Close Menu
    What's Hot

    லஞ்சம் – ஊழல் குறைந்துள்ளது – ஜோசப் விஜய் ஆட்சிக்கு அன்புமணி சர்டிபிகேட்

    மீண்டும் டெல்லி செல்லும் விஜய்… பயணத்தின் நோக்கம் என்ன?

    எடப்பாடி கொடுத்த கடிதம்… தப்பிய அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பதவி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»“ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் பேசவில்லை” – திமுக விளக்கம்
    Featured

    “ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் பேசவில்லை” – திமுக விளக்கம்

    Editor web2By Editor web2June 9, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    MK Stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அண்மையில் ஆற்றிய உரை தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ள சர்ச்சைக்கு திமுக விளக்கம் அளித்துள்ளது.

    திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேச்சு தொடர்பாக எழுந்துள்ள அரசியல் விவாதங்களுக்கு விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் புதிதாக ஒரு ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகிறது. இந்த ஒரு மாதமும் டிவியைப் பார்த்தாலும் நாளிதழ்களைத் திருப்பினாலும் கொலையும், கொள்ளையும், பாலியல் வன்கொடுமைகளும், போதை மருந்து நடமாட்டமும் தான் செய்திகளாக இருக்கின்றன. பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஆளும் கட்சியான த.வெ.க. நிர்வாகிகளே சம்பந்தப்பட்டு உள்ளனர்.

    ஆளும்கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், சொந்தக் கட்சிக்காரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அந்தப் பெண்ணால் குற்றம் சாட்டப்படும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ மீது இதுவரை நடவடிக்கை இல்லை. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியை விட்டு நீக்கி இருக்கிறது தூய சக்தி என்று கபட வேடம் போடும் அரசு.

    Thangam thennarasu

    “இந்த ஆட்சியை ஆறு மாதம் விமர்சிக்க மாட்டோம்” என்று எங்கள் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லியிருந்தாலும், நிலைமை மிக மோசமாகப் போய்வரும் நிலையில் அவர் விமர்சனம் செய்தார். “ஆறு மாதம் அல்ல, மூன்று மாதம் கூட தாங்காது என்ற நிலைமையில் தான் ஆட்சி போய்க்கொண்டு இருக்கிறது” என்று தலைவர் அவர்கள் பேசினார்கள்.

    ஆனால், மூன்று மாதத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று அவர் சொன்னதாகத் திரித்து செய்தி பரப்பப்படுகிறது.

    இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் செய்தியாளர்கள் கேட்டபோது, தி.மு.க. தலைவர் அப்படி பேசியிருக்கக் கூடாது என்று பேசி உள்ளனர். ஆட்சி கவிழும் என்று தலைவர் அவர்கள் பேசவுமில்லை; அது அவரது நிலைப்பாடும் அல்ல!

    “ஆறு மாதம் வரை, இந்த ஆட்சி பற்றி விமர்சித்துப் பேசப் போவதில்லை” என்று அவர் சொல்லியிருந்தார். ஆனால் நாள்தோறும் கொலை, கொள்ளை, அரிவாள் வெட்டுகள், போதை மருந்துகள் நடமாட்டம், பெட்ரோல் குண்டு வீச்சுகள், மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம், பாலியல் வன்கொடுமைகள் நடப்பதைப் பார்க்கும் போது, இதை விமர்சிக்காமல் எப்படி இருக்க முடியும் என்ற பொருளில், “மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது” என்று பொருள்படும்படிதான் சொன்னார்கள்.

    ஆசை அறுபது நாள் என்பார்கள். ஆனால் இன்றைய ஆளும் கட்சிக்கு வாக்களித்தவர்கள் ஒரு வாரம் தான் அமைதியாக இருந்தார்கள். சமூகவலைத்தளங்கள் முழுக்கவே ஆளும் கட்சிக்கு எதிரான ஆவேசமான கருத்துகளைத்தான் மக்கள் சொல்லி வருகிறார்கள்.

    இதைத்தான் தலைவர் அவர்கள் தனது உரையில் சுட்டிக் காட்டினார்கள். கலைப்பு, கவிழ்ப்பு எண்ணத்தோடு அல்ல. மக்களே களைத்துப் போய்விட்டார்கள் அதற்குள்!” எனக் கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்லியை தொடர்ந்து புனே..!! ஒன்றுகூடும் கரப்பான்பூச்சிகள்..!! போராட்டம் அறிவிப்பு..!!
    Next Article வேட்புமனு ஏற்பு:ராஜ்யசபா எம்.பி-யாகிறார் பிரவீன் சக்கரவர்த்தி!
    Editor web2
    • Website

    Related Posts

    லஞ்சம் – ஊழல் குறைந்துள்ளது – ஜோசப் விஜய் ஆட்சிக்கு அன்புமணி சர்டிபிகேட்

    June 9, 2026

    மீண்டும் டெல்லி செல்லும் விஜய்… பயணத்தின் நோக்கம் என்ன?

    June 9, 2026

    எடப்பாடி கொடுத்த கடிதம்… தப்பிய அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பதவி!

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    லஞ்சம் – ஊழல் குறைந்துள்ளது – ஜோசப் விஜய் ஆட்சிக்கு அன்புமணி சர்டிபிகேட்

    மீண்டும் டெல்லி செல்லும் விஜய்… பயணத்தின் நோக்கம் என்ன?

    எடப்பாடி கொடுத்த கடிதம்… தப்பிய அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பதவி!

    லாரி மீது கார் மோதி விபத்து – கர்ப்பிணி பெண் உள்பட மூவர் உயிரிழப்பு

    லாட்டரி மார்ட்டின் சொத்து: அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.