Author: Editor web2

தனது தந்தை இயக்குநர் பாக்யராஜ் மறைவையொட்டி முதல்வர் ஜோசப் விஜய் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்ததற்காக, நடிகர்  சாந்தனு உருக்கமான பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், தனது திருமணத்திற்காக தாலி வழங்கி வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய், தற்போது தந்தையின் மறைவின்போது வீட்டிற்கு நேரில் வந்து ஆறுதல் கூறியதையும் நினைவுகூர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது 247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்? மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது. என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை. அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம்…

Read More

முன்னாள் சென்னை மாநகர காவல்துறை ஆணையரும், தற்போதைய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) இயக்குநருமான அருண் ஐபிஎஸ் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில், சென்னை காவல் ஆணையராக இருந்தபோது அருண் ஐபிஎஸ் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பலர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தை பிரயோகித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், குண்டர் தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாக அருண் ஐபிஎஸ் மீது சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே கடுமையான கருத்துகளை பதிவு செய்திருந்த போதிலும், தமிழக அரசு அவர் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காமல், மாறாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் இயக்குநராக நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உயர்நீதிமன்றத்தின் முந்தைய கருத்துகளின் அடிப்படையில் அருண் ஐபிஎஸ் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில்…

Read More

சென்னையில் திமுக மாணவரணி சார்பில் திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், புரசைவாக்கத்தில் முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, அமைச்சர் கில்லி சரத் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திமுக மாணவரணி செயலாளர் வீரமணி ஜெயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, அமைச்சர் கில்லி சரத் தொடர்பான விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக மாணவரணி சார்பில் எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியிருந்ததாகவும், ஆனால் காவல்துறை அனுமதி மறுத்ததாகவும் தெரிவித்தார். மேலும், “தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவா திமுக போராட்டத்தில் ஈடுபடுகிறது? மக்களின் நியாயமான கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது” என்று அவர் கூறினார். “இது…

Read More

அமைச்சர் கில்லி சரத் தொடர்பான விவகாரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த விமர்சனங்களுக்கு பதிலளித்து, தவெக ஐடி விங் காரசாரமான அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ”போதைப் பொருள் பயன்படுத்தியது போல்” என்று திமுக கூறுவதை சுட்டிக்காட்டி,“போதைப் பொருள் பயன்படுத்தியது போல்” என்றால் என்ன ‘போல்’ திமுக தலைவர் அவர்களே? அப்படியெனில் அது பொய்யென்று நீங்களும் சொல்ல வருகிறீர்கள்தானே ‘போல்’ கொளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. அவர்களே?. ‘விமர்சித்ததால் கைதா?.’ வேடிக்கையாகப் பேசுவதில் நீங்கள் வல்லவர்தான் ஸ்டாலின் சார். செய்த வினைகளால் சிக்கி வரும் உங்கள் அமைச்சர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் அனைவரையும் விமர்சன வல்லுநர் ‘போல்’ ஆக்குவதில் ஆகச்சிறந்த ‘போல்’ அரசியல்வாதி நீங்கள்தான் ஸ்டாலின் சார். எதிர்க்கட்சிகளை மிரட்டுவதில் வல்லவர் நீங்கள்தான். எதிர்க்கட்சிகளை மட்டுமா?.கூட்டணிக் கட்சிகளையும் கொடியேற்றக்கூட விடாமல் நீங்கள் செய்ததெல்லாம் ‘போல்’ நல்ல அரசியலா ஸ்டாலின் சார்?.எல்லோருக்கும் S.O.P என்றிருந்தபோது எங்கள் வெற்றித் தலைவருக்கு மட்டும் Stalin sir Operating Procedure…

Read More

தமிழகத்தின் பல முக்கிய பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் குறைந்துள்ளதாக வெளியான தகவல்களை சுட்டிக்காட்டி, தமிழக அரசை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவில், தலைநகர் சென்னையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் தினசரி சுமார் 16 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் விநியோகம் தற்போது 13.5 லட்சம் லிட்டராக குறைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். முந்தைய ஸ்டாலின் அரசும், தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசும் ஆட்சிக்கு வந்தவுடன் மக்களின் அடிப்படைத் தேவைகளிலேயே கை வைப்பதாக குற்றம்சாட்டிய அவர், சில வாரங்களுக்கு முன்பு ஆவின் கிரீன் மேஜிக் பால் உற்பத்தி படிப்படியாகக் குறைக்கப்படுவதாக பாஜக சுட்டிக்காட்டியபோது, அரசுக்கு ஆதரவாக பேசியவர்கள் தற்போது என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக அளவில் பால் கொள்முதல் செய்வதற்குப் பதிலாக,…

Read More

2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஏறக்குறைய மூன்று ஆண்டு கால அவகாசம்  இருக்கிறது. இருப்பினும், தேசிய அரசியலில் அடுத்த கட்ட நகர்வுகளுக்கான ஆயத்தத்தை இப்போதே தொடங்கிவிட்டதாக டெல்லி பாஜக வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மாற்றம், விரிவாக்கம் மற்றும் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் பட்டியல் ஆகியவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக வெளியாகலாம் என்ற தகவல்கள் டெல்லி அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளன. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவால் தனிப்பெரும்பான்மையைப் பெற முடியாமல் போனாலும், தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன்  ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. ஆனால் முக்கிய சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு, குறிப்பாக அரசியலமைப்பு திருத்தங்கள் போன்றவற்றுக்கு, இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம். அதனால் கூட்டணியை மேலும் வலுப்படுத்துவது, புதிய அரசியல் கூட்டணிகளை உருவாக்குவது, அமைச்சரவையில் பிராந்திய மற்றும்…

Read More

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான முதற்கட்டப் பணிகள் தலைமைச் செயலகத்தில் விறுவிறுப்படைந்துள்ளன. வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 20 நாட்கள் தொடர் ஆலோசனை பட்ஜெட் தாக்கலையொட்டி தமிழக முதலமைச்சர் விஜய்,  வரும் ஜூலை 2-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை அனைத்துத் துறைகள் குறித்தும் தனித்தனியாக விரிவான ஆய்வுக் கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த உயர்நிலைக் கூட்டங்களில், அந்தந்த துறைகளின் அமைச்சர்கள், அரசுச் செயலாளர்கள் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது. வெற்றி தமிழகம் தொலைநோக்குத் திட்டம்: சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட, அரசின் முதன்மைத் திட்டமான “வெற்றி தமிழகம் தொலைநோக்குத் திட்டம்” குறித்தே இந்த 20…

Read More

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பலூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து, அவர் திருச்சி கிழக்கு தொகுதிப் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, தற்போது அத்தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது அதிமுகவிலிருந்து தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள் சிலரும் தங்கள் எம்.எல்.ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்ததால், அந்த தொகுதிகளும் காலியாக உள்ளதால், அங்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில், அண்மையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான கே.என். நேரு, “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  விரைவில் மீண்டும் சட்டமன்றத்திற்குள் நுழைவார்” என்று அதிரடியாகப் கூறினார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில். மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு  தோல்வியடைந்தது குறித்து, முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் விமர்சித்து பேசி இருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவும், திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும்…

Read More

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் தம்பதியர் தாக்கல் செய்யும் பெற்றோர் உரிமை மனுக்கள் மீது முடிவு எடுக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கு காலக்கெடு விதித்து, சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. நாமக்கல்லைச் சேர்ந்த தம்பதியரின் பெற்றோர் உரிமை மனுவை, குழந்தை பெறும் பெண்ணின் வயது மற்றும் நடைமுறை குறைபாடுகளை காரணம் காட்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஷமீம் அஹமது, அந்த உத்தரவை ரத்து செய்து, மனுவை மீண்டும் பரிசீலித்து 4 வாரங்களில் முடிவு எடுக்க உத்தரவிட்டார். மேலும், தேவையற்ற தொழில்நுட்ப காரணங்களால் குழந்தை பெறும் உரிமையை மறுக்கக் கூடாது என்றும், வாடகைத்தாய் விருப்பத்துடன் செயல்படுகிறாரா, குழந்தை மீது பின்னர் உரிமை கோரமாட்டேன் என்ற உறுதிமொழி பெறப்படுகிறதா, வணிக நோக்கம் இல்லையா, குழந்தையை கைவிடமாட்டோம் என்ற உறுதியை தம்பதியர் அளிக்கிறார்களா என்பவற்றை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் வழிகாட்டுதல்களை…

Read More

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, சென்னையில் இன்று ‘ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs’ போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, அதில் தானும் பங்கேற்றார். சென்னை – காமராஜர் சாலையில் இந்த ஓட்டம் தொடங்கியது. இதில் முதல்வர் விஜய் பங்கேற்றார். அவருடன் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், மரிய வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் அரசு உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், தடகள ஆர்வலர்கள் என பலர் பங்கேற்றனர். இந்த ஓட்டத்தை தொடங்கி வைப்பதற்கு முன்னதாக போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு வாசகத்தை முதல்வர் விஜய் எழுதினர்.  ”ஸ்போர்ட்ஸ எடு… Drugs  ஐ விடு”  என்கிற வாசகத்தை அவர் எழுதினார். தொடர்ந்து போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை இந்த ஓட்டத்தில் பங்கேற்றவர்கள் எடுத்துக் கொண்டனர். அதனை முதல்வர் விஜய் வாசித்தார். “போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன்.…

Read More