Author: Editor web2
கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் தாமதம் மற்றும் முறைகேடுகள் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டி, தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனுபவமற்றவர்கள் ஒன்று கூடி மடம் கட்டுவது போல தவெக அரசு செயல்படுவதாகவும், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்று தெரியாமல் ஆட்சி தடுமாறுவதாகவும், ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கும் விந்தையான தவெக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். கடந்த திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் பதவி விலகிய நிலையில், புதிய நியமனங்கள் இன்னும் முழுமையாக நடைபெறவில்லை என்றும், இதனால் கீழமை நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அரசு வழக்கறிஞர் நியமனங்களுக்கு பல லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருப்பதாகவும், இதுகுறித்து தவெக-வைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரே நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளதாகவும்…
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்காக கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்டிருந்த முக்கியமான 5 டெண்டர்களை தமிழக போக்குவரத்துத் துறை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை போக்குவரத்துத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரத்து செய்யப்பட்ட டெண்டர்களில், அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்காக 60 ஆயிரம் பேருந்து டயர்கள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர், மினி பேருந்துகளுக்கான அடிச்சட்டம் (Chassis) வாங்கும் டெண்டர், அனைத்து அரசுப் பேருந்துகளிலும் வாகனத்தின் இருப்பிடத்தை அறிய உதவும் Vehicle Location Tracking Device (VLTD) கருவிகள் மற்றும் அவசரகால எச்சரிக்கை பொத்தான்கள் (Emergency Buttons) பொருத்துவதற்கான டெண்டர், மினி பேருந்துகளுக்கு புதிய பேருந்து கூடு (Bus Body) கட்டும் டெண்டர் உள்ளிட்டவை அடங்கும். மொத்தம் ஐந்து டெண்டர்களையும் ரத்து செய்து போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த டெண்டர்கள் ஏன் ரத்து செய்யப்பட்டன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக விரிவான விளக்கம் வெளியாகவில்லை. இருப்பினும், டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லாததே டெண்டர்…
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி 59,724 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி. செந்தில்குமார் 57,453 வாக்குகள் பெற்ற நிலையில், 2,271 வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த வெற்றியை எதிர்த்து, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் கே. பிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மற்றும் அவர் தொடர்புடைய குற்ற வழக்குகள் குறித்த முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும், அரசு நிலம் வாங்கியது…
கிரிக்கெட் உலகில் எத்தனையோ ஜாம்பவான்கள் தோன்றியிருக்கிறார்கள். ஆனால், தங்கள் மாநிலத்தைச் சேராத ஒரு வீரரை, அந்த மாநிலமே தங்களின் சொந்தப் பிள்ளையாக, குடும்பத்தில் ஒருவராகக் கொண்டாடுகிறது என்றால் அது மகேந்திர சிங் தோனிக்கு மட்டுமே சாத்தியம். ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் பிறந்து, ஒட்டுமொத்த இந்தியாவின் கேப்டனாக உயர்ந்த தோனி, இன்று தமிழ்நாட்டின் தத்தெடுக்கப்பட்ட செல்லப் பிள்ளையாக, ரசிகர்களால் ‘தல’ என்று அன்போடு அழைக்கப்படுகிறார். எல்லையற்ற திறமையும் இமாலய சாதனைகளும் எம்.எஸ். தோனியின் திறமை என்பது வெறும் பேட்டிங் அல்லது விக்கெட் கீப்பிங்குடன் முடிந்துவிடுவதல்ல. அது அவரது அசாத்தியமான ‘கிரிக்கெட் மூளை’ மற்றும் இக்கட்டான சூழ்நிலைகளிலும் பதற்றமடையாத ‘கேப்டன் கூல்’ (Captain Cool) பண்பில் அடங்கியுள்ளது. விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்வதிலும், போட்டியின் கடைசி ஓவர்களில் இமாலய சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ஆட்டத்தை முடிப்பதிலும் (Finisher) அவர் ஒரு தனி அகராதி. சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசியின் (ICC) மூன்று முக்கிய கோப்பைகளையும்…
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, 100 நாள் வேலைத் திட்டத்தில் (MGNREGS) பணியாற்றும் பெண்களை, தாம் கூறும் நபர்களுக்கு வேலை வழங்க வேண்டும் எனக் கூறி, கத்தி காட்டி மிரட்டியதாக தமிழக வெற்றி கழக (தவெக) நிர்வாகி ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஓமலூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி ஏரியில், இன்று 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பெண்கள் தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சக்தி என்ற தமிழக வெற்றி கழக நிர்வாகி அங்கு வந்து, தாம் பரிந்துரைக்கும் நபர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்கப்படாவிட்டால் யாரும் வேலை செய்யக் கூடாது என்றும் கூறி, கத்தியை காட்டி பெண்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் செல்போனில் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வீடியோவில், சம்பவ இடத்தில் வாக்குவாதம் நடைபெறும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, சம்பவம்…
தற்போது வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தும் அனைவரும் தங்களது மொபைல் எண்ணை பகிர்ந்தே தொடர்புகொள்ள வேண்டியுள்ளது. ஆனால், வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய ‘Username’ வசதி அமலுக்கு வந்தால், மொபைல் எண்ணை பகிராமல் பயனர்பெயர் மூலமாகவே தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். இந்த அம்சம் இணைய மோசடி, ஆள்மாறாட்டம், ஃபிஷிங், டிஜிட்டல் கைது (Digital Arrest) போன்ற சைபர் குற்றங்களை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தில், கடந்த வாரம் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மெட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த அம்சத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கும் விளக்கம் கேட்கப்பட்டது. முதலில் கடந்த வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதல் அவகாசம் கோரிய வாட்ஸ்அப்புக்கு தற்போது மேலும் மூன்று நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மெட்டா நிறுவன அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.…
தனியார் பள்ளிகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்த கருத்துக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனியார் பள்ளிகளுக்கான உரிமங்களை ஜூலை மாதம் முதல் 100 சதவீதம் ஆன்லைன் மூலம் பெறலாம் என்றும், தனியார் பள்ளிகளை நடத்துவது இலாபக் கணக்கு அல்ல; புண்ணியக் கணக்கு என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கூறியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும், “தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனியார் பள்ளிகளுக்குத்தான் அமைச்சரா, அல்லது அரசுப் பள்ளிகளுக்கும் அமைச்சரா?” என்று கேள்வி எழுப்பியுள்ள சீமான், தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை கட்டுப்படுத்தவும், ஏழை மற்றும் நடுத்தர வர்க்க பெற்றோருக்கு நிவாரணம் அளிக்கவும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விமர்சித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளில் மேற்கூரை சேதம், கழிப்பறை, குடிநீர், பாதுகாப்புச் சுவர், ஆய்வகம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்…
கோவை மாவட்டம் துடியலூர் அருகே நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருட முயன்ற வடமாநில வாலிபர், இளைஞர்களிடம் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நரசிம்மநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் ஆண்கள் விடுதியில் வேலைக்குச் செல்லும் மற்றும் கல்லூரியில் பயிலும் ஏராளமான இளைஞர்கள் தங்கி வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில், அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விடுதியின் முன்புறத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருட முயன்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் முயன்றும் பைக்கை திருட முடியாததால், அந்த நபர் விடுதிக்குள் நுழைந்து அங்கு இருந்த மொபைல் போன்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை திருட முயன்றுள்ளார். அந்த நேரத்தில் இரவு பணியை முடித்து விடுதிக்கு திரும்பிய இரண்டு இளைஞர்கள், சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர். தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதை…
கேரள வனத்துறையின் பொதுமன்னிப்பு (Amnesty) திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத வனவிலங்கு பொருட்களை வைத்திருப்பவர்கள் அவற்றை அறிவித்து சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்கலாம் என அறிவிக்கப்பட்டிரு. இந்தத் திட்டத்தின் கீழ் மோகன்லால் புதிய அறிவிப்பை சமர்ப்பித்துள்ளார். ஏற்கெனவே தன்னிடம் 4 யானைத் தந்தங்கள் இருப்பதாக அறிவித்திருந்த மோகன்லால், தற்போது மேலும் 6 தந்தங்களை சேர்த்து மொத்தம் 10 தந்தங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீராமர், திருப்பதி பாலாஜி உள்ளிட்ட 13 தந்தச் சிலைகள் இருப்பதாகவும், அவற்றின் மொத்த எடை சுமார் 46 கிலோ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தந்தங்களில் பெரும்பாலானவை பாரம்பரியமாக குடும்பத்திலிருந்து கிடைத்தவை அல்லது பரிசாக பெற்றவை என மோகன்லால் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில், தந்தங்கள் மற்றும் தந்தச் சிலைகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள கேரள வனத்துறை முடிவு செய்துள்ளது. இந்த வழக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் மோகன்லாலின் வீடுகளில் நடத்திய சோதனையில்…
நடிகர் கமல்ஹாசன் நடத்தி வரும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தை குறிவைத்து ரூ.38.5 லட்சம் மோசடி செய்ய முயன்ற சைபர் குற்றக் கும்பல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது அந்நிறுவனம் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் தர்மன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் சேயோன் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. கடந்த ஜூலை 2-ஆம் தேதி, முரளி கிருஷ்ணனின் செல்போன் எண் மர்ம நபர்களால் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், புதிய மொபைல் எண்ணிலிருந்து வாட்ஸ்அப் மூலம் அவரை தொடர்புகொண்ட மோசடி கும்பல், நிறுவன தயாரிப்பாளர் ஒருவரின் வாட்ஸ்அப் முகப்புப் படத்தை (DP) பயன்படுத்தி, அவரைப் போலவே பேசி நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. அவசர தேவைக்காக ரூ.38 லட்சத்து 50 ஆயிரத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு உடனடியாக அனுப்புமாறு அவர்கள்…