Close Menu
    What's Hot

    புதிய விதிகளுடன் பார் டெண்டர்; விரைவில் அதிகாரிகள் இடமாற்றம்!. டாஸ்மாக்கில் வரும் அதிரடி மாற்றம்?.

    சி.ஐ.எஸ்.எஃப் கட்டுப்பாட்டில் மீன்பிடி துறைமுகங்கள் –  மாநில அரசை உஷார் படுத்தும் முகமது முபாரக்

    கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து!. பேக்கரிக்குள் புகுந்ததால் பரபரப்பு!.  

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»”மின்வாரியத்தில் ஊழல் ஆதாரங்களை அழிக்க சதியா?”… நயினார் நாகேந்திரன் கேள்வி
    தமிழ்நாடு

    ”மின்வாரியத்தில் ஊழல் ஆதாரங்களை அழிக்க சதியா?”… நயினார் நாகேந்திரன் கேள்வி

    Editor web2By Editor web2June 4, 2026Updated:June 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    19182969 nainarnagendran01
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை அண்ணாசாலையிலுள்ள தமிழ்நாடு மின்சார வாரிய (TNEB) தலைமையகத்தின் 4, 5, 7 மற்றும் 10 ஆகிய தளங்களில் இருந்து, நிலக்கரி கொள்முதல் மற்றும் டெண்டர் தொடர்பான முக்கிய ஆவணங்கள் அடங்கிய 18 கணினி ஹார்டு டிஸ்க்குகள் (Hard Disks) திருடப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் நேரில் ஆய்வு நடத்திய சில நாட்களிலேயே, மே 16-17 வார இறுதி நாட்களில் இந்தத் துணிச்சலான சதி அரங்கேறியுள்ளது.

    துறை அதிகாரிகளின் துணையோடு சதியா?

    மின்சாரத்துறையில் கடந்த காலங்களில் நடைபெற்ற டெண்டர் முறைகேடுகள், குறிப்பாக ₹397 கோடி மதிப்பிலான டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் குறித்து சிபிஐ (CBI) விசாரணைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய முகமைகளும் 2021-2023 காலகட்ட மின்வாரிய டெண்டர்களை ஆய்வு செய்து வரும் வேளையில், இந்தத் திருட்டு நடந்துள்ளது.  முக்கியமாக, இந்தத் துறைப் பிரிவுகளில் இருந்த சிசிடிவி (CCTV) கேமராக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு அகற்றப்பட்டதாகக் கூறப்படும் தகவல், இடைத்தரகர்கள் மற்றும் அதிகாரிகளின் நீண்டகாலக் கூட்டுச் சதியை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

    TNEB 1

    பசுமை ஆற்றல் கழகத்தின் (TNGECL) தலைமை நிதி அதிகாரி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் அண்மையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கும், இந்த ஹார்டு டிஸ்க் திருட்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்  தனது முதற்கட்ட சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    நயினார் நாகேந்திரன் கேள்வி

    இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பெரும் லஞ்ச ஊழல்களையும் முறேகீடுகளையும் மூடிமறைக்கவும், தவறிழைத்தவர்களைக் காப்பாற்றவுமே இந்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளனவா?

    இதனைத் தடுக்கத் தவறிய தற்போதைய தவெக அரசு, மறைமுகமாக முந்தைய ஆட்சியாளர்களின் ஊழல் முகமூடியைக் காக்க முயல்கிறதா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

    தற்போது சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”தவெக அரசின் சொத்தை வாதத்தால் பறிபோகும் தமிழக மருத்துவ இடங்கள்”
    Next Article திமுக ஆட்சியின் அவலம் தவெக ஆட்சியிலும் தொடர்வதா? – விஜய் அரசுக்கு அன்புமணி கேள்வி
    Editor web2
    • Website

    Related Posts

    புதிய விதிகளுடன் பார் டெண்டர்; விரைவில் அதிகாரிகள் இடமாற்றம்!. டாஸ்மாக்கில் வரும் அதிரடி மாற்றம்?.

    June 4, 2026

    சி.ஐ.எஸ்.எஃப் கட்டுப்பாட்டில் மீன்பிடி துறைமுகங்கள் –  மாநில அரசை உஷார் படுத்தும் முகமது முபாரக்

    June 4, 2026

    கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து!. பேக்கரிக்குள் புகுந்ததால் பரபரப்பு!.  

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புதிய விதிகளுடன் பார் டெண்டர்; விரைவில் அதிகாரிகள் இடமாற்றம்!. டாஸ்மாக்கில் வரும் அதிரடி மாற்றம்?.

    சி.ஐ.எஸ்.எஃப் கட்டுப்பாட்டில் மீன்பிடி துறைமுகங்கள் –  மாநில அரசை உஷார் படுத்தும் முகமது முபாரக்

    கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து!. பேக்கரிக்குள் புகுந்ததால் பரபரப்பு!.  

    அசிங்கப்படுத்திய மேயர் பிரியா..! நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய தவெக எம்.எல்.ஏ..!

    திமுக ஆட்சியின் அவலம் தவெக ஆட்சியிலும் தொடர்வதா? – விஜய் அரசுக்கு அன்புமணி கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.