Close Menu
    What's Hot

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: பக்தர்கள் சூடம் ஏற்றி பக்தி பரவசம்!

    மாற்றுத்திறனாளி விசாரணைக் கைதி மரணம்: தலைமை வார்டன் உள்பட 3 காவலர்கள் அதிரடி கைது!

    வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: திரளான பக்தர்கள் ‘அரோகரா’ முழக்கத்துடன் வழிபாடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஃபிஃபா உலகக்கோப்பை: 2வது அரையிறுதியில் அர்ஜென்டினா- இங்கிலாந்து இன்று மோதல்!
    Featured

    ஃபிஃபா உலகக்கோப்பை: 2வது அரையிறுதியில் அர்ஜென்டினா- இங்கிலாந்து இன்று மோதல்!

    Editor web1By Editor web1July 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 14
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற உள்ள 2வது அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா- இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.

    விறுவிறுப்பான 2-வது அரையிறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று (ஜூலை 15, அமெரிக்க நேரப்படி) அட்லாண்டாவில் உள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் மைதானத்தில் மோதுகின்றன. இந்திய நேரப்படி இந்த ஆட்டம் ஜூலை 16, அதிகாலை 12:30 மணிக்கு நடைபெறவுள்ளது.

    இவ்விரு அணிகளும் கடந்த 21 ஆண்டுகளில் சந்தித்துக் கொள்வது இதுவே முதல்முறை. இதனால், உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    3 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணிக்கு இது 6-வது உலகக் கோப்பை அரையிறுதியாகும். இந்தத் தொடரில் விளையாடிய 6 ஆட்டங்களிலும் வென்று அசத்தியுள்ள அர்ஜென்டினா மொத்தம் 17 கோல்களை அடித்துள்ளது. இதில் 8 கோல்கள் அடித்துள்ள கேப்டன் லயனல் மெஸ்ஸி அணியின் பிரதான பலமாகத் திகழ்கிறார். இவருடன் லெளதாரோ மார்டினெஸ், ஜூலியன் ஆல்வரெஸ் ஆகியோரும் வலு சேர்க்கின்றனர்.

    1966 சாம்பியனான இங்கிலாந்து அணி 4-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தத் தொடரில் விளையாடிய 6 போட்டிகளில் 5 வெற்றி, 1 டிராவைப் பதிவு செய்து 13 கோல்களை அடித்துள்ளது. இதில் நட்சத்திர வீரர்கள் ஹேரி கேன் மற்றும் ஜூட் பெலிங்கம் தலா 6 கோல்கள் அடித்து அணியின் தூண்களாக விளங்குகிறார்கள்.

    சர்வதேச அரங்கில் இவ்விரு அணிகளும் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இங்கிலாந்து 6 வெற்றிகளையும், அர்ஜென்டினா 3 வெற்றிகளையும், 5 போட்டிகள் டிராவிலும் முடிந்துள்ளன. உலகக்கோப்பையில் இரு அணிகளும் 5 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில், இங்கிலாந்து 3 போட்டிகளிலும், அர்ஜென்டினா 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

    உலகக் கோப்பை வரலாற்றில் இதற்கு முன்பு இந்த இரு அணிகளும் குரூப் சுற்று அல்லது நாக்அவுட் சுற்றுகளில் மட்டுமே மோதியுள்ளன. உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இந்த மெகா போட்டியில் வெற்றி பெறும் அணி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஃபிஃபா உலகக் கோப்பை: பிரான்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின்!
    Next Article வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: திரளான பக்தர்கள் ‘அரோகரா’ முழக்கத்துடன் வழிபாடு!
    Editor web1
    • Website

    Related Posts

    மாற்றுத்திறனாளி விசாரணைக் கைதி மரணம்: தலைமை வார்டன் உள்பட 3 காவலர்கள் அதிரடி கைது!

    July 15, 2026

    ஃபிஃபா உலகக் கோப்பை: பிரான்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின்!

    July 15, 2026

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: பக்தர்கள் சூடம் ஏற்றி பக்தி பரவசம்!

    மாற்றுத்திறனாளி விசாரணைக் கைதி மரணம்: தலைமை வார்டன் உள்பட 3 காவலர்கள் அதிரடி கைது!

    வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: திரளான பக்தர்கள் ‘அரோகரா’ முழக்கத்துடன் வழிபாடு!

    ஃபிஃபா உலகக்கோப்பை: 2வது அரையிறுதியில் அர்ஜென்டினா- இங்கிலாந்து இன்று மோதல்!

    ஃபிஃபா உலகக் கோப்பை: பிரான்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.