Author: Editor web2
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில், மாநில நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில், இரண்டு நாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகள் மாநாடு வரும் ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டின் முதல் நாளான ஜூன் 29 காலை, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். இதில் சட்டம்-ஒழுங்கு நிலை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, சுகாதாரம், போதையில்லா தமிழ்நாடு திட்டம், பழங்குடியினர் மற்றும் பட்டியலின மக்களின் நலன், அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, முதியோர் நலன், சட்டவிரோத கனிம வளக் கொள்ளையைத் தடுப்பது, அனைத்து மதங்களின் வழிபாட்டு நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்களுடன் மட்டும் முதலமைச்சர் தனிப்பட்ட ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார். இதில், 28…
கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைத் தாங்கிப் பிடித்த தூண்களாகவும், லட்சக்கணக்கான நடுத்தர வர்க்க இளைஞர்களின் ‘வெள்ளைக்கலர்’ (White-collar) வேலைவாய்ப்புக் கனவாகவும் திகழ்ந்தது இந்தியத் தகவல் தொழில்நுட்பத் (IT) துறை. உலகளாவிய நிறுவனங்களுக்குச் சேவைகளை வழங்கி, இந்தியாவின் முகவரியை மாற்றிய இந்தத் துறை, தற்போது ஒரு மாபெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது. அந்த சவாலின் பெயர் – செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI). இந்திய ஐடி வளர்ச்சியின் பின்னணி 1990-களின் இறுதியிலும் 2000-களின் தொடக்கத்திலும் இணையப் புரட்சி உலகையே மாற்றியது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் செலவைக் குறைக்கும் நோக்கில் பல்வேறு தொழில்நுட்ப சேவைகளை இந்தியாவுக்கு அவுட்சோர்ஸ் செய்யத் தொடங்கின. ஆங்கில அறிவு, தொழில்நுட்ப திறன், குறைந்த சம்பளச் செலவு ஆகியவை இந்தியாவுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தன. வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் என உலகின் பெரும்பாலான பெரிய நிறுவனங்களின் மென்பொருள் பராமரிப்பு, தரவு நிர்வாகம், வாடிக்கையாளர்…
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அவரது குடும்பத்தினர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தில் 1996-2001-ம் ஆண்டு வரையிலான திமுக. ஆட்சியின் போது தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் அப்போதைய மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே 31 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் சொத்து சேர்த்ததாக பெரியசாமி மீதும், அவரது மனைவி எபனேசர் அம்மாள், இவர்களது மகளும் அப்போதைய மாவட்ட ஊராட்சி தலைவரும், முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன், அவரது கணவர் ஜீவன் ஜேக்கப், கீதா ஜீவனின் அண்ணன் ராஜா, தம்பியும் தற்போதைய மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி ஆகிய 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தூத்துக்குடி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் இருந்த போது, கடந்த 2017-ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக…
நீதிமன்ற உத்தரவை விமர்சித்துப் பேசியதாக தமிழக சட்டத்துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பரமசிவம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் மதுரை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை வேண்டுமென்றே மீறுவது போல தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து உள்ளார். அவரது இந்த நடவடிக்கை நமது நாட்டின் நீதித்துறை அமைப்புக்கு எதிரான வகையில் உள்ளது. இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவுகளுக்கு அவர் எந்த மரியாதையும் அளிக்கவில்லை. நீதித்துறையை விட அரசாங்க அமைப்பு உயர்ந்தது என்றும், நீதிமன்றங்களின் உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இல்லை என்றும் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கத்தில் அமைச்சர் பேசியுள்ளார். இதனை அனுமதித்தால் பொதுமக்கள் நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கையை…
உலக திரைப்படத் துறையின் மிகவும் மதிப்புமிக்க அமைப்புகளில் ஒன்றான “தி அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்” (Academy of Motion Picture Arts and Sciences) உறுப்பினராக பிரபல திரைப்பட எடிட்டர் ஏ. ஸ்ரீகர் பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், ஆஸ்கார் விருதுகளுக்கான திரைப்படங்களைப் பார்த்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் ஒருவராக அவர் இணைந்துள்ளார். இந்த சாதனைக்காக தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர் சங்கம் (SIFEA) சார்பில் அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வாழ்த்து செய்தியில், படத்தொகுப்புத் துறையில் ஸ்ரீகர் பிரசாத் வெளிப்படுத்தி வரும் சிறப்பான திறமை, அர்ப்பணிப்பு மற்றும் நீண்டகால பங்களிப்புக்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரமாக இந்த நியமனம் அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்ரீகர் பிரசாத் அளித்துள்ள பேட்டியில், “இந்திய சினிமா சார்பில் ஆஸ்கார் விருது குழுவில் படங்களைப் பார்த்து வாக்களிக்கும் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கடந்த 35…
அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், அதிருப்தி கோஷ்டியைத் தன் வசம் தக்கவைத்துக் கொள்ளும் உத்தியாகவும், அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி இன்று அதிரடியான புதிய பதவி நியமனங்களை அறிவித்துள்ளார். வேலுமணி, நத்தம் விஸ்வநாதனுக்கு முக்கிய பதவி அதிமுகவில் மிக முக்கியப் பதவிகளான துணைப் பொதுச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் இரா. விசுவநாதன் ஆகியோர் மீண்டும் அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளனர். கொங்கு மண்டலத்தின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் வேலுமணிக்கு மீண்டும் கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதன் மூலம் அவரை சமாதானப்படுத்தி உள்ளார் எடப்பாடி. அதேபோல், முன்னாள் அமைச்சர் வரகூர் அ. அருணாசலம் கழகத்தின் புதிய தலைமை நிலையச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கட்சியின் அடிமட்டத் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் மிக முக்கியப் பொறுப்பான கழக அமைப்புச் செயலாளர்களாக பி. தங்கமணி, கே.சி. கருப்பணன், எஸ்.பி. சண்முகநாதன், கே.பி. அன்பழகன், ஆர். காமராஜ், கே.சி.…
எ.வ.வேலு வீட்டில் கைப்பற்றப்பட்ட சூட்கேஸில் இருந்த ஆவணங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு தொடர்பாக, அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், பணிகள் நிறைவேறுவதற்கு முன்பே பல கோடி ரூபாய் மதிப்பிலான நிதி ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக நேற்று 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 120B, 409, 420, 468, 471 r/w 109 ஆகிய பிரிவுகள் மற்றும் 1988-ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் 7(c), 13(2) r/w 13(1)(a) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு புலனாய்வு…
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், என்.எல்.சி. இந்தியா (NLC India) நிறுவனத்தின் 3% வரையிலான பங்குகளை விற்பனை செய்வதற்கு இந்திய அரசு எடுத்துள்ள முடிவு குறித்து தமிழ்நாடு அரசின் வருத்தத்தைத் தெரிவிக்கும் முகமாக இக்கடிதத்தை தான் எழுதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகளை மேலும் குறைக்கும் எந்தவொரு முடிவையும், தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியாக ஆட்சேபிக்கிறது என்றும், என்.எல்.சி இந்தியா நிறுவனம் தனது தோற்றம், வளர்ச்சி மற்றும் தொடர்ச்சியான செயல்பாடுகள் என அனைத்திலும், தமிழ்நாட்டுடன் இரண்டறக் கலந்திருப்பதால், இவ்விவகாரம் தமிழ்நாட்டிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் தலைமையகம் தமிழ்நாட்டின் நெய்வேலியில் அமைந்துள்ளது என்றும், தமிழ்நாட்டு மக்களின் ஒத்துழைப்புடன், மாநில அரசு…
சினிமாக்காரர்களை தினசரி சந்திக்கும் முதலமைச்சர் விஜய்க்கு பெரியபாளையம் தொழிற்சாலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தாரை சந்திக்க நேரமில்லையா என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள தனது சமூக வலைத்தளப் பதிவில், ” கரூரை கைகழுவி விட்டது போல, பெரியபாளையத்தையும் புறக்கணிக்கிறீர்களா திரு. விஜய் அவர்களே? சினிமாக்காரர்களை தினசரி சந்தித்து சிரித்து பேசி மகிழும் உங்களுக்கு, உங்கள் ஆட்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்ல நேரமில்லையா அல்லது மனமில்லையா? ஒருவேளை பாதிக்கப்பட்டவர்கள் பனையூருக்கு வந்தால் தான் உங்கள் ஆறுதல் வார்த்தைகள் கிடைக்குமோ? பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை விட்டெறிந்து விட்டால் நமது கடமை முடிந்து விட்டது என அவர்களை சந்திக்காமல் நீங்கள் ஓரம் கட்டுவது என்ன விதமான மனநிலை? இதுமட்டுமா? சீரழிந்த சட்டம் ஒழுங்கு, கேள்விக்குறியாகியுள்ள பெண்களின் பாதுகாப்பு, பெருகிவரும் போதைப் பழக்கம், தவெகவினரின் அராஜகங்கள் என உங்கள் ஆட்சியில் நடக்கும் எந்த…
சமீப காலமாக தனது முகம் சோர்வாக இருப்பதற்கு தனக்கு ஏற்பட்ட நோய் பாதிப்புதான் காரணம் என நடிகர் விஷ்ணு விஷால் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விடுத்துள்ள அறிக்கையில், ” அனைவருக்கும் வணக்கம், முதலில், உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் மனமார்ந்த நன்றி. சமீபத்திய என்னுடைய போஸ்ட் அனைத்திலும் நீங்கள் சொன்ன அத்தனை கமெண்ட்ஸ்களையும் நான் பார்த்தேன். அது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தது. அதனால் இந்த விஷயத்தை உங்களுடன் நேரடியாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சமீப காலமாக என் முகம் சோர்வாக இருப்பது போல இருப்பதை பலர் கவனித்திருக்கிறீர்கள். அதற்குக் காரணம், கடந்த 3-4 ஆண்டுகளாக நான் ஒரு Autoimmune நோயால் பாதிக்கப்பட்டு வருகிறேன். அதற்காக மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை இடையிடையே எடுத்துக்கொண்டு வருகிறேன். அந்த மருந்துகளின் பக்கவிளைவு தான் அந்த சோர்வு ஆனால் தற்போது நான் மேற்கொண்டு வரும் இந்த சிகிச்சை…