Close Menu
    What's Hot

    தமிழ்நாட்டுக்கு உண்மையாவே யாரு தான் CM..?? தி.குன்றம் விவகாரத்தில் கொந்தளித்த நயினார்..!!

    மா. செ.க்கள் மாற்றமா? – திமுக திடீர் ஆலோசனை கூட்டம்

    விமர்சிச்சா ஜெயிலா? திமுக பாணியை கையில் எடுக்கிறதா தவெக? வானதி சீனிவாசன் அட்டாக்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»மின்வாரிய ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட வழக்கு!. சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!
    Featured

    மின்வாரிய ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட வழக்கு!. சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

    Editor web3By Editor web3June 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    hard disks CB CID investigation
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் டெண்டர் ஆவணங்கள் இடம் பெற்ற ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த மே மாதம் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில், வார இறுதி விடுமுறை காரணமாக சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் வருகை குறைவாக இருந்துள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, அங்குள்ள கணினிகளில் இருந்து 34 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டன. மே 20ஆம் தேதி இதனை கவனித்த உதவி பொறியாளர் மலர்விழி, உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன் பின்னரே போலீசில் புகார் அளிக்கப்பட்டு, இந்த விவகாரம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்தது.

    போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த வளர்புரத்தைச் சேர்ந்த கோபிநாத்  மற்றும் முரளி மனோகர் ஆகிய இருவர் இந்த திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

    கைதான கோபிநாத் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், மின்வாரிய அலுவலகத்தில் இருந்து 34 ஹார்டு டிஸ்க்குகளை திருடிச் சென்று தனது வீட்டில் மறைத்து வைத்ததாகக் கூறியுள்ளார். பின்னர், அதிலிருந்த டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகள் அனைத்தையும் முழுமையாக அழித்துவிட்டு, பெங்களூருக்கு கடத்திச் சென்றுள்ளார். சந்தையில் தலா ரூ.20,000 மதிப்புள்ள அந்த ஹார்டு டிஸ்க்குகளை வெறும் ரூ.2,500-க்கு விற்பனை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதற்குரிய ஆதாரங்கள் அடங்கிய ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டு, தரவுகள் அழிக்கப்பட்டிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சாதாரண திருட்டு சம்பவமா அல்லது முறைகேடு வழக்கை திசைதிருப்பவும், ஆதாரங்களை அழிக்கவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியா என்ற கோணத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது. இதன் காரணமாக, வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇண்டியா கூட்டணி கூட்டம்!. ராகுலுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!. டெல்லியில் பரபரப்பு!
    Next Article கீழடியில் கைப்பிடியுடன் செந்நிற பானை கண்டுபிடிப்பு… சங்ககால நாகரிக ஆய்வில் புதிய அத்தியாயம்!
    Editor web3
    • Website

    Related Posts

    தமிழ்நாட்டுக்கு உண்மையாவே யாரு தான் CM..?? தி.குன்றம் விவகாரத்தில் கொந்தளித்த நயினார்..!!

    June 8, 2026

    மா. செ.க்கள் மாற்றமா? – திமுக திடீர் ஆலோசனை கூட்டம்

    June 8, 2026

    விமர்சிச்சா ஜெயிலா? திமுக பாணியை கையில் எடுக்கிறதா தவெக? வானதி சீனிவாசன் அட்டாக்!

    June 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழ்நாட்டுக்கு உண்மையாவே யாரு தான் CM..?? தி.குன்றம் விவகாரத்தில் கொந்தளித்த நயினார்..!!

    மா. செ.க்கள் மாற்றமா? – திமுக திடீர் ஆலோசனை கூட்டம்

    விமர்சிச்சா ஜெயிலா? திமுக பாணியை கையில் எடுக்கிறதா தவெக? வானதி சீனிவாசன் அட்டாக்!

    கேள்வி கேட்டால் Black Out பண்ணுவீங்க..!! What bro.. It’s very wrong bro..!! மாரிதாஸ் கைதுக்கு அதிமுக கண்டனம்..!!

    அரசு மருத்துவமனையில் திடீர் விசிட்!. நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர் பர்வேஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.