Author: Editor web2
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அண்மையில் ஆற்றிய உரை தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ள சர்ச்சைக்கு திமுக விளக்கம் அளித்துள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேச்சு தொடர்பாக எழுந்துள்ள அரசியல் விவாதங்களுக்கு விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் புதிதாக ஒரு ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகிறது. இந்த ஒரு மாதமும் டிவியைப் பார்த்தாலும் நாளிதழ்களைத் திருப்பினாலும் கொலையும், கொள்ளையும், பாலியல் வன்கொடுமைகளும், போதை மருந்து நடமாட்டமும் தான் செய்திகளாக இருக்கின்றன. பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஆளும் கட்சியான த.வெ.க. நிர்வாகிகளே சம்பந்தப்பட்டு உள்ளனர். ஆளும்கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், சொந்தக் கட்சிக்காரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அந்தப் பெண்ணால் குற்றம் சாட்டப்படும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ மீது இதுவரை நடவடிக்கை இல்லை. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியை…
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வடகிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்புரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து, தொண்டர்களின் எழுச்சியைக் கண்டு கலைஞரின் புகழ்மட்டம் சற்றும் குறையவில்லை என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். மேலும், தோல்விகளைக் கண்டு துவளாமல் மக்கள் பணியைத் தொடர வேண்டும் என்று தனது கவித்துவமான பேச்சால் மேடையை அதிரவைத்தார். அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். இது குறித்து வைரமுத்து தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: கலைஞரின் 103ஆம் பிறந்தநாள் விழாவுக்கு சேகர்பாபு ஏற்பாடு செய்திருந்தார். கூட்டத்தின் எழுச்சியும் உணர்ச்சியும் கலைஞரின் புகழ்மட்டம் குறைந்துவிடவில்லை என்று கும்மியடித்தன. “தோல்வியில் வழி காண்கிறவன் மேதை; பழி போடுகிறவன் கோழை. இயக்கங்களுக்கும் தனிமனிதர்களுக்கும் தோல்வி என்பது ஆசான் தோல்வி என்பது சோர்வதற்கல்ல; ரப்பர் மரத்திற்கு ரணங்கள் புதிதல்ல தோல்வியைத் தூர நிறுத்திவிட்டு…
தமிழ்நாடு மின்சார வாரிய வரலாற்றில் முதல்முறையாக 300 உதவி பொறியாளர்களுக்கு செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டதையொட்டி, மின்வாரிய பொறியாளர்கள் சங்கம் சார்பில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கு பாராட்டு விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மின்வாரியத்தில் நிலவி வந்த டெண்டர் முறைகேடுகளை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். “கடந்த காலங்களில் டெண்டர் மதிப்பீடுகளில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. 600 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு டெண்டரில் மட்டும் சுமார் 397 கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு மிகப்பெரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. 30 முதல் 35 சதவீதம் வரை ஏற்பட்ட நிதி கசிவை தடுக்கும் வகையில் புதிய டெண்டர் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் கூறினார். புதிய நடைமுறையின்படி, சந்தை விலை மற்றும் உற்பத்தியாளர்களின் நேரடி விலையை அடிப்படையாகக்…
டெல்லியில் இன்று நடைபெற்ற ‘இந்தியா’ (INDIA) கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவரும் எம்பியுமான தொல். திருமாவளவன், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது தேசிய அரசியலிலும், தமிழக அரசியலிலும் ஒரு புதிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. திருமா பேசியது என்ன? “நரேந்திர மோடி அரசின் தவறான வெளியுறவு கொள்கையால் இப்போது நாடு திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளது. நம்முடைய அந்நிய செலாவணி கையிருப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.இதை அம்பலப்படுத்தி நாடு தழுவிய அளவில் நரேந்திர மோடி அரசுக்கு எதிரான போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும். இந்தப் போராட்டங்களை செய்வதற்கு எதிர்க்கட்சிகள் இடையே புரிந்துணர்வும் ஒற்றுமையும் அவசியம். அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களின் போது காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கேரளா, மேற்குவங்கம், தமிழ்நாடு…
தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், துறையை நவீனப்படுத்தி ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்சார வாரிய வரலாற்றில் முதல்முறையாக 300 உதவி பொறியாளர்களுக்கு செயற்பொறியாளர்களாக பதவி உயர்வை வெளிப்படை தன்மையுடன் வழங்கியதாக அமைச்சர் நிர்மல் குமாருக்கு மின்வாரிய பொறியாளர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா, இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மின்வாரியத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் , மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், ” மின்சார வாரியத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக உதவிப் பொறியாளர்களாகப் பணிபுரிந்து, பதவி உயர்வு கிடைக்காமல் சட்டப் போராட்டம் நடத்தி வந்த 300 ஊழியர்களுக்கு, உடனடியாகச் செயற்பொறியாளர்களாகப்…
தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பான ‘இந்தியா’ (INDIA) கூட்டணியின் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வியூகங்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான தற்போதைய உறவுகள் குறித்து விவாதிக்க இந்த மெகா கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகப் பல்வேறு அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், கூட்டணித் தலைவர்களுக்கு முக்கிய வேண்டுகோளையும் விடுத்தார். மாநிலங்கள் மீதான பாகுபாடும் பொருளாதார வீழ்ச்சியும் தொடக்க உரை ஆற்றிய மல்லிகார்ஜுன கார்கே, பாரதிய ஜனதா கட்சி ஆளாத மாநில அரசுகளுக்கு எதிராக மத்திய அரசு மிகக் கடுமையான முறையில் பாகுபாடு காட்டி வருவதாகக் குற்றம் சாட்டினார். நாட்டின் பொருளாதாரச் சூழல் மிகவும் எதிர்மறையாக உள்ளதால், அத்தியாவசியப் பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து…
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) இடத்திற்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல், இன்று பிற்பகல் 3 மணியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. இந்தத் தேர்தலில் ஆளும் தமிழக வெற்றி கழகம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் சார்பில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளதாலும், பிரதான எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இந்தத் தேர்தலில் தங்களது வேட்பாளர்களைக் களம் இறக்காமல் முழுமையாகப் புறக்கணித்துள்ளதாலும், பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி ஒருமனதாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வாகப்போவது உறுதியாகியுள்ளது. அரசியல் கட்சிகளைத் தாண்டி, இதுவரை சுமார் பத்துக்கும் மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். எனினும், ஒரு மாநிலங்களவை வேட்பாளரின் மனு ஏற்கப்பட வேண்டும் எனில், அதற்குப் போதிய எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவு…
யூடியூபர் மாரிதாஸ் மீதான தவெக அரசின் கைது நடவடிக்கை அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான தம்பி மாரிதாஸை தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது வன்மையான கண்டனதுக்குரியது. தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தொடர்ச்சியாகத் தோலுரித்து வரும் மாரிதாசைக் கைதுசெய்திருப்பது அதிகாரத் திமிரின் உச்சமாகும். மாரிதாசின் கருத்துகள் அவதூறானவை எனக் கருதினால் சட்டப்படியாக வழக்குத் தொடுக்கலாம்; மாறாக, எவ்வித விசாரணையும் இன்றி உடனடி கைது நடவடிக்கை என்பது சனநாயக விரோதமாகும். பட்டப்பகலில் படுகொலை செய்வோர், பாலியல் வன்கொடுமை செய்வோர், போதைப்பொருட்கள் விற்பனை செய்கின்ற கொடுங்குற்றவாளிகள் மீதெல்லாம் பாயாத அதிரடி கைது நடவடிக்கைகள், அரசை விமர்சிப்பவர்கள் மீது மட்டும் பாய்கிறது என்றால் இந்த அரசும் அதிகாரமும் யாருக்கானது? இதுதான் மக்கள் வேண்டிய மாற்றமா? ஆளும் தவெகவைச் சேர்ந்தவர்கள்…
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்ததாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும், வெளிச்சம் தொலைக்காட்சி தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவராகவும், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகமான ‘வெளிச்சம்’ தொலைக்காட்சியின் தொடக்கக் கால முக்கியப் பொறுப்பாளராகவும் இருந்தவர் பனையூர் பாபு. விசிகவின் தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய இவர், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த ஒரு முக்கிய முகமாக அறியப்பட்டார். ‘வெளிச்சம்’ தொலைக்காட்சி தொடங்கப்பட்டபோது, அதன் மேலாண்மையிலும் ஒளிபரப்புச் செயல்பாடுகளிலும் இவருக்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பு இருந்தது. எனினும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட கட்சியில் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், கட்சியின் செயல்பாடுகளில் இருந்து சற்று விலகியிருந்த இவர், விசிகவிலிருந்து முழுமையாக வெளியேறி நேற்று முறைப்படி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் ஆயிரக்கணக்கான விசிக தொண்டர்களுடன் இணைந்ததாக…
புதிய வக்ஃபு சட்டம் தமிழ்நாட்டில் இதுவரை அமல்படுத்தப்படாத நிலையில், புதிய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் விளக்கமளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான், இந்த ஆண்டுக்கான ஹஜ் பயண ஏற்பாடுகள் மற்றும் புதிய வக்பு சட்டம் தொடர்பாக முக்கிய விளக்கங்களை அளித்தார். ஹஜ் பயணிகள் பாதுகாப்பாகவும், சிரமமின்றியும் புனிதப் பயணத்தை மேற்கொள்ள தமிழக அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்திருந்ததாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆண்டு சுமார் 6,000 பேர் ஹஜ் பயணத்தை மேற்கொண்டதாகவும், அவர்களை அழைத்துச் செல்ல 16 விமானங்கள் இயக்கப்பட்டதாகவும் கூறினார். பயணிகளுக்கான தங்குமிடம், மருத்துவ வசதிகள், போக்குவரத்து மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார். மேலும், வரும் ஆண்டுகளில் ஹஜ் பயணிகளை அதிக வசதிகளுடன் அனுப்புவதற்கான திட்டங்களும் அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும்,ஹஜ் குழு மற்றும்…