Close Menu
    What's Hot

    ராஜினாமா எம்.எல்.ஏக்கள் மீதான தகுதி நீக்க மனுக்களை சபாநாயகர் தொடர்ந்து விசாரிப்பார்; சட்டமன்ற செயலாளர் தகவல்

    முன்னாள் கமிஷனர் அருணுக்கு எதிரான வழக்கு:  நீதிமன்றம் பச்சைக்கொடி?

    அயோத்தி ராமர் கோவில் பண மோசடி வழக்கு!. வாதாடும் வழக்கறிஞர்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»”ஆவின் பால்  உற்பத்தியை முடக்குவதா..?” – நயினார் நாகேந்திரன் கண்டனம்
    தமிழ்நாடு

    ”ஆவின் பால்  உற்பத்தியை முடக்குவதா..?” – நயினார் நாகேந்திரன் கண்டனம்

    Editor web2By Editor web2June 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    aavin milk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தின் பல முக்கிய பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் குறைந்துள்ளதாக வெளியான தகவல்களை சுட்டிக்காட்டி, தமிழக அரசை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவில், தலைநகர் சென்னையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் தினசரி சுமார் 16 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் விநியோகம் தற்போது 13.5 லட்சம் லிட்டராக குறைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

    முந்தைய ஸ்டாலின் அரசும், தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசும் ஆட்சிக்கு வந்தவுடன் மக்களின் அடிப்படைத் தேவைகளிலேயே கை வைப்பதாக குற்றம்சாட்டிய அவர், சில வாரங்களுக்கு முன்பு ஆவின் கிரீன் மேஜிக் பால் உற்பத்தி படிப்படியாகக் குறைக்கப்படுவதாக பாஜக சுட்டிக்காட்டியபோது, அரசுக்கு ஆதரவாக பேசியவர்கள் தற்போது என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    19182969 nainarnagendran01

    மேலும், தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக அளவில் பால் கொள்முதல் செய்வதற்குப் பதிலாக, ஆவின் உற்பத்தியை அதிகரிக்க அரசு தவறிவிட்டதாகவும், இது நிர்வாகத் தோல்வி என்றும் அவர் விமர்சித்தார்.

    அமுல் உள்ளிட்ட பிற மாநில அரசுகளின் பால் கூட்டுறவு நிறுவனங்களின் செயல்பாடுகளை முன்மாதிரியாகக் கொண்டு, தமிழகத்தில் ஆவின் பால் உற்பத்தி மற்றும் விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

    Aavin MilkSupply NainarNagendran TamilNaduPolitics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசூர்யா அரசியலுக்கு வரமாட்டார்..!! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரசிகர் மன்றம்..!!
    Next Article 2024 ஜூன் 29 ஃபிளாஷ் பேக்!. டி20 உலகக்கோப்பையோடு விடைபெற்ற RO-KO!
    Editor web2
    • Website

    Related Posts

    ராஜினாமா எம்.எல்.ஏக்கள் மீதான தகுதி நீக்க மனுக்களை சபாநாயகர் தொடர்ந்து விசாரிப்பார்; சட்டமன்ற செயலாளர் தகவல்

    June 29, 2026

    முன்னாள் கமிஷனர் அருணுக்கு எதிரான வழக்கு:  நீதிமன்றம் பச்சைக்கொடி?

    June 29, 2026

    அயோத்தி ராமர் கோவில் பண மோசடி வழக்கு!. வாதாடும் வழக்கறிஞர்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம்!

    June 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ராஜினாமா எம்.எல்.ஏக்கள் மீதான தகுதி நீக்க மனுக்களை சபாநாயகர் தொடர்ந்து விசாரிப்பார்; சட்டமன்ற செயலாளர் தகவல்

    முன்னாள் கமிஷனர் அருணுக்கு எதிரான வழக்கு:  நீதிமன்றம் பச்சைக்கொடி?

    அயோத்தி ராமர் கோவில் பண மோசடி வழக்கு!. வாதாடும் வழக்கறிஞர்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம்!

    துணைவேந்தர் நியமன அதிகாரத்தை  எதிர்த்த வழக்கு; இறுதி விசாரணை  தள்ளிவைப்பு

    “இது வெறும் டிரைலர்தான்… ” – எச்சரிக்கும் சேகர் பாபு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.