Author: Editor web2
யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகர் மாரிதாஸ் கைது நடவடிக்கையை கண்டித்துள்ள அதிமுக, இது ஜனநாயக விரோத நடவடிக்கை என்றும், கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் முயற்சி என்றும் குற்றம்சாட்டியுள்ளது. மாரிதாஸ் தனது யூடியூப் தளத்தில் வெளியிட்ட கருத்துகளில், முதலமைச்சர் விஜயை “பொம்மை முதல்வர்” என விமர்சித்ததுடன், பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ தொடர்பாக அமலாக்கத்துறை (ED) மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குறித்த தகவல்களையும் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை அதிமுக எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அதிமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ பாசிசம், பாயாசம் என்று வாய்கிழிய டயலாக் பேசியவர்களின் ஆட்சி செய்யும் இந்த நடவடிக்கை என்ன? பாசிசமா? பாயாசமா? நீங்களும் பிரஸ் மீட் கொடுக்கவும் மாட்டீங்க… செய்தி நிறுவனங்கள் கேள்வி கேட்டால் Black Out பண்ணுவீங்க… யூட்யூப்-ல பேசினால் கைது பண்ணுவீங்க… What…
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில், இதுவரை கண்டறியப்படாத வகையில் கைப்பிடியுடன் கூடிய செந்நிற சுடுமண் பானை முதன்முறையாக கண்டெடுக்கப்பட்டுள்ளது தொல்லியல் ஆய்வாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் 11-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த மார்ச் 18-ஆம் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. கீழடி கிராமத்தில் கஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் இந்த அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை ஏழு அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், செங்கல் கட்டுமானங்கள், கழிவுநீர் வடிகால் அமைப்புகள், சுடுமண் சாயக் கிண்ணங்கள், தக்கழிகள், பாசி மணிகள் மற்றும் பல்வேறு வகையான பானை ஓடுகள் உள்ளிட்ட ஏராளமான தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கீழடி பகுதி நகரமயமான குடியிருப்பாக விளங்கியதற்கான ஆதாரங்களாகக் கருதப்படுகின்றன. கீழடியில் முந்தைய 10 கட்ட அகழாய்வுகளின் போது கெண்டி மூக்கு பானைகள்,…
தமிழக அரசியலில், அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு உருவாகியுள்ள புதிய அரசியல் சூழலில், முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள “வி த லீடர்ஸ்” (We The Leaders) இயக்கம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்கம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளதாக வெளியான தகவல்களும், பாஜக நிர்வாகிகள் சிலர் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுவதும் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை பின்னால் செல்லும் பாஜகவினர் கடந்த சில ஆண்டுகளாக தமிழக பாஜகவின் முகமாக அண்ணாமலை செயல்பட்டார். பாரம்பரியமாக குறைந்த வாக்கு வங்கியுடன் இருந்த பாஜகவை சமூக ஊடகங்கள், நேரடி கள அரசியல் மற்றும் தீவிர பிரச்சாரங்கள் மூலம் மாநில அரசியலின் முக்கிய விவாதப் பொருளாக மாற்றியதில் அவரது பங்கு மறுக்க முடியாதது. குறிப்பாக “என் மண் என் மக்கள்” யாத்திரை, முந்தைய திமுக அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த தொடர்…
விழுப்புரத்தில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்ட 6 அடி உயர அண்ணல் அம்பேத்கர் சிலையைக் காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் நள்ளிரவில் கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்திய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான தொல். திருமாவளவன் மற்றும் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினரும், சமூகநீதி அமைச்சருமான வன்னி அரசு ஆகியோர் நேற்று விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தந்தனர். மாவட்ட எல்லை முதற்கொண்டே அவர்களுக்கு விசிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வந்தனர். இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் பழைய மருத்துவமனை எதிரே உள்ள ஜி.ஆர்.பி. தெருவின் முனையில், விசிக மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் காசிநாதன் ஏற்பாட்டில் 6 அடி உயரமுள்ள புதிய அம்பேத்கர் சிலை ஒன்று நிறுவப்பட்டிருந்தது. நேற்று இரவு 9 மணியளவில் விசிக தலைவர் திருமாவளவன் அந்தச் சிலையைத் திறந்து வைப்பதற்காக அங்கே வருகை தந்தார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த…
அதிமுக தொண்டர்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இன்று இணைந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அதிமுக தொண்டர்களின் வாக்குகள்தான் தவெகவின் வெற்றிக்கு முக்கிய காரணம் எனக் கூறியிருந்தார். மேலும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக மட்டுமின்றி அதிமுகவும் பெரிய சவால்களை சந்திக்கும் என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, “அதிமுகவில் பதவி சுகம் அனுபவித்தவர்கள் இன்று தவெகவில் இணைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பல்வேறு தவறான கருத்துக்களை, தான் தோன்றித்தனமாக தெரிவித்துள்ளார். அவருக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஒரு கட்சியில் உறுப்பினராக இருந்து, கொள்கை ரீதியாக தலைவராக ஏற்றுக்கொண்டு, தன்னை முழுமையாக ஆட்படுத்திக் கொண்டு இருந்தால்…
அரசியல் களத்தில் ஒரு கட்சியைத் தொடர்ச்சியாக உயிர்ப்புடன் வைத்திருக்கவும், அதன் உட்கட்டமைப்பை அடிமட்ட அளவில் வலுவாகப் பேணவும் எம்.எல்.ஏ., எம்.பி அல்லது அமைச்சர் பதவிகளைத் தாண்டி, உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகள் மிக முக்கியமானவை. வார்டு உறுப்பினர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள் மூலமாகத்தான் ஒரு கட்சியால் உள்ளூர் பகுதி மக்களுடன் நேரடியாக நெருக்கமாகி, தங்களின் கொள்கைகளைக் கொண்டு சேர்க்க முடியும். அந்த வகையில், இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய போர்க்களமாக மாறப் போகிறது. சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிகபட்ச இடங்களை வாரிக் குவிக்கத் தமிழக வெற்றி கழகம் மிக பிரம்மாண்டமான வியூகங்களை வகுத்து வருகிறது. கொத்து கொத்தாக இணையும் அதிமுக நிர்வாகிகள் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டுத் தவெகவின் உட்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வரும் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய், முதல்கட்டமாகத் தமிழகத்தின்…
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக மற்றும் காங்கிரஸ் இடையே வெடித்துள்ள மோதலும், பகிரங்கமான வார்த்தைப் போர்களும், தேசிய அளவிலான ‘இந்தியா’ கூட்டணியின் அடித்தளத்தையே உலுக்கத் தொடங்கியுள்ளது. ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறவிருக்கும் ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக திமுக எடுத்துள்ள அதிரடி முடிவும், அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியை நேரடியாகக் குறிவைத்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘முரசொலி’யில் வெளியான தலையங்கமும் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ராகுலை விளாசிய ‘முரசொலி’ முரசொலி நாளிதழ் வெளியிட்டுள்ள ‘தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்ட ராகுல்!’ என்ற காரசாரமான தலையங்கம், காங்கிரஸ் கட்சி மீதான திமுகவின் உச்சக்கட்ட கோபத்தைப் பறைசாற்றுகிறது. “தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் பொதுத்தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இழைத்த துரோகத்தினால் கழகத் தோழர்கள் மிகுந்த மனக்காயமுற்றிருக்கிறார்கள்” என்று அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், ராகுல் காந்தியின் தன்னிச்சையான மற்றும் ஆணவமான…
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் ஆம்னி பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து தான் இயக்கப்பட வேண்டும் என்றும், சென்னை நகருக்குள் நுழையக்கூடாது என்றும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என, கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி மாநில போக்குவரத்து துறை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் சார்பிலும், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பிலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், போரூர், சூரப்பட்டு ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்க ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதியளித்ததுடன், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும் எனவும் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணையை மேற்கொண்ட நீதிபதி வி.லட்சுமி நாராயணன், தமிழ்நாடு மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி, பேருந்து முனையம் அமைக்க…
மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், முதல்வர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்ற விமர்சனத்திற்கு பதிலளித்தார். “முதல்வர் கட்டாயம் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என்ற நடைமுறை எதுவும் இல்லை. கடந்த காலங்களில் சிலர் தங்களது அரசியல் இருப்பை வெளிக்காட்ட தினசரி செய்தியாளர்களை சந்தித்திருக்கலாம். ஆனால், எங்கள் முதல்வர் தினந்தோறும் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கவனித்து வருகிறார். மக்களுக்குத் தேவையான தகவல்களை உரிய நேரத்தில் தெளிவுபடுத்தி வருகிறோம். செய்தியாளர்களை சந்திப்பதுதான் அரசியலின் அடையாளம் அல்ல” என்று தெரிவித்தார். திருப்பரங்குன்றம் மலை தீபமேற்றும் விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள். கடந்த ஆண்டுகளாக இருந்த நிலை தொடர வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு.…
தமிழக அரசியல் களத்தில் இன்று மேலும் ஒரு பரபரப்பான நிகழ்வை எதிர்கொண்டுள்ளது. தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி, ‘We The Leader’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக இன்று அறிவித்த இதே நாளில், ஒட்டுமொத்த தமிழகத்தையும் உற்றுநோக்க வைக்கும் வகையில் மற்றொரு மெகா அறிவிப்பும் வெளியாகியுள்ளது. லதா ரஜினிகாந்த் புதிய இயக்கம் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், ’மக்கள் மேடை / மக்கள் இயக்கம்’( (Citizens’ Platform / People’s Movement) என்கிற பெயரில் ஒரு புதிய மக்கள் இயக்கத்தைத் தொடங்கி, அதன் நோக்கங்கள் குறித்த ஒரு பிரத்யேக வீடியோவை வெளியிட்டு அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அண்ணாமலையின் அரசியல் கட்சி அறிவிப்பு வெளியான அதே சில மணி நேர இடைவெளியில், லதா ரஜினிகாந்தும் தனது புதிய முழக்கத்தை முன்வைத்து வீடியோ வெளியிட்டிருப்பது தற்செயலானது தானா அல்லது இதன்…