Author: Editor web2
பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை இன்று முதல் தமிழகம் முழுவதும் செயல்பாட்டுக்கு வருகிறது. முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த இந்த புதிய பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 70 சிங்கப்பெண் படைகள் மாநிலம் முழுவதும் களமிறங்குகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைவாகத் தடுக்கவும், அவசர காலங்களில் உடனடி காவல் உதவியை வழங்கவும் தமிழக அரசு உருவாக்கியுள்ள ‘சிங்கப்பெண்’ சிறப்பு போலீஸ் படை இன்று முதல் மாநிலம் முழுவதும் செயல்படத் தொடங்குகிறது. முதலமைச்சர் விஜய் அண்மையில் சென்னை மாநகரில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். திட்டத்தின் கீழ் மொத்தம் 270 சிங்கப்பெண் படைகள் உருவாக்கப்பட உள்ள நிலையில், முதல் கட்டமாக 70 படைகள் இன்று முதல் பணியில் ஈடுபடுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு சிங்கப்பெண் படை செயல்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகரில் மட்டும் 12 சிங்கப்பெண் படைகள்…
முதல்வர் விஜய் 3 நாள் பயணமாக இன்று தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். தமிழ்நாடு முதல்வர் விஜய், முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், கடந்த மே மாதம் 27 ஆம் தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தார். இந்நிலையில், டெல்லியில் நாளை நிதி ஆயோக் கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நடக்கிறது. அந்த கூட்டத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். அதன்படி, தமிழ்நாடு முதல்வர் விஜய் பிரதமர் தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, 3 நாள் பயணமாக, இன்று காலை 8 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். தொடர்ந்து, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ஒன்றிய உள்துறை அமைச்சர், காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோரை இந்த முறை முதல்வர் விஜய் சந்தித்து பேச திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே,…
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வெளியிட்ட அறிவிப்புக்கு முன்னாள் சபாநாயகர் அப்பாவு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சியின் கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததாக 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார். இந்த மனுவை பரிசீலித்த சபாநாயகர், எடப்பாடி பழனிசாமி அளித்த மன்னிப்பு கடிதத்தின் அடிப்படையில் 21 எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படாது என இன்று அறிவித்தார். அதே நேரத்தில், பெருந்துறை ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா மற்றும் சத்தியபாமா ஆகிய 4 பேரின் தகுதி நீக்க மனுக்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில், சபாநாயகர் பிரபாகரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து முன்னாள்…
அமைச்சர் கீர்த்தனா தொடர்பாக அவதூறான தகவல்களை பரப்பியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையான யூடியூப்பர் மாரிதாஸ் மீது அடுத்த புகார் கொடுக்கப்பட்டுள்ளதால், அவர் மீண்டும் கைதாவாரா எனக் கேள்வி எழுந்துள்ளது. யூடியூப் தளத்தின் மூலம் அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் பிரபல அரசியல் விமர்சகரும் யூடியூபருமான மாரிதாஸ், அமைச்சர் கீர்த்தனா தொடர்பாக அவதூறான தகவல்களை பரப்பியதாக நேற்று கைது செய்யப்பட்டார். அவரது கைதுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாரிதாஸ், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில், மாரிதாஸ் மீது அடுத்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தனது பெயர் தவறாக தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள லால்குடி அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸின் சகோதரர் ஜான் பிரிட்டோ, மாரிதாஸ், ஸ்ரீ ஐயர் உள்ளிட்டோர் மீது சென்னை காவல் ஆணையர்…
சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வழிப்பறி, திருட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் போலீசார் ட்ரோன் கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையின் போது, நீண்ட நாட்களாக போலீசாரால் தேடப்பட்டு வந்த இரண்டு குற்றவாளிகள் சிக்கியுள்ளனர். சென்னையின் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றான கோயம்பேடு காய்கறி, கனி மற்றும் பூ மார்க்கெட் பகுதிகளில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க காவல்துறையினர் தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். சமீபகாலமாக கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வழிப்பறி, செல்போன் திருட்டு, அடிதடி மற்றும் சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தரப்பில் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கோயம்பேடு காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, ட்ரோன் கேமராக்கள் மூலம் மார்க்கெட் வளாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் வான்வழியாக கண்காணிக்கப்பட்டன. சந்தேகத்திற்கிடமான…
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், 3 நாட்கள் பயணமாக நாளை, புதன்கிழமை தனி விமானத்தில் டெல்லி செல்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக கடந்த மே மாதம் 27 ம்தேதி டெல்லி சென்றார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை மட்டும் சந்தித்து விட்டு, மறுநாள் சென்னை திரும்பி விட்டார். இந்த நிலையில் டெல்லியில் வரும் 11 ம் தேதி வியாழக்கிழமை, நிதி ஆயோக் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களும், கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யும், பிரதமர் தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, 3 நாட்கள் பயணமாக, நாளை 10 ம் தேதி, புதன்கிழமை காலை 8 மணிக்கு, சென்னையில் இருந்து தனி விமானத்தில், டெல்லிக்கு புறப்பட்டுச்…
தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கட்சியின் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான விவகாரத்தில் முக்கிய அறிவிப்பை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வெளியிட்டுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அதிமுக உறுப்பினர்கள் தொடர்பான தகுதி நீக்க மனுக்கள் குறித்து விளக்கம் அளித்தார். தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அதிமுகவைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டுக்கு மாறாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சார்பில் முதற்கட்டமாக 25 உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு அளிக்கப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி நான்கு கடிதங்களை அனுப்பியிருந்ததாகவும், அவை அனைத்தும் சட்டப்பேரவை விதிகள் மற்றும் அரசியல் சட்டத்தின் 10-வது அட்டவணை (கட்சி தாவல் தடுப்பு சட்டம்) அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். த.வெ.க. அரசுக்கு ஆதரவு…
லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவருக்கு தொடர்புடைய நிறுவனங்களின் ரூ.457 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. கடந்த 2009-2010ஆம் ஆண்டுகளில் சிக்கிம் மாநில லாட்டரிகளை விதிமுறைகளை மீறி விற்பனை செய்ததன் மூலம், சிக்கிம் அரசுக்கு சுமார் ரூ.910 கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டி, லாட்டரி அதிபர் மார்ட்டின் உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தற்போது கேரள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சிபிஐ வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறையும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனியாக வழக்குப்பதிவு செய்து, மார்ட்டின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. அதன் பின்னர், அவருக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் ரூ.457 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன. அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கையை, பின்னர் அமலாக்கத் துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் உறுதி…
தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தனது முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாக தென் கொரியாவுக்கு சென்று, அந்நாட்டின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனமான ஹெச்.டி. ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (HD Hyundai Heavy Industries) அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார். தூத்துக்குடியில் உலகத் தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்துவது தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. தென் கொரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, உலகின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.டி. ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (HD Hyundai Heavy Industries) நிறுவனத்தின் உல்சான் கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்டார். அப்போது கப்பல் கட்டுமானம், உற்பத்தி மேலாண்மை மற்றும் கடல்சார் தொழில்நுட்ப வசதிகள் குறித்து ஆய்வு செய்ததுடன், நிறுவன அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையும் நடத்தினார். தூத்துக்குடியில் உலகத் தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கான திட்டமே இந்த சந்திப்பின்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்று தொடங்கிய நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்றது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் சட்டப்பேரவை துணைச் செயலாளர் தேன்மொழி ஆகியோர் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களும் இந்த நடைமுறையில் கலந்து கொண்டனர். தமிழக வெற்றிக் கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் பிரவீன் சக்கரவர்த்தி தனது வேட்புமனுவை தேவையான ஆவணங்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் முன்மொழிவுகளுடன் தாக்கல் செய்திருந்தார். பரிசீலனையின் போது அவரது வேட்புமனு செல்லுபடியாக இருப்பதாக தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். இந்தத் தேர்தலுக்காக மொத்தம் 15 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் பிரவீன் சக்கரவர்த்தியைத் தவிர மற்ற அனைவரும் சுயேட்சை…