Close Menu
    What's Hot

    தமிழக காங்கிரஸில் புதிய மேலிடப் பொறுப்பாளர் யார்..?? எதிர்பார்ப்பு உச்சம்..!!

    ஆபரேஷன் சிந்தூரில் உயிர்நீத்த 6 வீரர்கள் யார் யார்..?? முதன்முறையாக வெளியான தகவல்..!!

    தமிழக பட்ஜெட் எப்போது? ஜூலை 2 முதல்  விஜய் தொடர் ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா?
    அரசியல்

    திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா?

    Editor web2By Editor web2June 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    MK Stalin 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பலூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து, அவர் திருச்சி கிழக்கு தொகுதிப் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, தற்போது அத்தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதுமட்டுமல்லாது அதிமுகவிலிருந்து தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள் சிலரும் தங்கள் எம்.எல்.ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்ததால், அந்த தொகுதிகளும் காலியாக உள்ளதால், அங்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்தச் சூழலில், அண்மையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான கே.என். நேரு, “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  விரைவில் மீண்டும் சட்டமன்றத்திற்குள் நுழைவார்” என்று அதிரடியாகப் கூறினார்.

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில். மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு  தோல்வியடைந்தது குறித்து, முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் விமர்சித்து பேசி இருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவும், திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் நேருவின் இந்த பேச்சு அமைந்திருந்தது. இதனையடுத்து மு.க.ஸ்டாலின்,  திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்ற பேச்சு எழுந்தது.

    இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலினிடம், “திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நீங்கள் போட்டியிடுகிறீர்களா?” என்று  கேட்கப்பட்டது.

    அதற்குப் பதிலளித்த அவர், “அது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை” எனத் தெரிவித்தார்.  மு.க.ஸ்டாலினி ன் இந்தப் பதில், அவர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை முற்றிலும் மறுக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

    கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட எதிர்பாராத பின்னடைவுக்குப் பிறகு, ஸ்டாலின் மீண்டும் சட்டமன்றத்திற்குள்  தடம் பதிக்க, திருச்சி கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. இதை அவர் பயன்படுத்துவாரா அல்லது வேறு வியூகங்களை வகுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    DMK mkstalin TamilNaduPolitics TrichyEastByElection
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாரத்தான் ஓகே..!! அந்த குட்டி GIFT BAG-ல என்ன இருந்துச்சு..?? கவனிச்சிங்களா..!!
    Next Article அடம்பிடிக்கும் சி.விஜயபாஸ்கர்..!! தள்ளிப்போகும் இணைப்பு விழா..!! காரணம் இதுதானாம்..!!
    Editor web2
    • Website

    Related Posts

    தமிழக காங்கிரஸில் புதிய மேலிடப் பொறுப்பாளர் யார்..?? எதிர்பார்ப்பு உச்சம்..!!

    June 26, 2026

    ஆபரேஷன் சிந்தூரில் உயிர்நீத்த 6 வீரர்கள் யார் யார்..?? முதன்முறையாக வெளியான தகவல்..!!

    June 26, 2026

    தமிழக பட்ஜெட் எப்போது? ஜூலை 2 முதல்  விஜய் தொடர் ஆலோசனை!

    June 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக காங்கிரஸில் புதிய மேலிடப் பொறுப்பாளர் யார்..?? எதிர்பார்ப்பு உச்சம்..!!

    ஆபரேஷன் சிந்தூரில் உயிர்நீத்த 6 வீரர்கள் யார் யார்..?? முதன்முறையாக வெளியான தகவல்..!!

    தமிழக பட்ஜெட் எப்போது? ஜூலை 2 முதல்  விஜய் தொடர் ஆலோசனை!

    நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம்..!! இதெல்லாம் பயன்படுத்த தடை..!! கமிஷனர் வார்னிங்..!!

    அடம்பிடிக்கும் சி.விஜயபாஸ்கர்..!! தள்ளிப்போகும் இணைப்பு விழா..!! காரணம் இதுதானாம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.