Close Menu
    What's Hot

    சட்டவிரோத பட்டாசு தயாரிப்பா… கூப்பிடுங்க 96009 69100 – விருதுநகர் மாவட்ட காவல் துறை அறிவிப்பு!  

    இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

    தமிழ்நாடு அரசு இயற்கை வளங்களை பாதுகாத்து வருகிறது – அமைச்சர் டாக்டர். TK. பிரபு பெருமிதம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பட்டாசு ஆலையில் தீ விபத்து!. 100% தீக்காயங்களுடன் தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை!
    Featured

    பட்டாசு ஆலையில் தீ விபத்து!. 100% தீக்காயங்களுடன் தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை!

    Editor web3By Editor web3June 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    firecracker factory viruthunagar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிழ்த்தான் கிராமத்தில் APR என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று வழக்கம்போல் பட்டாசு தயாரிப்பு மற்றும் அது சார்ந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

    அப்போது, ஆலையில் தேங்கியிருந்த பட்டாசு கழிவுகளைச் சேகரித்து எரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அந்தச் சமயத்தில் எதிர்பாராதவிதமாகப் பட்டாசு கழிவுகள் திடீரென வெடித்துச் சிதறி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த கருப்பசாமி என்ற பட்டாசு தொழிலாளி தீப்பொறி பட்டு நிலைகுலைந்தார். கண் இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியதில் அவர் படுகாயமடைந்தார்.

    ஆலையில் இருந்த மற்ற தொழிலாளர்கள் அவரை மீட்டு, உடனடியாகச் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 100% தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்துப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரூ.634 கோடி லஞ்சப் புகார்… மீண்டும் சிக்கும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு!
    Next Article எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன நபர்..!! இறுதி சடங்கின்போது திரும்பி வந்த அதிசயம்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    சட்டவிரோத பட்டாசு தயாரிப்பா… கூப்பிடுங்க 96009 69100 – விருதுநகர் மாவட்ட காவல் துறை அறிவிப்பு!  

    July 28, 2026

    இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

    July 28, 2026

    தமிழ்நாடு அரசு இயற்கை வளங்களை பாதுகாத்து வருகிறது – அமைச்சர் டாக்டர். TK. பிரபு பெருமிதம்

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டவிரோத பட்டாசு தயாரிப்பா… கூப்பிடுங்க 96009 69100 – விருதுநகர் மாவட்ட காவல் துறை அறிவிப்பு!  

    இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

    தமிழ்நாடு அரசு இயற்கை வளங்களை பாதுகாத்து வருகிறது – அமைச்சர் டாக்டர். TK. பிரபு பெருமிதம்

    நாகப்பட்டினம் : பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து..! இருவர் உயிரிழப்பு..!

    மாயமான டீக்கடை தொழிலாளி கிணற்றில் சடலமாக கண்டெடுப்பு… கொலையா? போலீசார் விசாரணை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.