Close Menu
    What's Hot

    வெள்ளை அறிக்கையில் தவறான தகவல்கள்!- மின்சாரத்துறை அமைச்சருக்கு செந்தில் பாலாஜி பதிலடி!

    பவளவிழா பாப்பா TO அழுகுனிப் பாப்பா – மு.க.ஸ்டாலினை சாடும் தவெக ஐடிவிங்க்

    தர்மன் படத்தொகுப்பாளர் இவரா? இப்பவே ஜெர்க் ஆகுதே!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»என்.எல்.சி. பங்குளை விற்க முதல்வர் விஜய் எதிர்ப்பு…பிரதமருக்கு கடிதம்!
    Featured

    என்.எல்.சி. பங்குளை விற்க முதல்வர் விஜய் எதிர்ப்பு…பிரதமருக்கு கடிதம்!

    Editor web2By Editor web2June 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Vijay writes
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்யக் கோரி  பிரதமர் மோடிக்கு  முதலமைச்சர்  விஜய்  கடிதம் எழுதியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், என்.எல்.சி. இந்தியா (NLC India) நிறுவனத்தின் 3% வரையிலான பங்குகளை   விற்பனை செய்வதற்கு இந்திய அரசு எடுத்துள்ள முடிவு குறித்து தமிழ்நாடு அரசின் வருத்தத்தைத் தெரிவிக்கும் முகமாக இக்கடிதத்தை தான் எழுதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகளை மேலும் குறைக்கும் எந்தவொரு முடிவையும், தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியாக ஆட்சேபிக்கிறது என்றும், என்.எல்.சி இந்தியா நிறுவனம் தனது தோற்றம், வளர்ச்சி மற்றும் தொடர்ச்சியான செயல்பாடுகள் என அனைத்திலும், தமிழ்நாட்டுடன் இரண்டறக் கலந்திருப்பதால், இவ்விவகாரம் தமிழ்நாட்டிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் தலைமையகம் தமிழ்நாட்டின் நெய்வேலியில் அமைந்துள்ளது என்றும், தமிழ்நாட்டு மக்களின் ஒத்துழைப்புடன், மாநில அரசு வாயிலாகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் பல தசாப்தங்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும், இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனத்தில் மாநில அரசுக்கு நியாயமான மற்றும் நீடித்த உரிமை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

    மேலும், என்.எல்.சி இந்தியா நிறுவனம் என்பது  முக்கியத்துவம் வாய்ந்த தேசிய சொத்து என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என்றும்,   இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் பொது உடைமைத் தன்மைக்கு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்றும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

    இத்தகைய சூழலில், என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான தனது முடிவை இந்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாங்கிரஸ் தவறுகளை மறைக்கிறதா திமுக? – நயினார் நாகேந்திரன் சந்தேகம்
    Next Article “மாணவர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா?” – மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ராகுல் காந்தி கடும் தாக்கு
    Editor web2
    • Website

    Related Posts

    வெள்ளை அறிக்கையில் தவறான தகவல்கள்!- மின்சாரத்துறை அமைச்சருக்கு செந்தில் பாலாஜி பதிலடி!

    June 25, 2026

    பவளவிழா பாப்பா TO அழுகுனிப் பாப்பா – மு.க.ஸ்டாலினை சாடும் தவெக ஐடிவிங்க்

    June 25, 2026

    தர்மன் படத்தொகுப்பாளர் இவரா? இப்பவே ஜெர்க் ஆகுதே!

    June 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வெள்ளை அறிக்கையில் தவறான தகவல்கள்!- மின்சாரத்துறை அமைச்சருக்கு செந்தில் பாலாஜி பதிலடி!

    பவளவிழா பாப்பா TO அழுகுனிப் பாப்பா – மு.க.ஸ்டாலினை சாடும் தவெக ஐடிவிங்க்

    தர்மன் படத்தொகுப்பாளர் இவரா? இப்பவே ஜெர்க் ஆகுதே!

    8 மணி நேர சோதனை… எ.வ.வேலுவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை!

    “மாணவர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா?” – மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ராகுல் காந்தி கடும் தாக்கு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.