Close Menu
    What's Hot

    தோனிக்கு வாழ்த்து மழை; ‘சாதனைகளைத் தாண்டிய மரபை உருவாக்கியவர்’ என ரெய்னா புகழாரம்

    ”அழகு மயில் ஆட…” – ஏகாம்பரநாதர் கோவிலில் நடனமாடிய வீடியோவால் சர்ச்சை!

    பாருயிபூர் சிறுமி பாலியல் வன்கொடுமை – கொலை வழக்கு: மம்தா பானர்ஜியின் பேரணிக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»”அரசு வழக்கறிஞர்கள் இல்லாமல் தடுமாறும் நீதிமன்ற விசாரணைகள்” – தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்
    தமிழ்நாடு

    ”அரசு வழக்கறிஞர்கள் இல்லாமல் தடுமாறும் நீதிமன்ற விசாரணைகள்” – தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

    Editor web2By Editor web2July 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    EPS
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் தாமதம் மற்றும் முறைகேடுகள் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டி, தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனுபவமற்றவர்கள் ஒன்று கூடி மடம் கட்டுவது போல தவெக அரசு செயல்படுவதாகவும், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்று தெரியாமல் ஆட்சி தடுமாறுவதாகவும், ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கும் விந்தையான தவெக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

    கடந்த திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் பதவி விலகிய நிலையில், புதிய நியமனங்கள் இன்னும் முழுமையாக நடைபெறவில்லை என்றும், இதனால் கீழமை நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    மேலும், அரசு வழக்கறிஞர் நியமனங்களுக்கு பல லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருப்பதாகவும், இதுகுறித்து தவெக-வைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரே நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    சாட்சிகளிடம் அரசு தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்படாததால் வழக்குகள் ஒத்திவைக்கப்படும் நிலை உருவாகியிருப்பதாகவும், இதனால் பொதுமக்கள் கூடுதல் செலவுகளையும் சிரமங்களையும் சந்திக்க நேரிடும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    “சாதாரண மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்கள்தான். எனவே, அனுபவமிக்க மற்றும் திறமையான அரசு வழக்கறிஞர்களை உடனடியாக நியமித்து, நீதி நிர்வாகத்தை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    அதேவேளையில், “சிறு குழந்தைகள் மணலில் கோபுரம் கட்டி விளையாடுவது போல் அரசு நிர்வாகத்தை கையாளக் கூடாது. மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் அரசு பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

    AIADMK EdappadiPalaniswami GovernmentPleaders TamilNaduPolitics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகத்தை கத்தையாகப் பணம்; செந்தில்பாலாஜிக்கு அறிமுகமான நரேஷ் வீட்டில் போலீசார் பறிமுதல்
    Next Article பாருயிபூர் சிறுமி பாலியல் வன்கொடுமை – கொலை வழக்கு: மம்தா பானர்ஜியின் பேரணிக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி
    Editor web2
    • Website

    Related Posts

    தோனிக்கு வாழ்த்து மழை; ‘சாதனைகளைத் தாண்டிய மரபை உருவாக்கியவர்’ என ரெய்னா புகழாரம்

    July 7, 2026

    ”அழகு மயில் ஆட…” – ஏகாம்பரநாதர் கோவிலில் நடனமாடிய வீடியோவால் சர்ச்சை!

    July 7, 2026

    பாருயிபூர் சிறுமி பாலியல் வன்கொடுமை – கொலை வழக்கு: மம்தா பானர்ஜியின் பேரணிக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தோனிக்கு வாழ்த்து மழை; ‘சாதனைகளைத் தாண்டிய மரபை உருவாக்கியவர்’ என ரெய்னா புகழாரம்

    ”அழகு மயில் ஆட…” – ஏகாம்பரநாதர் கோவிலில் நடனமாடிய வீடியோவால் சர்ச்சை!

    பாருயிபூர் சிறுமி பாலியல் வன்கொடுமை – கொலை வழக்கு: மம்தா பானர்ஜியின் பேரணிக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி

    ”அரசு வழக்கறிஞர்கள் இல்லாமல் தடுமாறும் நீதிமன்ற விசாரணைகள்” – தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

    கத்தை கத்தையாகப் பணம்; செந்தில்பாலாஜிக்கு அறிமுகமான நரேஷ் வீட்டில் போலீசார் பறிமுதல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.