Close Menu
    What's Hot

    மு.க.ஸ்டாலின் பெயர்தாங்கிய கல்வெட்டு அகற்றம்;  திமுக போராட்டம் அறிவிப்பு  

    “அரசுப் பள்ளிகளை புறக்கணிப்பது ஏன்?” – அமைச்சர் ராஜ்மோகனுக்கு சீமான் கேள்வி 

    கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணி; முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆய்வு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»செந்தில்பாலாஜி சகோதரரின் முன்ஜாமீன் மனு ; வேறு நீதிபதிக்கு விசாரணையை மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு
    Featured

    செந்தில்பாலாஜி சகோதரரின் முன்ஜாமீன் மனு ; வேறு நீதிபதிக்கு விசாரணையை மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    011 senthil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    த.வெ.க எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேச்சு குறித்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு, எம். பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர இருப்பதாகவும்,  ஆளும் தவெக கட்சியின் உறுப்பினராக இருந்தாலும் அத்தீர்மானத்தின்  மீதான வாக்கெடுப்பின்போது தாங்கள் சொல்லும் படி நடந்து கொண்டால்  சன்மானமாக  35 கோடி ரூபாய் வரை தருவதாக பேரம் பேசியதாக,  ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என். இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார்,  சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த யூ-டியூபர் திருநாவுக்கரசு,  திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜின் சகோதரர் அசோக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

    அந்த மனுவில், தவெக எம்.எல்.ஏ.வை தொடர்பு கொண்டு பேசியதாகவோ, பேரம் பேசியதாகவோ, மிரட்டல் விடுத்ததாகவோ முதல் தகவல் அறிக்கையில் தனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லை. முன்னாள் அமைச்சரின் சகோதரர் என்ற காரணத்துக்காக அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த புகாரில் கூறப்பட்டுள்ள குற்றத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்த மனு, நீதிபதி சி.குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் எம்.எல்.ஏ.-வும் சம்பந்தப்பட்டு இருப்பதால், மனுவை எம்.பி. எம்.எம்.ஏ-க்கள் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் அமர்வில் பட்டியலிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையேற்றுக்கொண்ட நீதிபதி குமரப்பன், சம்பந்தப்பட்ட நீதிபதி முன் பட்டியலிட உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    அதன்படி, எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்படும்.

    anticipatory bail Chennai High Court Madras High Court Senthil Balaji Senthil Balaji brother
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅடுத்த 10 ஆண்டுகளில் நீர் மேலாண்மைக்காக ரூ.1 லட்சம் கோடி அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
    Next Article குதிரை பேர அரசியலில் தவெக அரசு சிறப்பாக செயல்படுகிறது – வானதி சீனிவாசன் விமர்சனம்
    Editor TN Talks

    Related Posts

    மு.க.ஸ்டாலின் பெயர்தாங்கிய கல்வெட்டு அகற்றம்;  திமுக போராட்டம் அறிவிப்பு  

    July 6, 2026

    “அரசுப் பள்ளிகளை புறக்கணிப்பது ஏன்?” – அமைச்சர் ராஜ்மோகனுக்கு சீமான் கேள்வி 

    July 6, 2026

    கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணி; முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆய்வு!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மு.க.ஸ்டாலின் பெயர்தாங்கிய கல்வெட்டு அகற்றம்;  திமுக போராட்டம் அறிவிப்பு  

    “அரசுப் பள்ளிகளை புறக்கணிப்பது ஏன்?” – அமைச்சர் ராஜ்மோகனுக்கு சீமான் கேள்வி 

    கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணி; முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆய்வு!

    2,000 ஆண்டுகளுக்கு முந்தைய புதையல்!. தாய்லாந்தில் கிடைத்த வரலாற்று சான்றுகள்!

    குதிரை பேர அரசியலில் தவெக அரசு சிறப்பாக செயல்படுகிறது – வானதி சீனிவாசன் விமர்சனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.