Author: Editor web2

தமிழகத்தில் தவெக அரசை கவிழ்க்கும் நோக்கில் திமுகவும் அதிமுகவும் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், தவெக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.  சிவகாசியில் பேசிய அதிமுக. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ”முதலமைச்சர் பதவியில் உள்ள விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்ணிய குறைவாக பேசக்கூடாது. மு.க.ஸ்டாலினுக்கு எப்போது கோபம் வருகிறதோ? அப்போது தமிழகத்தில் தவெக ஆட்சி இருக்காது” என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், சென்னை மின்வாரிய அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த  அமைச்சர் நிர்மல் குமார்,  கே.டி. ராஜேந்திர பாலாஜியின் கருத்துக்கு பதிலளித்தார். அவர் கூறுகையில், “தமிழகத்தில் திமுக-அதிமுக கூட்டணிக்கு அனிதா ராதாகிருஷ்ணனும், ராஜேந்திர பாலாஜியும் ஒருங்கிணைப்பாளர்களாக இருப்பார்கள். அதிமுகவினர் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி இன்னும் பொதுச் செயலாளராக இருக்கிறாரா என்பதையே அவர்கள் மறந்துவிட்டனர்” என்றார். மேலும், “தற்போது வரை தவெக…

Read More

பெரம்பூர் தொகுதி மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த, தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யுமாறு சென்னை மாநகராட்சி ஆணையருக்கு முதல்வர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பெரம்பூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்துமாறு முதல்வர் விஜய் பரிந்துரைத்துள்ளார். அதன்படி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, சிட்கோ நகர், எஸ்.எம். நகர், எம்.கே.பி. நகர் மற்றும் வியாசர்பாடி மேம்பாலச் சந்திப்பு உள்ளிட்ட 6 இடங்களில், சிசிடிவி, வை-பை மற்றும் 24 மணி நேர கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், மேயர் கிருஷ்ணமூர்த்தி நகரில் ரூ.50 லட்சம் மதிப்பில் விளையாட்டு வளாகம், அம்பேத்கர் கலைக் கல்லூரியில் கூடைப்பந்து, கிரிக்கெட், கபடி உள்ளிட்ட விளையாட்டு வசதிகளை மேம்படுத்த ரூ.25 லட்சம்,…

Read More

தமிழகத்தில் கட்டுமான மணல் தட்டுப்பாட்டை சமாளிக்க 12 புதிய மணல் குவாரிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கட்டுமான மணல் தட்டுப்பாட்டை போக்க காவிரி பாசன மாவட்டங்களில் புதிய மணல் குவாரிகளை திறப்பது மட்டுமே தீர்வல்ல; வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வது உள்ளிட்ட மாற்று வழிகளும் உள்ளன. மேலும், செயற்கைக்கோள் கண்காணிப்பு மூலம் சட்டவிரோத மணல் அள்ளலை தடுக்க முடியும் என்ற அரசின் வாதம் நடைமுறையில் சாத்தியமற்றது. தமிழக அரசின் புள்ளிவிவரங்களின்படி தினமும் சுமார் 60 ஆயிரம் லாரி மணல் தேவைப்படுகிறது, புதிய குவாரிகள் திறக்கப்பட்டால் ஆண்டுக்கு 2.74 கோடி யூனிட் மணல் எடுக்கப்படும் நிலை உருவாகும். 2023-ல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதித்த அளவை விட 36 மடங்குக்கும் அதிகமாக மணல் எடுக்கப்படும் அபாயம் உள்ளது. இது காவிரி, கொள்ளிடம்,…

Read More

மனித வாழ்நாளின் இறுதிக்காலத்தில் ஏற்படும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று ‘டிமென்ஷியா’ (Dementia) எனப்படும் நினைவாற்றல் இழப்பு அல்லது மறதி நோய் ஆகும். பல நேரங்களில் இது வயது முதிர்வின் காரணமாக ஏற்படும் ஒரு தவிர்க்க முடியாத ‘தலைவிதி’ என்றே பலரால் பார்க்கப்படுகிறது. ஆனால், மருத்துவ உலகம் அந்தப் பார்வையை முற்றிலும் உடைத்தெறிந்துள்ளது. சமீபத்தில் புகழ்பெற்ற சர்வதேச மருத்துவ இதழான ‘தி லான்செட் ஹெல்தி லாங்கிவிட்டி’ (The Lancet Healthy Longevity) வெளியிட்டுள்ள ஓர் ஆய்வு முடிவு, நம் அன்றாட வாழ்க்கை முறையைக் கட்டுப்படுத்துவதன் மூலமே ’டிமென்ஷியா’ அபாயத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், பிரவுன் பல்கலைக்கழகம் மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, இந்தியா, சீனா, இங்கிலாந்து, பிரேசில் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் தரவுகளைக் கொண்டு இந்த மாபெரும் ஆய்வை நடத்தியுள்ளனர். இந்தியாவின்…

Read More

தமிழகத்தில் அதிக வீரியம் கொண்ட கோவிட்-19 வைரஸ் பரவி வருவதாக எழுந்துள்ள தகவல்களுக்குப் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை முற்றிலும் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஆண்டுகளை விட தற்போது கொரோனா தொற்று மிகவும் குறைவாகவே உள்ளதால், பொதுமக்கள் தேவையற்ற அச்சமோ, பதற்றமோ அடைய வேண்டாம் என்றும், வதந்திகளை நம்பாமல் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பின்பற்றுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அண்மையில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் குறித்து அரசுத் துறை விரிவான விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 52 வயது நபர் தீவிர பாக்டீரியா தொற்று (Klebsiella pneumoniae), நீரிழிவு மற்றும் நீண்டகாலச் சிறுநீரக நோய் காரணமாகவே உயிரிழந்தார். மற்றொரு 68 வயது நபர் பெருங்குடல் புற்றுநோயால் ஏற்பட்ட சுவாசச் செயலிழப்பால் மரணமடைந்தார்; இவருக்குக் கோவிட் தொற்று என்பது தற்செயலாக மட்டுமே கண்டறியப்பட்டது. தமிழகத்தில்…

Read More

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் (SIAA) புதிய கட்டிடக் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அது குறித்து சங்கத்தின் பொதுச்செயலாளரும் நடிகருமான விஷால்,   நெகிழ்ச்சியுடன் பேட்டியளித்துள்ளார். நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடிகர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எனது நீட்டிக்கப்பட்ட குடும்பத்தினரான திரையுலகக் சொந்தங்களைச் சந்தித்தேன். அவர்கள் அனைவரையும் சந்திக்கும் போதெல்லாம் எப்போதும் ஒரு நேர்மறையான, மகிழ்ச்சியான உணர்வு எனக்குள் ஏற்படும்” என்று குறிப்பிட்டார். மேலும், சங்கத்தின் நீண்டகாலக் கனவு குறித்துப் பேசிய அவர், “நமது கனவு இல்லமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடத்தின் இறுதிக்கட்ட கட்டுமானப் பணிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது முழுவீச்சில் தயாராக உள்ளன. பல கட்டப் போராட்டங்கள், சட்டப் போராட்டங்கள், தொடர்ச்சியான கடின உழைப்பு மற்றும் பல தடைகளைக் கடந்து, நாம் நினைத்ததை நிஜமாக்கிக் காட்டுவதற்கு ஒரு பெரிய குழுவின் கூட்டு உழைப்பு தேவைப்படுகிறது. ஆம், மிக அருகில்…

Read More

தமிழக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவின் (DVAC) இயக்குனர் அ.அருண் ஐபிஎஸ், பதவியேற்ற சில நாட்களிலேயே அதிரடியாக மாற்றப்பட்டு, தமிழ்நாடு காவலர் பயிற்சிப் பள்ளி இயக்குநராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி. சி.மகேஸ்வரி இப்பதவியைக் கூடுதலாகக் கவனிப்பார் என உள்துறைச் செயலர் அறிவித்துள்ளார். த.வெ.க அரசு அமைந்தவுடன் வழங்கப்பட்ட இந்த மிக முக்கியப் பொறுப்பிலிருந்து அருண் திடீரென தூக்கியடிக்கப்பட்டதன் பின்னணியில் அடுக்கடுக்கான அதிரடிச் சர்ச்சைகளும், கடுமையான குற்றச்சாட்டுகளும் ஒளிந்திருக்கின்றன. முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு பதவியேற்றவுடன், சென்னை முன்னாள் காவல் ஆணையரான அருண் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டது முதலே அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியது. கடந்த திமுக ஆட்சியில் த.வெ.க-வின் ரோடு ஷோ போன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி மறுத்துக் கறார் காட்டிய ஒரு அதிகாரிக்கு, ஊழலை ஒழிக்கும் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பதவி வழங்கப்பட்டதற்குத் த.வெ.க தொண்டர்களிலேயே அதிருப்தி நிலவியது. மேலும்,…

Read More

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் காமராஜரின் உருவத்துடன் கூடிய மணல் சிற்பம் அமைக்கப்பட்டது. உலகப் புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் கஜேந்திரன் ஏழுமலையான் வடிவமைத்த இந்த சிற்பத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மாநிலத் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, கே.எஸ். அழகிரி, பிரவீன் சக்கரவர்த்தி, விஜய் வசந்த், அமைச்சர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், “ஆர்.எஸ்.எஸ். அரசியலின் தமிழாக்கம்தான் அண்ணாமலை செய்து வரும் அரசியல். அது மிகவும் ஆபத்தான அரசியல்” என்று கடுமையாக விமர்சித்தார். மேலும், பள்ளிகளில் அரசியல் மற்றும் தேவையற்ற நிகழ்ச்சிகளைத் தடை செய்ய வேண்டும் என்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் கருத்தை வரவேற்ற அவர், “காமராஜர் உருவாக்கிய அரசு பள்ளிகளில் ஒன்று கூட மூடப்படக் கூடாது. எந்த பள்ளி மூடப்பட்டாலும் அதை துக்க நாளாகவே…

Read More

தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற சென்னை, பெரம்பூர் தொகுதிக்கு தேர்தல் வெற்றிக்குப் பின்னர் இன்று முதன்முறையாக வருகை தந்த முதலமைச்சர் விஜய், அங்கு புதிதாக அமைக்கப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகத்தையும், இ-சேவை மையத்தையும் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட சர்மா நகர் 10ஆவது தெருவில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், தமிழ்நாடு முழுவதும் 73 ஆயிரம் பேருக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்து 50 புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய அட்டைகளை வழங்கி பத்து நபர்களுக்கு ரேஷன் பொருட்களை முதலமைச்சர் விஜய் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன், தமிழகம் முழுவதும் இரண்டு வாரங்களுக்குள் புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணி நிறைவு செய்யப்படும் என்றார். மேலும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு “தாயுமானவன்” திட்டத்தின் கீழ்…

Read More

கிரிக்கெட்டின் மெக்கா என போற்றப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் மகளிர் டெஸ்ட் போட்டியில், இந்திய மகளிர் அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்தை 270 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, லார்ட்ஸில் டெஸ்ட் வென்ற முதல் மகளிர் அணியாக இந்தியா முத்திரை பதித்தது. முதலில் பேட் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 285 ரன்கள் குவித்தது. இதில் ஸ்மிருதி மந்தனா 83, ஹர்மன்பிரீத் கவுர் 58, தீப்தி சர்மா 57 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்தை, இந்திய வேகப்பந்து வீச்சாளர் கிராந்தி கவுட் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை 37 ரன்களுக்கு வீழ்த்தினார். இதனால் இங்கிலாந்து 170 ரன்களுக்கு சுருண்டது. 115 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 341/7 ரன்களில் டிக்ளேர் செய்தது. இதில் யாஸ்திகா பாட்டியா 113 ரன்கள் குவித்து, லார்ட்ஸ் மகளிர் டெஸ்ட் வரலாற்றில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.…

Read More