Close Menu
    What's Hot

    அரசு மருத்துவமனையில் திடீர் விசிட்!. நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர் பர்வேஸ்!

    தொடங்கியது இந்தியா கூட்டணி கூட்டம்..!! புறக்கணித்த திமுக, ஆம் ஆத்மி கட்சிகள்..!!

    தன்னை கொலை செய்ய மும்பை கூலிப்படை – அருண் ஐபிஎஸ் மீது சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»கீழடியில் கைப்பிடியுடன் செந்நிற பானை கண்டுபிடிப்பு… சங்ககால நாகரிக ஆய்வில் புதிய அத்தியாயம்!
    Featured

    கீழடியில் கைப்பிடியுடன் செந்நிற பானை கண்டுபிடிப்பு… சங்ககால நாகரிக ஆய்வில் புதிய அத்தியாயம்!

    Editor web2By Editor web2June 8, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 06 08 11h03m37s122
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில், இதுவரை கண்டறியப்படாத வகையில் கைப்பிடியுடன் கூடிய செந்நிற சுடுமண் பானை முதன்முறையாக கண்டெடுக்கப்பட்டுள்ளது தொல்லியல் ஆய்வாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் 11-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த மார்ச் 18-ஆம் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. கீழடி கிராமத்தில் கஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் இந்த அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதுவரை ஏழு அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், செங்கல் கட்டுமானங்கள், கழிவுநீர் வடிகால் அமைப்புகள், சுடுமண் சாயக் கிண்ணங்கள், தக்கழிகள், பாசி மணிகள் மற்றும் பல்வேறு வகையான பானை ஓடுகள் உள்ளிட்ட ஏராளமான தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கீழடி பகுதி நகரமயமான குடியிருப்பாக விளங்கியதற்கான ஆதாரங்களாகக் கருதப்படுகின்றன.

    கீழடியில் முந்தைய 10 கட்ட அகழாய்வுகளின் போது கெண்டி மூக்கு பானைகள், மூடியுடன் கூடிய பானைகள், அடர் சிவப்பு நிற சுடுமண் பாத்திரங்கள், வர்ணம் தீட்டப்பட்ட பானைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான மட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. ஆனால், தற்போதைய 11-ஆம் கட்ட அகழாய்வில் முதன்முறையாக இருபுறமும் கைப்பிடி பொருத்தப்பட்ட செந்நிற சுடுமண் பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    vlcsnap 2026 06 08 11h03m49s517

    சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள இந்த பானையின் மேற்பகுதியில் சிறிய வட்டவடிவ திறப்பு காணப்படுகிறது. இதன் மூலம் தண்ணீர் அல்லது பிற திரவப் பொருட்களை சேமித்து பயன்படுத்தியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும், பானையின் நடுப்பகுதியில் அலங்கார வடிவிலான மூன்று வடிவமைப்புகள் இடம்பெற்றுள்ளன. பானையை எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் இருபுறங்களிலும் உருண்டை வடிவ கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கைப்பிடி பகுதி சேதமடைந்திருந்தாலும், மற்றொரு பகுதி முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளது.

    இந்த பானை கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் செங்கல் கட்டுமானங்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. மேலும் பல குழிகள் தோண்டப்பட உள்ளதால், அடுத்தடுத்த நாட்களில் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருட்கள் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கீழடியில் இதுவரை நடைபெற்ற 11 கட்ட அகழாய்வுகளில் முதன்முறையாக கைப்பிடியுடன் கூடிய சுடுமண் பானை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, சங்ககாலத் தமிழர்களின் கைவினைத் திறன் மற்றும் பயன்பாட்டு தொழில்நுட்பம் குறித்த ஆய்வுகளுக்கு புதிய பரிமாணத்தை வழங்கும் என தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமின்வாரிய ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட வழக்கு!. சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!
    Next Article 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்!. அறிமுக வீரர் மானவ் சுதர் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தல்!
    Editor web2
    • Website

    Related Posts

    அரசு மருத்துவமனையில் திடீர் விசிட்!. நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர் பர்வேஸ்!

    June 8, 2026

    தொடங்கியது இந்தியா கூட்டணி கூட்டம்..!! புறக்கணித்த திமுக, ஆம் ஆத்மி கட்சிகள்..!!

    June 8, 2026

    தன்னை கொலை செய்ய மும்பை கூலிப்படை – அருண் ஐபிஎஸ் மீது சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

    June 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அரசு மருத்துவமனையில் திடீர் விசிட்!. நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர் பர்வேஸ்!

    தொடங்கியது இந்தியா கூட்டணி கூட்டம்..!! புறக்கணித்த திமுக, ஆம் ஆத்மி கட்சிகள்..!!

    தன்னை கொலை செய்ய மும்பை கூலிப்படை – அருண் ஐபிஎஸ் மீது சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

    ஏழைகளின் வாழ்க்கையை மாற்றிய 12 ஆண்டு கால ஆட்சி!. பிரதமர் மோடி பெருமிதம்!

    பர்கரில் புழுக்கள்..!! வீடியோ வைரலானதால் களத்தில் இறங்கிய உணவு பாதுகாப்புத்துறை..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.