Close Menu
    What's Hot

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»ரூ.634 கோடி லஞ்சப் புகார்… மீண்டும் சிக்கும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு!
    Featured

    ரூ.634 கோடி லஞ்சப் புகார்… மீண்டும் சிக்கும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு!

    Editor web2By Editor web2June 5, 2026Updated:June 5, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    KN Nehru
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முந்தைய திமுக ஆட்சி காலத்தில், நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    அமலாக்கத்துறை கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில், முந்தைய திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த கே.என். நேரு மீது தமிழக ஊழல் கணகாணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த திமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாக துறையில், 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கூறி, இதுசம்பந்தமாக கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி, தமிழக டிஜிபி-க்கு, அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது. ஆனால், அப்போது திமுக ஆட்சியில் இருந்ததால், வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

    இந்த நிலையில், அமலாக்கத்துறையின் கடிதத்தின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யாததை எதிர்த்து இன்பதுரை தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த  உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசும், முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்படிருந்தன. இந்த அனைத்து வழக்குகளும் ஜூன் 23ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

    நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக நேரு தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் முறையீடு செய்தார். இதையடுத்து அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், நகராட்சி நிர்வாகத் துறையில் அதிகாரிகள் நியமனம் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

    அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட வழக்குகள் விசாரணை இம்மாத இறுதியில் விசாரணைக்கு உள்ள நிலையிலும், அடுத்த விசாரணை வரை எந்த கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட மாட்டாது என முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவாதம் அளித்த நிலையில், எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார்.

    இதுதொடர்பாக விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமுமில்லை..!! ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!
    Next Article பட்டாசு ஆலையில் தீ விபத்து!. 100% தீக்காயங்களுடன் தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை!
    Editor web2
    • Website

    Related Posts

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    June 8, 2026

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    June 8, 2026

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    June 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    ‘‘சிங்கப் பெண்’’ அதிரடிப் படைத் திட்டம் நாளை (ஜூன் 9) தொடக்கம்!

    ’இந்தியா’ கூட்டணியில் காங்கிரசுக்கு எதிராக வெடித்த திருமா… திமுகவை கூல் பண்ணவா?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.