Close Menu
    What's Hot

    ”125 நாள் வேலைத் திட்டத்தில் இனி 12 நாள் கூட வேலை கிடைக்காது”

    ”தொடரும் குற்றங்கள்…  எதற்குமே பொறுப்பேற்காத அரசு” – கனிமொழி காட்டம்!

    8,200 வேலைவாய்ப்பு… மூன்று திட்டங்கள்…  எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»”125 நாள் வேலைத் திட்டத்தில் இனி 12 நாள் கூட வேலை கிடைக்காது”
    தமிழ்நாடு

    ”125 நாள் வேலைத் திட்டத்தில் இனி 12 நாள் கூட வேலை கிடைக்காது”

    Editor web2By Editor web2June 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbumani 125 days work
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குப் (MGNREGA) பதிலாக, ‘விக்சித் பாரத் – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்திரவாத இயக்கம் (கிராமின்)’ என்ற புதிய 125 நாள் வேலைத் திட்டத்தை ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இப்புதிய திட்டத்தின் வரைவு அறிக்கையில், தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு வரலாறு காணாத வகையில் குறைக்கப்பட்டுள்ளம் நிலையில்,  மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்குப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

    12 நாட்கள் கூட வேலை வழங்க முடியாது

    இதுதொடர்பாக அன்புமணி  வெளியிட்டுள்ள அறிக்கையில், ”125 நாள் வேலைத் திட்டத்திற்காக இந்தியா முழுவதும் ரூ.95,692 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு வெறும் ரூ.3,923 கோடி (4.09%) மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த காலங்களில் இந்தத் திட்டத்திற்குத் தமிழகத்திற்கு 10 விழுக்காட்டிற்கும் மேல் நிதி கிடைத்த நிலையில், தற்போது அது பாதியாகக் குறைக்கப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும்.

    2023-24-ல் ரூ.12,136 கோடியாக இருந்த இந்த நிதி, தற்போது வெறும் ரூ.3,923 கோடியாகச் சுருங்கியுள்ளதால், கிராமப்புற ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு 12 நாட்கள் கூட வேலை வழங்க முடியாது” என அவர் கவலை தெரிவித்துள்ளார்.

    முன்பு மாநிலங்களின் மனித ஆற்றல் தேவையின் அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 16-ஆவது நிதி ஆணையத்தின் வரிப்பகிர்வுப் பரிந்துரைகளின்படி மறைமுக வரி வருவாயை அடிப்படையாகக் கொண்டு நிதி ஒதுக்குவதே இச்சரிவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

    நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 9.4% பங்களிப்பைத் தரும் தமிழகத்திற்கு, நிதிப்பகிர்வில் 4.07% மட்டுமே வழங்குவது ஏமாற்று வேலைம் என்று அவர் விமர்சித்துள்ளார்.

    தமிழக அரசுக்கு வேண்டுகோள்

    மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, வளர்ச்சியை எட்டியதற்காகத் தமிழகத்தைத் தண்டிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள அன்புமணி, ”மாநில உரிமைகளுக்கு எதிரான இந்த வரைவுத் திட்ட அறிக்கையைத் தமிழக அரசு எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. பழைய முறைப்படியே தேவையின் அடிப்படையில் நிதி ஒதுக்கக் கோரியும், மொத்த நிதியில் குறைந்தபட்சம் 10% தமிழகத்திற்குப் பெற்றுத்தரவும் மாநில அரசு மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”தொடரும் குற்றங்கள்…  எதற்குமே பொறுப்பேற்காத அரசு” – கனிமொழி காட்டம்!
    Editor web2
    • Website

    Related Posts

    ”தொடரும் குற்றங்கள்…  எதற்குமே பொறுப்பேற்காத அரசு” – கனிமொழி காட்டம்!

    June 4, 2026

    8,200 வேலைவாய்ப்பு… மூன்று திட்டங்கள்…  எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

    June 4, 2026

    குளிரப்போகும் தமிழகம்… 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”125 நாள் வேலைத் திட்டத்தில் இனி 12 நாள் கூட வேலை கிடைக்காது”

    ”தொடரும் குற்றங்கள்…  எதற்குமே பொறுப்பேற்காத அரசு” – கனிமொழி காட்டம்!

    8,200 வேலைவாய்ப்பு… மூன்று திட்டங்கள்…  எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

    குளிரப்போகும் தமிழகம்… 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்புவதாக  செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.