Close Menu
    What's Hot

    கோவை: மீன் தொட்டி சுத்தம் செய்வதில் தகராறு..! கத்தியுடன் நடந்த சண்டையின் சிசிடிவி வெளியீடு..!

    பயணிகளின் கனிவான கவனத்திற்கு.! செல்போன் பயன்பாடு, பாட்டு ஒலிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு!

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ-வுக்கு ஜாமின் கிடைக்குமா?- இன்று விசாரணை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»8,200 வேலைவாய்ப்பு… மூன்று திட்டங்கள்…  எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்!
    Featured

    8,200 வேலைவாய்ப்பு… மூன்று திட்டங்கள்…  எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

    Editor web2By Editor web2June 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    LT MoU
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ரூ.18,600 கோடி முதலீட்டில் 8,200 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் எல் அண்ட் டி (லார்சன் & டூப்ரோ) நிறுவனம் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதல்வர் ச.ஜோசப் விஜய்யை இன்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல், கட்டுமானம், உற்பத்தி மற்றும் தொழில்நுட்பக் குழுமங்களில் ஒன்றான லார்சன் & டூப்ரோ லிமிடெட் (Larsen & Toubro) நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எஸ். என். சுப்ரமண்யன் சந்தித்து கலந்துரையாடினார்.

    இந்த சந்திப்பின்போது, லார்சன் & டூப்ரோ லிமிடெட் (L&T) நிறுவனம், தமிழ்நாட்டில் பின்வரும் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு தமிழக முதல்வர் .ச.ஜோசப் விஜய் முன்னிலையில், தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15,000 கோடி ரூபாய் முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தகவல் தரவு மைய விரிவாக்கத் திட்டம்.

    கோயம்புத்தூரில் 2,500 கோடி ரூபாய் முதலீட்டில் 2,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின்னணுப் பொருட்கள் மற்றும் மின்னணு அமைப்புகள் உற்பத்தித் திட்டம்.

    திருவள்ளூர் மாவட்டத்தில், 1,100 கோடி ரூபாய் முதலீட்டில் 5,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காட்டுப்பள்ளி L&T கப்பல் கட்டும்தளம் விரிவாக்கத் திட்டம்.

    2036-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்ற முதல்வரின் லட்சிய இலக்கினை எய்துவதற்கான முயற்சியின் மைல் கல்லாக அமைந்துள்ள பல்துறை சார்ந்த இம்முதலீடுகளின் மூலம், மாநிலத்தில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவுச் செயல்பாடுகள் வளர்ச்சி பெறுவதுடன், மின்னணுவியல் உற்பத்தி சூழலமைப்பு மேம்படும். மேலும் காட்டுப்பள்ளி திட்டம், கடலோர காற்றாலை கட்டுருவாக்கத் தொழிலுக்கு உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பைக் கொண்டுவரும்.

    இத்திட்டங்கள் செயலாக்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பெரிய அளவிலான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், மாநிலத்தின் பொருளாதாரமும் மேம்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், தொழில் துறையில் மேற்கொள்ளப்படும் முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுளிரப்போகும் தமிழகம்… 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
    Next Article ”தொடரும் குற்றங்கள்…  எதற்குமே பொறுப்பேற்காத அரசு” – கனிமொழி காட்டம்!
    Editor web2
    • Website

    Related Posts

    கோவை: மீன் தொட்டி சுத்தம் செய்வதில் தகராறு..! கத்தியுடன் நடந்த சண்டையின் சிசிடிவி வெளியீடு..!

    July 28, 2026

    பயணிகளின் கனிவான கவனத்திற்கு.! செல்போன் பயன்பாடு, பாட்டு ஒலிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு!

    July 28, 2026

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ-வுக்கு ஜாமின் கிடைக்குமா?- இன்று விசாரணை!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கோவை: மீன் தொட்டி சுத்தம் செய்வதில் தகராறு..! கத்தியுடன் நடந்த சண்டையின் சிசிடிவி வெளியீடு..!

    பயணிகளின் கனிவான கவனத்திற்கு.! செல்போன் பயன்பாடு, பாட்டு ஒலிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு!

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ-வுக்கு ஜாமின் கிடைக்குமா?- இன்று விசாரணை!

    சஞ்சு சாம்சன் VS அபிஷேக் சர்மா!. “கடினமான முடிவை” எடுங்கள்!. தேர்வுக்குழுவுக்கு அறிவுறுத்தல்!

    பதக்க வேட்டையில் இந்தியா: காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று அசத்தல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.