Close Menu
    What's Hot

    செந்தில்பாலாஜி சகோதரரின் முன்ஜாமீன் மனு ; வேறு நீதிபதிக்கு விசாரணையை மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு

    அடுத்த 10 ஆண்டுகளில் நீர் மேலாண்மைக்காக ரூ.1 லட்சம் கோடி அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

    கோவையில் பைக் திருட முயன்ற வடமாநில வாலிபர்.. கையும் களவுமாக சிக்கி கதறல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மோகன்லாலிடம் 10 யானைத் தந்தங்கள், 13 தந்தச் சிலைகள்
    Featured

    மோகன்லாலிடம் 10 யானைத் தந்தங்கள், 13 தந்தச் சிலைகள்

    Editor web2By Editor web2July 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Mohanlal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கேரள வனத்துறையின் பொதுமன்னிப்பு (Amnesty) திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத வனவிலங்கு பொருட்களை வைத்திருப்பவர்கள் அவற்றை அறிவித்து சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்கலாம் என அறிவிக்கப்பட்டிரு. இந்தத் திட்டத்தின் கீழ்  மோகன்லால் புதிய அறிவிப்பை சமர்ப்பித்துள்ளார்.

    ஏற்கெனவே தன்னிடம் 4 யானைத் தந்தங்கள் இருப்பதாக அறிவித்திருந்த மோகன்லால், தற்போது மேலும் 6 தந்தங்களை சேர்த்து மொத்தம் 10 தந்தங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீராமர், திருப்பதி பாலாஜி உள்ளிட்ட 13 தந்தச் சிலைகள் இருப்பதாகவும், அவற்றின் மொத்த எடை சுமார் 46 கிலோ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த தந்தங்களில் பெரும்பாலானவை பாரம்பரியமாக குடும்பத்திலிருந்து கிடைத்தவை அல்லது பரிசாக பெற்றவை என மோகன்லால் விளக்கம் அளித்துள்ளார்.

    இந்நிலையில், தந்தங்கள் மற்றும் தந்தச் சிலைகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள கேரள வனத்துறை முடிவு செய்துள்ளது. இந்த வழக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் மோகன்லாலின் வீடுகளில் நடத்திய சோதனையில் யானைத் தந்தங்கள் மற்றும் தந்தச் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தொடங்கப்பட்டது. உரிய அனுமதியின்றி இரண்டு ஜோடி யானைத் தந்தங்களை வைத்திருந்ததாக வனத்துறை வழக்குப் பதிவு செய்தது.

    பின்னர், இந்த வழக்கை திரும்பப் பெற கேரள அரசு முயன்றாலும், விசாரணை நீதிமன்றம் அதை நிராகரித்தது. அந்த முடிவை கேரள உயர்நீதிமன்றமும் உறுதி செய்து, மோகன்லால் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், கடந்த ஆண்டு அவரது வசமிருந்த தந்தப் பொருட்களுக்கான உரிமைச் சான்றிதழ்களையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

    Ivory KeralaForestDepartment mohanlal WildlifeCase
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய் அரசை கவிழ்க்க திமுக சதி ; நாங்கள் காவல் அரணாக இருப்போம் – வைகோ
    Next Article டி20 உலகக் கோப்பை சாம்பியன்;  ஆஸ்திரேலியாவுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து
    Editor web2
    • Website

    Related Posts

    செந்தில்பாலாஜி சகோதரரின் முன்ஜாமீன் மனு ; வேறு நீதிபதிக்கு விசாரணையை மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு

    July 6, 2026

    அடுத்த 10 ஆண்டுகளில் நீர் மேலாண்மைக்காக ரூ.1 லட்சம் கோடி அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

    July 6, 2026

    கோவையில் பைக் திருட முயன்ற வடமாநில வாலிபர்.. கையும் களவுமாக சிக்கி கதறல்!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    செந்தில்பாலாஜி சகோதரரின் முன்ஜாமீன் மனு ; வேறு நீதிபதிக்கு விசாரணையை மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு

    அடுத்த 10 ஆண்டுகளில் நீர் மேலாண்மைக்காக ரூ.1 லட்சம் கோடி அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

    கோவையில் பைக் திருட முயன்ற வடமாநில வாலிபர்.. கையும் களவுமாக சிக்கி கதறல்!

    ஜம்மு – காஷ்மீரில் பெரும் நிலச்சரிவு!. மண்ணுக்குள் புதைந்த வாகனங்கள்!

    வண்டலூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!. பெரும் விபத்து தவிர்ப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.