Close Menu
    What's Hot

    மீண்டும் தலைதூக்கும் DMK Files விவகாரம்..!! டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை..!!

    சிவப்பு துண்டை இகழ்ந்தால் இரட்டைப் போர் யானை பதிலடி கொடுக்கும்..!! அமைச்சர் ராஜ்மோகன் வார்னிங்..!!

    நாளை மறுநாள் POLIO DROPS முகாம்..!! CM விஜய் தொடங்கி வைக்கும் ஏரியா எது தெரியுமா..??

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»2 நாட்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு!
    Featured

    2 நாட்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு!

    Editor web2By Editor web2June 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Vijay with IAS
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில், மாநில நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில், இரண்டு நாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகள் மாநாடு வரும் ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.

    மாநாட்டின் முதல் நாளான ஜூன் 29 காலை, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். இதில் சட்டம்-ஒழுங்கு நிலை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, சுகாதாரம், போதையில்லா தமிழ்நாடு திட்டம், பழங்குடியினர் மற்றும் பட்டியலின மக்களின் நலன், அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, முதியோர் நலன், சட்டவிரோத கனிம வளக் கொள்ளையைத் தடுப்பது, அனைத்து மதங்களின் வழிபாட்டு நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

    இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்களுடன் மட்டும் முதலமைச்சர் தனிப்பட்ட ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார். இதில், 28 அரசுத் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் ‘வெற்றி தமிழகம்’ தொலைநோக்கு ஆவணத்தில் இடம்பெற்றுள்ள இலக்குகளை மாவட்ட அளவில் விரைவாக செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது.

    மாநாட்டின் இரண்டாவது நாளான ஜூன் 30 அன்று, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை தொடர்பான திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதில் பசுமை தமிழ்நாடு திட்டம், வனப்பகுதிகளில் சாலை மேம்பாடு, வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துதல், மனிதர்–வனவிலங்கு மோதல்களைத் தடுப்பது உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் விரிவாக ஆலோசிக்க உள்ளார்.

    இதற்கான முன்னோட்டமாக, ஜூன் 28-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு, சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் தலைமைச் செயலாளர் சாய் குமார் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ள அம்சங்கள் குறித்து முன்கூட்டியே ஆய்வு செய்து, துறைவாரியான அறிக்கைகள் பரிசீலிக்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    cmvijay GoodGovernance IASConference TamilNaduGovernment
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாடு முழுவதும் சொட்டு மருந்து சிறப்பு முகாம்..! 28ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு..!
    Next Article காஞ்சிபுரம் : காலில் விழ வந்த பெண்..! அலறிய அமைச்சர்..!
    Editor web2
    • Website

    Related Posts

    மீண்டும் தலைதூக்கும் DMK Files விவகாரம்..!! டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை..!!

    June 26, 2026

    சிவப்பு துண்டை இகழ்ந்தால் இரட்டைப் போர் யானை பதிலடி கொடுக்கும்..!! அமைச்சர் ராஜ்மோகன் வார்னிங்..!!

    June 26, 2026

    நாளை மறுநாள் POLIO DROPS முகாம்..!! CM விஜய் தொடங்கி வைக்கும் ஏரியா எது தெரியுமா..??

    June 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் தலைதூக்கும் DMK Files விவகாரம்..!! டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை..!!

    சிவப்பு துண்டை இகழ்ந்தால் இரட்டைப் போர் யானை பதிலடி கொடுக்கும்..!! அமைச்சர் ராஜ்மோகன் வார்னிங்..!!

    நாளை மறுநாள் POLIO DROPS முகாம்..!! CM விஜய் தொடங்கி வைக்கும் ஏரியா எது தெரியுமா..??

    போதைப்பொருள் எதிர்ப்பு: முதல்வர் எழுதிய விழிப்புணர்வு வாசகம்!

    தூய்மை பணியாளர்களுக்காக பணிந்தது தவெக அரசு..!! தனியார் மயத்தை கைவிட்ட தமிழக அரசு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.