Author: Editor web2
முந்தைய திமுக ஆட்சி காலத்தில், நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில், முந்தைய திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த கே.என். நேரு மீது தமிழக ஊழல் கணகாணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாக துறையில், 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கூறி, இதுசம்பந்தமாக கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி, தமிழக டிஜிபி-க்கு, அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது. ஆனால், அப்போது திமுக ஆட்சியில் இருந்ததால், வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில், அமலாக்கத்துறையின் கடிதத்தின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்…
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில் புதிய அரசு ஆட்சி பொறுப்பேற்றக்கூடிய நிலையில் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. இந்த நிலையில் 2026-2027 ஆண்டிற்கான பட்ஜெட் குறித்தான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெரும் கூடத்தில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன், இலாகா ஒதுக்கப்படாமல் இருக்கும் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் திமுக சட்டமன்ற கட்சித் தலைவர் நாஜும் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். வருகின்ற நிதி ஆண்டிற்கான நிதி நிலை குறித்த துறை ரீதியான ஆலோசனை நடைபெற்றது. இதில் 13.397 கோடி ரூபாய் காண திட்ட மதிப்பீட்டிற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஒப்புவதற்கு அனுப்பி வைக்கப்படுவார் அதன் பிறகு…
மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரவீன் சக்கரவர்த்தியின் சமூக வலைதள பதிவு புதிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்துக்கான காலியாக உள்ள இடத்துக்கு தவெக போட்டியியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த இடத்தை தங்களுக்கு விட்டுத்தர கோரியது காங்கிரஸ் கட்சி. அந்த கோரிக்கையை விஜய் ஏற்றுக்கொண்டதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் தேசிய தரவுப் பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணியின் (தவெக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஎம்) முதல் எம்.பி. வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாக கருதுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது மீது நம்பிக்கை வைத்த ராகுல் காந்தி மற்றும் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்து, நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் குரலாக செயல்படுவேன் என்றும் அவர் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்த நிலையில்,…
பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் வகையில் தனி அரசியல் இயக்கத்தை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளார். “அதிக மக்களை இணைக்கும் புதிய அரசியல் தேவை” என்று கூறியுள்ள அவர், அடுத்த தேர்தலிலேயே தனது புதிய கட்சி களமிறங்கும் என்றும் தெரிவித்துள்ளார். பாஜகவின் முன்னாள் தமிழகத் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து தனது எதிர்கால அரசியல் திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார். “என்னுடைய பாதை வேறு. நிறைய மக்களை இணைத்து, அடிப்படை கட்டமைப்புகளை மாற்றக்கூடிய புதிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்கள் வாயிலாக வெளியிட்டுள்ள காணொளியில் பேசிய அண்ணாமலை, 2020 ஆகஸ்ட் 25-ஆம் தேதி பாஜகவில் இணைந்து சுமார் ஆறு ஆண்டுகள் தமிழக மக்களுக்காக பணியாற்றியதை தனது அரசியல் வாழ்க்கையின் முக்கியமான காலமாகக் குறிப்பிட்டார். அதேநேரத்தில், தனது அரசியல் இலக்குகள் மேலும் விரிவானவை என்றும், புதிய அரசியல்…
திண்டுக்கல் – திருச்சி வழித்தடத்தில் அரசுப் பேருந்துகளை நேரில் இயக்காமலேயே, ஆவணங்களில் மட்டும் பேருந்துகள் இயங்கியதாகக் காட்டி, போலி பயணச்சீட்டுகளைப் பயன்படுத்தி அரங்கேற்றப்பட்ட பெரும் ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) விரிவான விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு வேடசந்தூரிலிருந்து திருச்சிக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில், 3 வெவ்வேறு விதமான பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டதும், ஒரே வழித்தடத்தில் 3 பேருந்துகள் இயக்கப்பட்டது போன்ற போலி பதிவுகள் உருவாக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக, அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் பி.கார்த்திக் ராஜா மற்றும் இளநிலை உதவியாளர் பி.சிவராஜ் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகப் போக்குவரத்துக் கழகம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, இந்த மோசடி குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி முருகேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி தனது…
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குப் (MGNREGA) பதிலாக, ‘விக்சித் பாரத் – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்திரவாத இயக்கம் (கிராமின்)’ என்ற புதிய 125 நாள் வேலைத் திட்டத்தை ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இப்புதிய திட்டத்தின் வரைவு அறிக்கையில், தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு வரலாறு காணாத வகையில் குறைக்கப்பட்டுள்ளம் நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்குப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். 12 நாட்கள் கூட வேலை வழங்க முடியாது இதுதொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”125 நாள் வேலைத் திட்டத்திற்காக இந்தியா முழுவதும் ரூ.95,692 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு வெறும் ரூ.3,923 கோடி (4.09%) மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்தத் திட்டத்திற்குத் தமிழகத்திற்கு 10 விழுக்காட்டிற்கும் மேல் நிதி கிடைத்த…
திருச்சி, கீழப்புலிவார் ரோடு பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, மதுபானம் கலந்த குளிர்பானம் கொடுக்கப்பட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் திருச்சி கோட்டைப் பகுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வரும் நிலையில், இந்த விவகாரம் தற்போது ஆளுங்கட்சியான தவெக (தமிழக வெற்றி கழகம்) அரசுக்கு எதிரான மிகப்பெரிய அரசியல் விவாதமாக உருவெடுத்துள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் (X) தளத்தில் தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை மிகக் காரசாரமாக விமர்சித்துள்ளார். பீதியில் பெண்கள் இதுதொடர்பாக கனிமொழி விடுத்துள்ள அறிக்கையில், “திருச்சியில் 14 வயது சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. தொடர்ச்சியாக அரங்கேறும் இதுபோன்ற கொடூர குற்றச் சம்பவங்களால் தமிழ்நாட்டுப் பெண்கள் தங்களின் பாதுகாப்புக் குறித்து பெரும் பீதியில் உறைந்து…
ரூ.18,600 கோடி முதலீட்டில் 8,200 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் எல் அண்ட் டி (லார்சன் & டூப்ரோ) நிறுவனம் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதல்வர் ச.ஜோசப் விஜய்யை இன்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல், கட்டுமானம், உற்பத்தி மற்றும் தொழில்நுட்பக் குழுமங்களில் ஒன்றான லார்சன் & டூப்ரோ லிமிடெட் (Larsen & Toubro) நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எஸ். என். சுப்ரமண்யன் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது, லார்சன் & டூப்ரோ லிமிடெட் (L&T) நிறுவனம், தமிழ்நாட்டில் பின்வரும் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு தமிழக முதல்வர் .ச.ஜோசப் விஜய் முன்னிலையில், தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15,000 கோடி ரூபாய் முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்…
கேரளப் பகுதிகளில் இன்று (ஜூன் 4) முறைப்படி தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தற்போது தமிழகத்தின் சில பகுதிகள், கர்நாடகா, லட்சத்தீவு மற்றும் வங்கக்கடல் பகுதிகளிலும் வேகமாக முன்னேறியுள்ளது. இதன் காரணமாகத் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்குப் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை 26 மாவட்டங்களில் கனமழை பருவமழை தீவிரமடைந்து வருவதால், நாளை (ஜூன் 5) தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பூர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 26 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 6 முதல் 10 வரை மழை நீடிக்கும்…
மின்சார வாரிய தலைமையகத்திலிருந்து நிலக்கரி கொள்முதல், டெண்டர்கள் மற்றும் முக்கியத் திட்டங்களின் ஆவணங்கள் அடங்கிய 18 கணினி ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானதாக சொல்லப்படும் விவகாரம், தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில், மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்பவே ஏதோ தவறு நடந்தது போல தோற்றத்தை உருவாக்கி வருவதாக தவெக அரசு மீது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “தவெக அரசு பொறுப்பேற்று இதுவரைக்கும் மின் விநியோகம் தொடர்பாக ஓர் ஆய்வுக்கூட்டத்தை கூட மின்சாரத்துறை அமைச்சர் நடத்தவில்லை. கடைநிலை வரைக்கும் உள்ள அதிகாரிகளிடம் ஆய்வுக்கூட்டம் நடத்தினால்தான் எந்த ஊரில் என்ன பிரச்சினை என்று தெரியும். அமைச்சரே தன்னை யாரோ மிரட்டுவதாக சொல்கிறார்; அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாமானியர்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது எனப் பாருங்கள். டெண்டர் விடுவதில் யாரும்…