Close Menu
    What's Hot

    சொத்துக்குவிப்பு வழக்கு: தாமதத்தினால் தப்பிய கீதா ஜீவன்

    நீதிமன்ற உத்தரவை மீறினாரா? அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிராக வழக்கு

    ஆஸ்கார் விருது குழுவில் இடம்பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»ஆஸ்கார் விருது குழுவில் இடம்பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!
    சினிமா

    ஆஸ்கார் விருது குழுவில் இடம்பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!

    Editor web2By Editor web2June 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sreekar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உலக திரைப்படத் துறையின் மிகவும் மதிப்புமிக்க அமைப்புகளில் ஒன்றான “தி அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்” (Academy of Motion Picture Arts and Sciences) உறுப்பினராக பிரபல திரைப்பட எடிட்டர் ஏ. ஸ்ரீகர் பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதன் மூலம், ஆஸ்கார் விருதுகளுக்கான திரைப்படங்களைப் பார்த்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் ஒருவராக அவர் இணைந்துள்ளார்.

    இந்த சாதனைக்காக தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர் சங்கம் (SIFEA) சார்பில் அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வாழ்த்து செய்தியில், படத்தொகுப்புத் துறையில் ஸ்ரீகர் பிரசாத் வெளிப்படுத்தி வரும் சிறப்பான திறமை, அர்ப்பணிப்பு மற்றும் நீண்டகால பங்களிப்புக்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரமாக இந்த நியமனம் அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஸ்ரீகர் பிரசாத் அளித்துள்ள பேட்டியில், “இந்திய சினிமா சார்பில் ஆஸ்கார் விருது குழுவில் படங்களைப் பார்த்து வாக்களிக்கும் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கடந்த 35 ஆண்டுகளாக 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளேன். 17 மொழிகளில் பணியாற்றி 9 தேசிய விருதுகளைப் பெற்றுள்ள நிலையில், இந்த அங்கீகாரம் எனக்கு மேலும் பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

    இந்திய திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களில் ஒருவராக திகழும் ஸ்ரீகர் பிரசாத், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் தனது தனித்துவமான எடிட்டிங் திறமையால் முத்திரை பதித்துள்ளார். அவரது இந்த சர்வதேச அங்கீகாரம் இந்திய திரைப்படத் துறைக்கும், குறிப்பாக தென்னிந்திய படத்தொகுப்பாளர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக திரையுலகினர் பாராட்டி வருகின்றனர்.

    FilmEditingLegend IndianCinema OscarAcademy SreekarPrasad
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎஸ்.பி. வேலுமணிக்கு மீண்டும் முக்கிய பதவி… அதிருப்தியாளர்களை வளைத்துப்போட்டு இபிஎஸ் அதிரடி!
    Next Article நீதிமன்ற உத்தரவை மீறினாரா? அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிராக வழக்கு
    Editor web2
    • Website

    Related Posts

    சொத்துக்குவிப்பு வழக்கு: தாமதத்தினால் தப்பிய கீதா ஜீவன்

    June 25, 2026

    நீதிமன்ற உத்தரவை மீறினாரா? அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிராக வழக்கு

    June 25, 2026

    எஸ்.பி. வேலுமணிக்கு மீண்டும் முக்கிய பதவி… அதிருப்தியாளர்களை வளைத்துப்போட்டு இபிஎஸ் அதிரடி!

    June 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சொத்துக்குவிப்பு வழக்கு: தாமதத்தினால் தப்பிய கீதா ஜீவன்

    நீதிமன்ற உத்தரவை மீறினாரா? அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிராக வழக்கு

    ஆஸ்கார் விருது குழுவில் இடம்பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!

    எஸ்.பி. வேலுமணிக்கு மீண்டும் முக்கிய பதவி… அதிருப்தியாளர்களை வளைத்துப்போட்டு இபிஎஸ் அதிரடி!

    வெள்ளை அறிக்கையில் தவறான தகவல்கள்!- மின்சாரத்துறை அமைச்சருக்கு செந்தில் பாலாஜி பதிலடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.