Close Menu
    What's Hot

    கடலூர்: விவசாயிகளிடம் லஞ்சம்… நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம் – அமைச்சர்  வெங்கடரமணன் அதிரடி!       

    சுகாதார சீர்கேட்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை… நடவடிக்கை எடுக்கப்படுமா?

    மவுனம் காக்கும் மாநில எஸ்.சி./எஸ்.டி. ஆணையம்…. கேள்வி எழுப்பும் நீலம் பண்பாட்டு மையம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»2024 ஜூன் 29 ஃபிளாஷ் பேக்!. டி20 உலகக்கோப்பையோடு விடைபெற்ற RO-KO!
    Featured

    2024 ஜூன் 29 ஃபிளாஷ் பேக்!. டி20 உலகக்கோப்பையோடு விடைபெற்ற RO-KO!

    Editor web3By Editor web3June 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ro ko june 29th 2024
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் (2024, ஜூன் 29) இந்திய கிரிக்கெட்டின் இரு பெரும் தூண்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா, இருவரும் உலகக்கோப்பை வெற்றிக் கோப்பையுடன், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து  விடைபெற்றனர். பார்படாஸில் நடைபெற்ற 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற சில நிமிடங்களிலேயே இருவரும் தங்களது ஓய்வு முடிவை அறிவித்தனர்.

    கடந்த 11 ஆண்டுகளாக ஐசிசி கோப்பை ஏதும் வெல்லாமல் இருந்த இந்திய அணியின் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்த ஜாம்பவான்கள் இருவருக்கும் இது ஒரு கம்பீரமான விடைபெறுதலாக அமைந்தது.

    இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணியின் தூணாக விளங்கினார். 8 இன்னிங்ஸ்களில் 257 ரன்கள் குவித்த அவர், 156.70 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டுடன் 3 அரைசதங்களை விளாசினார். 2022 சொதப்பலுக்குப் பிறகு ரோஹித் கையாண்ட அதிரடி பேட்டிங் அணுகுமுறை, இந்திய அணிக்கு 2024 டி20 உலகக்கோப்பைகளிலும் பெரும் பக்கபலமாக அமைந்தது.

    மறுபுறம், தொடர் முழுவதும் தடுமாறினாலும் இறுதிப்போட்டியில் தனது விஸ்வரூபத்தை காட்டினார் விராட் கோலி. தொடக்க வீரராகக் களம் இறங்கி 59 பந்துகளில் 76 ரன்கள் குவித்து, இந்தியா 176 ரன்கள் என்ற சவாலான இலக்கை எட்ட உதவினார். இறுதிவரை போராடிய தென்னாப்பிரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

    ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிக்கு மிக அருகில் இருந்தது. கடைசி 4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் கைவசம் இருக்க, வெறும் 26 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது ரிஷப் பந்த் தனக்கு காயம் ஏற்பட்டது போலப் பாவனை செய்து ஆட்டத்தின் வேகத்தைக் குறைத்தார். இந்த சிறிய இடைவெளி தென்னாப்பிரிக்காவின் உத்வேகத்தை உடைத்தது. இறுதி ஓவர்களில் அசுரத்தனமாகப் பந்துவீசிய இந்தியா, எதிரணியை 18 ரன்களுக்குள் சுருட்டி கோப்பையைக் கைப்பற்றியது.

    இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோலியும், தொடர் நாயகனாக 15 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ராவும் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 2025 மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற கோலி மற்றும் ரோஹித், தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர். இவர்கள் 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்குப் பிறகு தங்களது ஒருநாள் கிரிக்கெட் பயணம் குறித்து இறுதி முடிவெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    On This Day On this day in 2024 T20I Farewell Virat Kohli And Rohit Sharma
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”ஆவின் பால்  உற்பத்தியை முடக்குவதா..?” – நயினார் நாகேந்திரன் கண்டனம்
    Next Article அரசியல் எதிர்காலம் வேண்டுமென்றால் அதிமுகவிலிருந்து வெளியேறுங்கள் – யூடியூபர் சவுக்கு சங்கர்
    Editor web3
    • Website

    Related Posts

    கடலூர்: விவசாயிகளிடம் லஞ்சம்… நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம் – அமைச்சர்  வெங்கடரமணன் அதிரடி!       

    July 19, 2026

    மவுனம் காக்கும் மாநில எஸ்.சி./எஸ்.டி. ஆணையம்…. கேள்வி எழுப்பும் நீலம் பண்பாட்டு மையம்

    July 19, 2026

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரானார் இயக்குநர் சேரன்.

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கடலூர்: விவசாயிகளிடம் லஞ்சம்… நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம் – அமைச்சர்  வெங்கடரமணன் அதிரடி!       

    சுகாதார சீர்கேட்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை… நடவடிக்கை எடுக்கப்படுமா?

    மவுனம் காக்கும் மாநில எஸ்.சி./எஸ்.டி. ஆணையம்…. கேள்வி எழுப்பும் நீலம் பண்பாட்டு மையம்

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரானார் இயக்குநர் சேரன்.

    பிரசவ அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த பெண் … சடலத்தை விட்டுவிட்டு ஓடிய மருத்துவர்கள்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.