுரிமை மற்றும் இணையப் பாதுகாப்பு குறித்த விவாதம் தீவிரமாகி உள்ளது. இதுவரை வாட்ஸ்அப்பில் ஒருவரை தொடர்புகொள்ள அவரது மொபைல் எண் கட்டாயமாக இருந்தது. ஆனால், புதிய வசதியில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட Username ஒன்றை உருவாக்கி, அதன்மூலம் மற்றவர்களுடன் தொடர்புகொள்ள முடியும். இதனால் மொபைல் எண்ணை பகிர வேண்டிய அவசியம் இருக்காது. இருப்பினும், கணக்கை உருவாக்க மொபைல் எண் தொடர்ந்து அவசியமாகவே இருக்கும். ஆனால், மற்றவர்களுடன் உரையாடும்போது அந்த எண் மறைக்கப்படும். இந்திய அரசின் கவலை என்ன? இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக “டிஜிட்டல் அரெஸ்ட்”, வங்கி மோசடி, போலி…
முதலமைச்சர் விஜய் குறித்துப் பொதுக்கூட்டத்தில் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக எழுந்த புகாரில், திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். கடந்த ஜூன் 20 அன்று திருச்செந்தூர் அருகே ஆத்தூரில் நடைபெற்ற கருணாநிதியின் பிறந்தநாள் விழாக் கூட்டத்தில், முதலமைச்சர் விஜய் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது தொடர்பாகத் தவெக நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணனிடம் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வைத்து காவல்துறையினர் சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதற்காக காவல்துறையினர் அவரை வெளியே அழைத்து வந்தனர்.…
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டத்தில், தமிழக ஆளுநரின் ஆய்வுப் பயணங்கள் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் சிபிஎம் எம்.பி. சு. வெங்கடேசன் கடுமையான கருத்துகளை வெளியிட்டனர். மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் நிர்மல்குமார், விஸ்வநாதன், மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், காவல்துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய சு. வெங்கடேசன், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைந்து ஆய்வு செய்யும் சட்டப்பூர்வ அதிகாரம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவுக்கே (DISHA) உள்ளது என்றார். மேலும், “39 அமைச்சகங்களின் கீழ் செயல்படும் 96 துறைகளின் திட்டங்களை ஆய்வு செய்ய இந்தக் குழுவுக்கே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வேறு யாரேனும் அதிகாரிகளை அழைத்து பல்துறை ஆய்வுக் கூட்டம்…
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சியினர் பலர் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ள நிலையில், இதற்கு தவெக ஐடி விங் தரப்பில் மிக காட்டமான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தவெக ஐடி விங் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ வாய் இருக்கிறது என்பதற்காக வரம்பு மீறிப் பேசுவதில், fake narrative திமுகவை யாராலும் அடித்துக்கொள்ளவே முடியாது. அந்த வேலையை அச்சு பிறழாமல் செய்தால், திமுகவை மக்கள் நம்பிவிடுவர் என்ற நப்பாசையில் அவதூறு கழகத் தலைவராக மாறி, வெறும் வாயில் அவதூறுகளை மென்றுகொண்டே ஓர் அறிக்கை விட்டிருக்கிறார் ஸ்டாலின் சார். பொறுப்பானப் பதவியில் இருந்ததோடு, தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் பொறுப்பை உணராமல் பேசியது குறித்து உயர்நீதிமன்றம் என்ன கூறியது என திமுக மற்றும் ஸ்டாலின் சாரின் செவிகளில் ஏறாமல் போனது ஏனோ? அனிதா ராதாகிருஷ்ணனா அல்லது அவதூறு கோதாகிருஷ்ணனா…
கர்நாடகாவின் மேகதாது அணைத் திட்டத்திற்கு காங்கிரஸ் ஒருபோதும் அனுமதி அளிக்காது என்றும், தமிழக நலனில் எந்த சமரசமும் இருக்காது என்றும் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மேகதாது அணை விவகாரத்தில் ஒரு செங்கல் கூட வைக்க விடமாட்டோம். இதுவரை சட்டமன்ற தீர்மானத்துக்கு ஆதரவு அளித்துள்ளோம்; இனியும் தமிழக மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்போம்” என்றார். கர்நாடகாவில் மாநில நலன் தொடர்பான பிரச்சினைகளில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவதைப் போல, தமிழகத்திலும் அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என்றும், அதற்காக தமிழக பாஜக மத்திய அரசிடம் மாநிலத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தவெக…
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், “ முன்னாள் அமைச்சர் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கக் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதில் காட்டியிருக்கிறது சோஃபா மாடல் அரசு. அவதூறு பேசி – பொய் பழிகளை அள்ளி வீசுவது மட்டும் தான் அரசியல் என்று செயல்படும் ஆளுங்கட்சியின் இந்த அராஜகப் போக்கை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பொய் வழக்காலும் – கைது நடவடிக்கைகளாலும் கழகத்தை முடக்கலாம் என்று நினைக்கும் இந்த ரீல்ஸ் அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது” எனக் கூறியுள்ளார். “அடக்குமுறைகளுக்கு திமுக அடிபணியாது” கனிமொழி விடுத்துள்ள அறிக்கையில், “ முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான…
தமிழக அரசியலில் ஒவ்வொரு முதல்வரையும் சுற்றி அதிகாரம் செலுத்தும் ஒரு ஆலோசகர்கள் வட்டம் (Inner Circle) இருப்பது புதிய விஷயமல்ல. முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் என அனைவரின் ஆட்சிக் காலங்களிலும், அதிகாரப்பூர்வ பதவியில் இல்லாத நெருக்கமான ஆலோசகர்கள் அரசின் செயல்பாடுகளில் செல்வாக்கு செலுத்தியதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆனால், தற்போதைய முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது எழுந்துள்ள அதிகார மைய சர்ச்சை புதிய வகையில் வெடித்துக் கிளம்பியுள்ளது. முதல்வரின் நெருங்கிய ஆலோசகர்களாகக் கருதப்படும் சிலர் அமைச்சரவை கூட்டங்கள், உயர்மட்ட ஆய்வுக் கூட்டங்கள் உள்ளிட்ட ரகசிய அரசு ஆலோசனைகளில் பங்கேற்றதாக சொல்லப்படுவதுதான் பிரச்சனையை தீவிரமாக்கி உள்ளது. ஜான் ஆரோக்கியசாமி இந்த விவகாரத்தை முதலில் பொதுவெளியில் எழுப்பியது திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன். அரசு ஊழியர்கள் அல்லாத ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் எந்த அதிகாரத்தின் அடிப்படையில்…
வைகை ஆற்றில் சீரமைப்புப் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படாவிட்டால் ஆளுநர் மாளிகையே நேரடியாக களத்தில் இறங்கும் என்று தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் கூறியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” தமிழக ஆளுநர் வைகை ஆற்றைக் கடக்கும்போது, ஆற்றில் நீர் இல்லாததைக் கண்டு வேதனையுற்று, ’உடனடியாகச் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளாவிட்டால், ஆளுநர் மாளிகையே நேரடியாக களத்தில் இறங்கும்’ என்று கூறியுள்ளார். ஆளுநர் அவர்களே, கடந்த வாரம் தமிழகச் சட்டமன்றத்தில் உரையாற்றச் சென்றபோது, கூவம் ஆற்றைக் கடந்துதானே சென்றீர்கள்? அங்கே ஆற்று நீர் தெள்ளத்தெளிவாகவா ஓடிக்கொண்டிருந்தது? அங்கு ஆளுநர் மாளிகை களத்தில் இறங்க வேண்டிய தேவை ஏதும் ஏற்படவில்லையா? ஆளுநர் மாளிகை நேரடியாகத் தலையிடும் என்று நீங்கள் கூறுவதன் நோக்கம் பிரச்சனையை தீர்ப்பதற்கல்ல, மாறாக ஓர் இணையாட்சி நிர்வாகத்தை உருவாக்கவே. ஆளுநர்களின் அரசியல் நோக்கங்களை…