Close Menu
    What's Hot

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரானார் இயக்குநர் சேரன்.

    பிரசவ அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த பெண் … சடலத்தை விட்டுவிட்டு ஓடிய மருத்துவர்கள்

    முதலமைச்சர் விஜய்க்கு தெளிவான அரசியல் பார்வை வேண்டும்… சொல்கிறார் முன்னாள் அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பாருயிபூர் சிறுமி பாலியல் வன்கொடுமை – கொலை வழக்கு: மம்தா பானர்ஜியின் பேரணிக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி
    Featured

    பாருயிபூர் சிறுமி பாலியல் வன்கொடுமை – கொலை வழக்கு: மம்தா பானர்ஜியின் பேரணிக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி

    Editor TN TalksBy Editor TN TalksJuly 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    019 mamtha
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     

    மேற்கு வங்க மாநிலம் பாருயிபூரில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, ஜூலை 8-ஆம் தேதி நடைபெறவுள்ள முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பேரணிக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

    இந்த தகவலை திரிணாமுல் காங்கிரஸ் (TMC) எம்.பி. மற்றும் வழக்கறிஞர் கல்யாண் பானர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    அவர் கூறுகையில், திரிணாமுல் இளைஞர் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் சத்ர பரிஷத் (மாணவர் அமைப்பு) சார்பில் பாலிகஞ்ச் பாரி (Ballygunge Phari) முதல் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி சாலை சந்திப்பு வரை மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை பேரணி நடைபெற நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக கூறினார்.

    மேலும், “சனி, ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர மற்ற நாட்களில் கொல்கத்தாவில் பேரணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என மாநில அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதற்கான கொள்கையை அரசு வெளியிடட்டும்; அதை நாங்கள் நீதிமன்றத்தில் சவால் செய்வோம். மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை திங்கள் முதல் வெள்ளி வரை இடைநிறுத்த முடியாது” என்று அவர் தெரிவித்தார்.

    கடந்த இரண்டு மாதங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 10 ஆயிரம் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், காவல்துறையினர் தினமும் நடவடிக்கை எடுத்து கட்சித் தொண்டர்கள் வெளியே வர முடியாத சூழலை உருவாக்கி வருவதாகவும் கல்யாண் பானர்ஜி குற்றம்சாட்டினார்.

    “இந்த நிலைக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தினந்தோறும் இவ்வாறு செயல்பட முடியாது” என்றும் அவர் கூறினார்.

    Baruipur case Calcutta High Court Mamata Banerjee protest rally rape and murder case
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”அரசு வழக்கறிஞர்கள் இல்லாமல் தடுமாறும் நீதிமன்ற விசாரணைகள்” – தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்
    Next Article ”அழகு மயில் ஆட…” – ஏகாம்பரநாதர் கோவிலில் நடனமாடிய வீடியோவால் சர்ச்சை!
    Editor TN Talks

    Related Posts

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரானார் இயக்குநர் சேரன்.

    July 19, 2026

    பிரசவ அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த பெண் … சடலத்தை விட்டுவிட்டு ஓடிய மருத்துவர்கள்

    July 19, 2026

    முதலமைச்சர் விஜய்க்கு தெளிவான அரசியல் பார்வை வேண்டும்… சொல்கிறார் முன்னாள் அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரானார் இயக்குநர் சேரன்.

    பிரசவ அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த பெண் … சடலத்தை விட்டுவிட்டு ஓடிய மருத்துவர்கள்

    முதலமைச்சர் விஜய்க்கு தெளிவான அரசியல் பார்வை வேண்டும்… சொல்கிறார் முன்னாள் அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி

    திமுகவில் பெரும் தலைமை மாற்றம்.. உதயநிதியிடம் முழு அதிகாரம்? தேசிய அரசியலுக்கு நகரும் ஸ்டாலின்?

    தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு நன்மையே – வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கணிப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.