Close Menu
    What's Hot

    “மாதம் ஒருமுறை மின் கட்டண வாக்குறுதி எங்கே?” – நயினார் நாகேந்திரன் கேள்வி

    இபிஎஸ் வழங்கிய கட்சி பதவியை நிராகரித்தது ஏன்? எஸ்.பி. வேலுமணி விளக்கம்

    தமிழகத்தில் தாமதமாகும் இடைத்தேர்தல்… காரணம் என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழகத்தில் தாமதமாகும் இடைத்தேர்தல்… காரணம் என்ன?
    Featured

    தமிழகத்தில் தாமதமாகும் இடைத்தேர்தல்… காரணம் என்ன?

    Editor web2By Editor web2July 2, 2026Updated:July 2, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Election Commission
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வட மாநிலங்களில் காலியாக உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாதது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

    திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய் அத்தொகுதியை ராஜினாமா செய்தது, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக உள்ளன.

    இது  குறித்து மாநில அரசு மற்றும் சட்டப்பேரவைச் செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரப்பூர்வ தகவல்களை ஏற்கனவே அனுப்பிவிட்டதாக சொல்லப்பட்டது. இதையடுத்து, ஜூலை முதல் வாரத்தில் இடைத்தேர்தல் அட்டவணை வெளியாகும் என அரசியல் கட்சிகள் எதிர்பார்த்திருந்தன. ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    இந்த தாமதத்தின் பின்னணியில், குதிரை பேர குற்றச்சாட்டும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கும் முக்கிய காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, தவெக தனது பெரும்பான்மை பலத்தை சுயமாக பூர்த்தி செய்துகொள்வதற்காக சில அதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்ததாகவும், இதன் பின்னணியில் குதிரை பேர அரசியல் இருப்பதாகவும் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    இது தொடர்பாக ஆளுநரை சந்தித்து திமுக தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைவது தொடர்பாக அதிமுக எம்.பி.இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

    அதில், “அதிமுக எம்எல்ஏக்கள் பதவி விலகல் செய்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது. ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த எம்.எல்.ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். குதிரை பேரம் குற்றச்சாட்டில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இத்தகைய பின்னணியில்தான், தேர்தல் ஆணையம் தமிழகத்திற்கான இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காமல் தள்ளிப்போட்டுள்ளது.

    ByElection ElectionCommission tamilnadu TamilNaduPolitics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article திருப்பூர் : தேங்கிய 7 மூட்டை அரசு ஆவணங்கள், கடிதங்கள்..! டெலிவரி செய்யாத தபால்காரர் சஸ்பெண்ட்..!
    Next Article இபிஎஸ் வழங்கிய கட்சி பதவியை நிராகரித்தது ஏன்? எஸ்.பி. வேலுமணி விளக்கம்
    Editor web2
    • Website

    Related Posts

    “மாதம் ஒருமுறை மின் கட்டண வாக்குறுதி எங்கே?” – நயினார் நாகேந்திரன் கேள்வி

    July 2, 2026

    இபிஎஸ் வழங்கிய கட்சி பதவியை நிராகரித்தது ஏன்? எஸ்.பி. வேலுமணி விளக்கம்

    July 2, 2026

     திருப்பூர் : தேங்கிய 7 மூட்டை அரசு ஆவணங்கள், கடிதங்கள்..! டெலிவரி செய்யாத தபால்காரர் சஸ்பெண்ட்..!

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “மாதம் ஒருமுறை மின் கட்டண வாக்குறுதி எங்கே?” – நயினார் நாகேந்திரன் கேள்வி

    இபிஎஸ் வழங்கிய கட்சி பதவியை நிராகரித்தது ஏன்? எஸ்.பி. வேலுமணி விளக்கம்

    தமிழகத்தில் தாமதமாகும் இடைத்தேர்தல்… காரணம் என்ன?

     திருப்பூர் : தேங்கிய 7 மூட்டை அரசு ஆவணங்கள், கடிதங்கள்..! டெலிவரி செய்யாத தபால்காரர் சஸ்பெண்ட்..!

    இணையத்தில் வெளியான ஜனநாயகன் படத்தை 1.20கோடி பேர் பார்த்துள்ளனர்..! ஜாமின் மனு தள்ளுபடி..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.