Author: Editor web2
ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதியன்று காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் குறுவைப் பருவ நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது மரபு. ஆனால், மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டிய நாளான இன்று, போதிய நீர் இல்லை என்பதால் அணை திறக்கப்படவில்லை. இந்த நிலையில், தண்ணீருக்கு முறையான வழி செய்யாமல், “ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல” வெறும் குறுவை சிறப்புத் தொகுப்பை மட்டும் அறிவிக்கும் இந்த ரீல்ஸ் ஆட்சியின் முதல்வர், தற்போது தனது சொந்த வேண்டுதலுக்காகக் கர்நாடகா மாநிலத்திற்குச் சென்றுள்ளார் என்று திமுக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று ஜூன் 12. கடந்த ஐந்தாண்டுகளில் இதே நாளில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் குறுவைப் பருவ நெல் சாகுபடிக்காக திராவிட மாடல் அரசின் முதலமைச்சராக இருந்த கழகத் தலைவர் முன்னின்று, மேட்டூர் அணையைத் திறந்து வைப்பது வழக்கம். அதற்கு முன்பாகவே ஆறுகள், வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு,…
தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டுக்கான குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் “குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் – 2026” செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு மானியங்கள் மற்றும் சலுகைகள் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளன. வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்ததாலும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் போதுமான அளவில் இல்லாததாலும், குறுவை சாகுபடியில் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் இந்த சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டெல்டா மாவட்டங்களில் வடிகால் குழாய் கிணறுகள் மூலம் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்காக ரூ.77.50 கோடியும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்காக ரூ.57.33 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் சுமார் 52.72 டி.எம்.சி. தண்ணீர் சேமிப்பு இருப்பதாகவும், காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், தான் ஏற்கெனவே வகித்து வந்த மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால், தமிழகத்தில் அந்த ஒரு இடத்துக்கான இடைத்தேர்தல் ஜூன் 18-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் பிரதிநிதித்துவ அடிப்படையில் அதிக எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட தவெகவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி ஒதுக்கப்பட வாய்ப்பு இருந்தது. ஆனால், கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு மாநிலங்களவை எம்.பி. இடத்தை ஒதுக்குவதாக தவெக தலைவரும், முதல்வருமான விஜய் அறிவித்தார். இதையடுத்து, மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்டப்பேரவைச் செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,”தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் சி.வி.சண்முகம் தனது உறுப்பினர்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய ஒரு புதிய பரிணாமத்தை நோக்கி மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் தந்த அதிர்வலைகளும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) புதிய ஆட்சி அமைப்பும் முந்தைய அரசியல் கூட்டணிகளைப் புரட்டிப்போட்டுள்ளன. இந்த அரசியல் புயலின் மையப்புள்ளியாக இப்போது இருப்பது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் அசைக்க முடியாத தேர்தல் கூட்டணியாகத் திகழ்ந்த இந்த அணியிலிருந்து, தற்போது இடதுசாரித் தோழமைகளும் விடைபெறத் தொடங்கியிருப்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களின் தற்போதைய அறிவிப்புகள், திமுகவின் மிக முக்கியமான வாக்கு வங்கியிலும், அரசியல் அரணிலும் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளதை உறுதி செய்கின்றன. தமிழக தேர்தல் அரசியலில் கொள்கைப் பிடிப்பு மற்றும் அடிமட்டத் தொண்டர்களின் வாக்கு பலத்திற்கு எப்போதும்…
தமிழக பள்ளிகளில் மாணவர்களின் உடற்திறன் மற்றும் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில், உடற்கல்வி நேரத்தை (PT Period) எந்த காரணத்திற்காகவும் ரத்து செய்யக்கூடாது என்று பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளார். கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு விளையாட்டும் உடற்கல்வியும் அவசியம் என்பதால், பள்ளிகளில் வாரத்திற்கு ஒதுக்கப்படும் பாடவேளைகளில் குறைந்தது 8 பீரியட்கள் உடற்கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்றார். “எந்தவொரு பள்ளியிலும் பிடி பீரியட் இனி ரத்து செய்யப்படக் கூடாது” என்று உத்தரவிட்டுள்ள அமைச்சர், ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவர்கள் சாதனை படைப்பதே அரசின் நீண்டகால இலக்கு எனக் குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் சட்டச் சிக்கல்கள் இன்றி விரைவில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.…
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இது தொடர்பாக முதலமைச்சர் விஜய்க்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்ரீவைகுண்டம் தவெக MLA சரவணன் ஆதரவில் ,இந்த கொடூரத்தை ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர் அரங்கேற்றியுள்ளதாக தெரிகிறது. மேலும், இதனை மறைக்க, தவெக MLA சரவணனே அந்த பெண்ணிடம் “அமைச்சரிடம் பேசி வேலை வாங்கித் தருவதாக” சமரசம் பேசியதாக செய்திகள் வருகிறது. சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா? அதுவும், ஒரு ஆளுங்கட்சி MLA இப்படி கேடுகெட்டத்தனமான செயலுக்கு சமரசம் பேசுவதை இன்றைய முதல்வர் ஏற்றுக்கொள்கிறாரா? உங்களை திரையில் ரசித்து வளர்ந்த பெண்ணுக்கு, உங்கள் ஆட்சியில், உங்கள் கட்சியினரால் நடைபெற்றுள்ள இந்த கொடுமைக்கு பதில் சொல்ல…
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கும் சூழலில், அவர்களுக்கு பரோல் வழங்குவதற்கான அதிகாரம் யாருக்கு உள்ளது என்ற முக்கிய சட்டக் கேள்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் பரிசீலனையில் உள்ளது. குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகளின் மேல்முறையீட்டு மனுக்கள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் போது, அவர்களுக்கு பரோல் வழங்கலாமா என்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் வெவ்வேறு அமர்வுகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளன. இதனால் இந்த விவகாரம் சட்டரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒரு அமர்வு, மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்தாலும் பரோல் வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறிய நிலையில், மற்றொரு அமர்வு அதற்கு மாறான கருத்தை பதிவு செய்தது. இந்த முரண்பட்ட தீர்ப்புகளால் ஏற்பட்ட சட்டத் தெளிவின்மையை நீக்குவதற்காக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது.…
ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு தவெகவினரால் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளதாக கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், Reels எடுத்து Post செய்ய தான் ‘சிங்கப்பெண்’ பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா எனக் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,”உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?” என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி. எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார். ஆளுங்கட்சியில் “யார் அந்த மேலிடம்” என்று மக்கள் கேட்கின்றனர். அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித்…
இயக்குநர் பாரதிராஜாவின் உடல், அவரது விருப்பப்படி அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் கிராமிய மண்வாசனையை உலக அரங்கில் கொண்டு சென்ற இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவையடுத்து அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மலேசியாவில் இருந்த அவரது மகள் ஜனனி சென்னை வந்து சேர்ந்துள்ளார். குடும்பத்தினருடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு, பாரதிராஜாவின் நீண்டநாள் விருப்பப்படி அவரது சொந்த ஊரிலேயே உடலை நல்லடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதன்படி, இயக்குநர் பாரதிராஜாவின் உடல் இன்று மாலை 7 மணி வரை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதன் பின்னர் அவரது உடல் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள காட்ரோடு பகுதியில் அமைந்துள்ள அவரது…
இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய படைப்பாளியாகவும், படைப்பாளிகளின் உரிமைக்காக போராடிய முன்னோடியாகவும் பாரதிராஜாவை நினைவுகூர்ந்துள்ளதோடு, “காலத்தால் அழியாத காவிய நாயகன்” எனவும் புகழஞ்சலி செலுத்தி உள்ளது. இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் ,”இன்னும் ஆயிரமாண்டுகள் கழித்து தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதினாலும், அதில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய முதன்மைப் பெயர் — இயக்குநர் இமயம் பாரதிராஜா! மிகைப்படுத்தப்பட்ட கதைகளும், செயற்கையான ஒப்பனைகளும், மினுமினுக்கும் பட்டாடைகளும் உலா வந்த கற்பனைத் உலகிற்குள் தமிழ் சினிமா புதைந்து கிடந்தபோது, அதை மீட்டெடுத்த தீர்க்கதரிசி அவர். அவரது வருகைக்குப் பின், அந்தப் போலிப் பிம்பங்கள் யாவும் கனவாய் மறைந்தன. எண்ணெய் கசியும் எதார்த்த முகங்கள், வண்ணமிழந்த பஞ்சுப் புடவையில் சுற்றித்திரிந்த எளிய கிராமத்துப் பெண்கள், திறந்த மார்போடு உழைக்கும் மனிதர்கள், நாவில் உண்மையும் கேட்டறியா வட்டார வழக்குகளும் எனத்…