Author: Editor web2

இந்திய ஐஸ்கிரீம் சந்தையில் பல ஆண்டுகளாக ப்ரோசன் டெசர்ட்ஸ் (frozen desserts) எனப்படும் உறைந்த இனிப்புகள் பெரும் பங்கை வகித்து வருகின்றன. பாலில் செய்யப்படும் உண்மையான ஐஸ்கிரீமிற்கு மாற்றாக, மிகக் குறைந்த விலையில் இவை விற்கப்படுவதால் பொதுமக்கள் பலரும் இதனை ஐஸ்கிரீம் என்றே நினைத்து வாங்கி உண்கின்றனர். ஐஸ்கிரீமுக்கு மலிவு மாற்றாக விளங்கும் இவை, பெரும்பாலும் பாலில் உள்ள கொழுப்பிற்குப் பதிலாக காய்கறி எண்ணெய்கள், அதிக அளவு சர்க்கரை, செயற்கை சுவைகள், வண்ணங்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்து உட்கொள்வது பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதன் காரணமாகவே, ‘குவாலிட்டிஸ்’ (Kwality’s) போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களின் பிரோசன் டெசர்ட் தயாரிப்புகளை நிறுத்திவிட்டு, அடுத்த ஆண்டுக்குள் முழுமையாகப் பால் சார்ந்த (Dairy-based) தயாரிப்புகளுக்கு மாறப்போவதாக அறிவித்துள்ளன. உறைந்த இனிப்புகள் ஏன் ஆரோக்கியத்திற்கு கேடு? ப்ரோசன் டெசர்ட்ஸ் (frozen desserts) எனப்படும் உறைந்த இனிப்புகளில் உள்ள…

Read More

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் 100 நாட்களுக்கும் மேலான தொடர் வான்வழித் தாக்குதல்கள், முக்கிய ராணுவ மற்றும் அரசியல் தலைவர்களின் படுகொலைகள், உள்கட்டமைப்பு அழிப்புகள் மற்றும் கடுமையான எண்ணெய் வர்த்தக முடக்கங்களுக்குப் பிறகும் ஈரான் இன்னும் தாக்குப்பிடித்து நிற்பது உலக நாடுகளை வியப்புடன் உற்று நோக்க வைத்துள்ளது. போர் காரணமாக ஈரான் சுமார் 347 பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்துள்ளதுடன், இந்த ஆண்டு அதன் பொருளாதாரம் 6.1 சதவீதம் சுருங்கும் என ஐநா கணித்துள்ளது. இருப்பினும், ஈரானின் பொருளாதாரம் முற்றிலும் அழிந்துவிடாமல், தன் ராணுவத்திற்கும் மக்களுக்கும் தேவையானவற்றை அது எவ்வாறு தொடர்ந்து வழங்கி வருகிறது? அதன் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன என்படு குறித்து விரிவாக பார்க்கலாம். 10 ஆண்டு கால அனுபவம் ஈரான் பொருளாதார நெருக்கடிகளைப் புதிதாக எதிர்கொள்ளும் நாடு அல்ல. பல தசாப்தங்களாகப் போர், பொருளாதாரத் தனிமைப்படுத்தல் மற்றும் சர்வதேசத் தடைகளை எதிர்கொண்ட நீண்ட அனுபவம் அதற்கு உண்டு.…

Read More

ஆவின் நிறுவனத்தின் கிரீன் மேஜிக் பால் பாக்கெட்டுகளின் உற்பத்தி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, விரைவில் முழுமையாக நிறுத்தப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பால் விநியோகம் மற்றும் உற்பத்தியில் எந்தவித தடையும் ஏற்படாத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அதிக உற்பத்தி செலவின் காரணமாக, பெரும்பாலான நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ஆவினின் “கிரீன் மேஜிக்” பால் பாக்கெட்டுகளின் உற்பத்தி படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் அப்பால் பாக்கெட்டுகள் முழுமையாக நிறுத்தப்பட உள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. 4.5% கொழுப்புச் சத்து கொண்ட ஆவின் கிரீன் மேஜிக் பால் பாக்கெட்டுகளின் விநியோகம் ஒருவேளை தடைபடுமானால், இதே அளவு கொழுப்புச் சத்து கொண்ட பாலை மக்கள் கூடுதல் விலை கொடுத்து தனியாரிடம் இருந்து வாங்கும் நிதி நெருக்கடிக்கு தள்ளப்படுவர். இதனால் பால் நுகர்வு…

Read More

சட்ட விதிமீறல்களை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டாமல், அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் சாதாரணமாகக் கேள்வி எழுப்பும் ஒரு மேடையாகப் பொதுநல வழக்குகளைத் தரம் குறைக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. சென்னை ஆழ்வார்ப்பேட்டையைச் சேர்ந்த ஏ.விஸ்வநாதன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூரில், புகழ்பெற்ற உலகளந்த பெருமாள் கோவில் அருகில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்திலிருந்து வெறும் 400 மீட்டர் தூரத்திலேயே ஏற்கனவே ஒரு பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. எனவே, புதிய பேருந்து நிலையம் கட்டுவது அரசுக்குப் பணத்தை வீணடிக்கும் தேவையற்ற செலவாகும். தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பழமையான கோவிலுக்கு அருகில் பேருந்து நிலையம் அமைப்பது பாதுகாப்புச் சட்டங்களுக்கு எதிரானது. இது தொடர்பாக பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் அனுப்பிய புகார்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை சென்னை…

Read More

ஏழை மக்கள் பயன்படுத்தும் பச்சைப் பாலின் விற்பனையை ஆவின் நிறுவனம் குறைத்திருப்பது நியாயமற்றது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,”சென்னையில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் ஒரு நாளைக்கு 14 லட்சம் லிட்டர் வரை பால் விற்பனை செய்யப்படுகிறது. இதில் அதிகபட்சமாக 7.5 லட்சம் லிட்டர் பச்சைப் பால் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், தற்போது ஆவின் பச்சைப் பால் விற்பனை 3.5 லட்சம் லிட்டராக குறைக்கப்பட்டு விட்டதாகவும், அடுத்த சில நாள்களின் ஆவின் பச்சைப்பால் விற்பனையை முற்றிலுமாக ரத்து செய்ய ஆவின் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் உண்மையாக இருந்தால் அது ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். ஆவின் பச்சைப் பாலின் உற்பத்திச் செலவு லிட்டருக்கு ரூ.51 ஆவதாகவும், ஆனால் சந்தையில் ரூ.44-க்கு விற்பனை செய்யப்படுவதால் ஒரு லிட்டர் பச்சைப் பால் விற்பனையில் லிட்டருக்கு ரூ. 7…

Read More

நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இடம் பெற்றிருந்த பாஜக, 27 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானபோது ஒட்டுமொத்தக் கூட்டணியும் சரிவைச் சந்தித்ததுடன், பாஜக வெறும் ஒரேயொரு இடத்தில் மட்டுமே தட்டுத்தடுமாறி வெற்றி பெற முடிந்தது. இந்த மோசமான தேர்தல் தோல்வி, கட்சியின் அகில இந்தியத் தலைமைக்கு கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் அளித்தது. குறிப்பாக, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் வியூகங்களும், கட்சியை வழிநடத்திய விதமும் தோல்விக்கு முக்கியக் காரணம் என டெல்லி தலைமை கருதுவதாக பாஜக உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமித்ஷா கறார் இந்த நிலையில், இந்தத் தோல்வி குறித்து விவாதிப்பதற்காகவும், தமிழக பாஜகவின் அடுத்தகட்டப் பயணம் குறித்தும் ஆலோசிக்க நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அக்கட்சியின் அவசர மையக்குழு (Core Committee) கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழகத்தில் நிலவும் தற்போதைய…

Read More

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை நினைவூட்டும் விதமாக சேலத்தில் அதே பாணியில் வறுமையில் வாடிய 50-க்கும் மேற்பட்ட பெண்களைக் குறிவைத்து அரங்கேற்றப்பட்டுள்ள அதிர்ச்சி விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சிக்கும் தவெக பிரமுகர்கள் உதவி செய்வதாகக் கூறி பெண்களை ஏமாற்றி, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாகக் கூறப்படும் தமிழக வெற்றிக் கழகத்தைச்  சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவரைப் பிடித்துக் காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் எழுந்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் தவெகவினருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், தற்போதைய சேலம் பாலியல் வன்கொடுமை நிகழ்விலும் தவெக நிர்வாகி ஒருவர் சிக்கி இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏழை பெண்களுக்கு குறி சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், வேலைவாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் கடுமையான பொருளாதாரக் கடன் சுமையில் தவிக்கும் பெண்களைத்…

Read More

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சந்தித்த எதிர்பாராத தோல்வி, அக்கட்சியின் உட்கட்டமைப்பில் இருந்த பலவீனங்களை அம்பலப்படுத்தியுள்ளது. தோல்விக்கான காரணங்களை ஆராய அமைக்கப்பட்ட கள ஆய்வுக்குழு, தனது அறிக்கையை திமுக தலைவரான மு.க. ஸ்டாலினிடம் தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்  அறிவாலய வட்டாரத்தில் கசிந்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில் திமுகவின்  தேர்தல் தோல்விக்கு குறிப்பிடப்பட்டுள்ள மிக முக்கியமான 6 காரணங்கள் இங்கே… மகளிர் உரிமைத் தொகை ஏமாற்றம் திமுக அரசுக்கு மிகப்பெரிய வாக்கு வங்கியாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டமே, இந்தத் தேர்தலில் அதற்குப் பின்னடைவாக மாறியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. தேர்தல் அறிக்கையில் “அனைத்துத் தகுதியுள்ள பெண்களுக்கும்” உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறிவிட்டு, பின்னர் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான பெண்களுக்கு இந்தத் தொகை கிடைக்காமல் போனது. இதனால், தங்களுக்குத் தொகை கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தில்…

Read More

ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதியன்று காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் குறுவைப் பருவ நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது மரபு. ஆனால், மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டிய நாளான இன்று, போதிய நீர் இல்லை என்பதால் அணை திறக்கப்படவில்லை. இந்த நிலையில், தண்ணீருக்கு முறையான வழி செய்யாமல், “ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல” வெறும் குறுவை சிறப்புத் தொகுப்பை மட்டும் அறிவிக்கும் இந்த ரீல்ஸ் ஆட்சியின் முதல்வர், தற்போது தனது சொந்த வேண்டுதலுக்காகக் கர்நாடகா மாநிலத்திற்குச் சென்றுள்ளார் என்று திமுக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று ஜூன் 12. கடந்த ஐந்தாண்டுகளில் இதே நாளில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் குறுவைப் பருவ நெல் சாகுபடிக்காக திராவிட மாடல் அரசின் முதலமைச்சராக இருந்த கழகத் தலைவர் முன்னின்று, மேட்டூர் அணையைத் திறந்து வைப்பது வழக்கம். அதற்கு முன்பாகவே ஆறுகள், வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு,…

Read More

தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டுக்கான குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் “குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் – 2026” செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு மானியங்கள் மற்றும் சலுகைகள் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளன. வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்ததாலும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் போதுமான அளவில் இல்லாததாலும், குறுவை சாகுபடியில் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் இந்த சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டெல்டா மாவட்டங்களில் வடிகால் குழாய் கிணறுகள் மூலம் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்காக ரூ.77.50 கோடியும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்காக ரூ.57.33 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் சுமார் 52.72 டி.எம்.சி. தண்ணீர் சேமிப்பு இருப்பதாகவும், காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read More