Close Menu
    What's Hot

    3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட விவகாரம்..!! அமெரிக்க தூதருக்கு மத்திய அரசு சம்மன்..!!

    Work From Home-லாம் பழசு… இனி “Work From Bike” தான் புதுசு! வைரலாகும் ஹைதராபாத் வாலிபர்!

    ஈரானின் பொருளாதார ரகசியம்… 100 நாள் போரிலும் வீழாமல் இருப்பது எப்படி?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»ஆவின் பால் உற்பத்தியை நிறுத்தக் கூடாது: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
    Featured

    ஆவின் பால் உற்பத்தியை நிறுத்தக் கூடாது: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

    Editor web2By Editor web2June 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    16630838 nainar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆவின் நிறுவனத்தின் கிரீன் மேஜிக் பால் பாக்கெட்டுகளின் உற்பத்தி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, விரைவில் முழுமையாக நிறுத்தப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பால் விநியோகம் மற்றும் உற்பத்தியில் எந்தவித தடையும் ஏற்படாத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அதிக உற்பத்தி செலவின் காரணமாக, பெரும்பாலான நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ஆவினின் “கிரீன் மேஜிக்” பால் பாக்கெட்டுகளின் உற்பத்தி படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் அப்பால் பாக்கெட்டுகள் முழுமையாக நிறுத்தப்பட உள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

    4.5% கொழுப்புச் சத்து கொண்ட ஆவின் கிரீன் மேஜிக் பால் பாக்கெட்டுகளின் விநியோகம் ஒருவேளை தடைபடுமானால், இதே அளவு கொழுப்புச் சத்து கொண்ட பாலை மக்கள் கூடுதல் விலை கொடுத்து தனியாரிடம் இருந்து வாங்கும் நிதி நெருக்கடிக்கு தள்ளப்படுவர். இதனால் பால் நுகர்வு குறைவதோடு குழந்தைகள், முதியோர்கள் உள்ளிட்டவர்களின் ஆரோக்கியமும் பாழாகும். நடுத்தர மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான அரசின் இந்நடவடிக்கை ஏற்புடையதல்ல.

    எனவே, ஆவின் பாலின் கொழுப்புச் சத்து அளவைக் குறைப்பது, உற்பத்தியை முடக்குவது, விநியோகத்தை தடைபடுத்துவது, விலையை உயர்த்துவது உள்ளிட்ட முந்தைய அரசின் தவறுகளை, தற்போதைய தவெக அரசும் தொடரக் கூடாது. மக்களின் அடிப்படைத் தேவையான பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விநியோகம் தடையின்றி நடக்கவும், அவற்றின் உற்பத்தியை பெருக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் ” என வலி்யுறுத்தி உள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமத்திய அரசின் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர் மாநாடு – ஜூன் 17-இல் ராகுல்காந்தி தொடங்கி வைக்கிறார்
    Next Article ஜூன் 22.. CM விஜய்க்கு 52வது பிறந்த நாள்..!! செலிப்ரேஷன் எங்க தெரியுமா..??
    Editor web2
    • Website

    Related Posts

    3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட விவகாரம்..!! அமெரிக்க தூதருக்கு மத்திய அரசு சம்மன்..!!

    June 13, 2026

    Work From Home-லாம் பழசு… இனி “Work From Bike” தான் புதுசு! வைரலாகும் ஹைதராபாத் வாலிபர்!

    June 13, 2026

    ஈரானின் பொருளாதார ரகசியம்… 100 நாள் போரிலும் வீழாமல் இருப்பது எப்படி?

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட விவகாரம்..!! அமெரிக்க தூதருக்கு மத்திய அரசு சம்மன்..!!

    Work From Home-லாம் பழசு… இனி “Work From Bike” தான் புதுசு! வைரலாகும் ஹைதராபாத் வாலிபர்!

    ஈரானின் பொருளாதார ரகசியம்… 100 நாள் போரிலும் வீழாமல் இருப்பது எப்படி?

    ஐயோ அது நான் இல்லை… ஏமாந்துறாதீங்க – நடிகை மீனாட்சி சவுத்ரி

    ஆவின் ‘கிரீன் மேஜிக்’ பால் விநியோகம் நிறுத்தமா..?? தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.