Close Menu
    What's Hot

    ஒப்பந்ததாரரிடம் ரூ. 1.30 லட்சம் லஞ்சம் பெற்ற தவெக ஊராட்சி மன்ற தலைவர்?- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ!

    பண்ணைக்குள் புகுந்து அட்டகாசம்!. வெறிநாய்கள் கடித்து குதறியதில் 600 கோழிக்குஞ்சுகள் பலி!. அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை!

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: பக்தர்கள் சூடம் ஏற்றி பக்தி பரவசம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»மாவட்டம்»வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: திரளான பக்தர்கள் ‘அரோகரா’ முழக்கத்துடன் வழிபாடு!
    மாவட்டம்

    வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: திரளான பக்தர்கள் ‘அரோகரா’ முழக்கத்துடன் வழிபாடு!

    Editor web1By Editor web1July 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 15 07h13m09s991
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லக்கோட்டை ஸ்ரீ சுப்பிரமணியசாமி திருக்கோயிலில், அமாவாசை மற்றும் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் மிக விமரிசையாக நடைபெற்றது.

    இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இத்திருத்தலம், புகழ்பெற்ற ஒரு திருமணப் பரிகாரத் தலமாகும். இங்கு வைகாசி விசாகம், கந்த சஷ்டி, ஆடிக் கிருத்திகை போன்ற முருகனுக்கு உகந்த நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

    vlcsnap 2026 07 15 07h12m30s356

    திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு, உற்சவமூர்த்தி முருகப்பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானை தாயாருக்கு அதிகாலையிலேயே சிறப்பு வழிபாடுகள் தொடங்கின. பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின், மணமக்களான முருகப்பெருமானுக்கும் தாயாருக்கும் பச்சை மற்றும் சிகப்பு நிற பட்டு ஆடைகள் சாத்தப்பட்டு, வண்ண மலர் மாலைகளுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத கோயில் வளாகத்தில் திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது.

    திருக்கல்யாணம் முடிந்தவுடன், மணக்கோலத்தில் காட்சியளித்த முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் கேடய வாகனத்தில் எழுந்தருளினார். மாட வீதிகளைச் சுற்றி வலம் வந்த சுவாமியை, திரண்டிருந்த பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வள்ளி மணாளனுக்கு அரோகரா!” என பக்தி முழக்கமிட்டு வணங்கினர்.

    vlcsnap 2026 07 15 07h12m59s800

    மூலவர் சுப்பிரமணியசாமிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு விஸ்வரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருக்கல்யாணத்தைக் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரைத் தரிசித்து முருகனின் அருளைப் பெற்றுச் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் அர்ச்சகர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஃபிஃபா உலகக்கோப்பை: 2வது அரையிறுதியில் அர்ஜென்டினா- இங்கிலாந்து இன்று மோதல்!
    Next Article மாற்றுத்திறனாளி விசாரணைக் கைதி மரணம்: தலைமை வார்டன் உள்பட 3 காவலர்கள் அதிரடி கைது!
    Editor web1
    • Website

    Related Posts

    ஒப்பந்ததாரரிடம் ரூ. 1.30 லட்சம் லஞ்சம் பெற்ற தவெக ஊராட்சி மன்ற தலைவர்?- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ!

    July 15, 2026

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: பக்தர்கள் சூடம் ஏற்றி பக்தி பரவசம்!

    July 15, 2026

    மாற்றுத்திறனாளி விசாரணைக் கைதி மரணம்: தலைமை வார்டன் உள்பட 3 காவலர்கள் அதிரடி கைது!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஒப்பந்ததாரரிடம் ரூ. 1.30 லட்சம் லஞ்சம் பெற்ற தவெக ஊராட்சி மன்ற தலைவர்?- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ!

    பண்ணைக்குள் புகுந்து அட்டகாசம்!. வெறிநாய்கள் கடித்து குதறியதில் 600 கோழிக்குஞ்சுகள் பலி!. அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை!

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: பக்தர்கள் சூடம் ஏற்றி பக்தி பரவசம்!

    மாற்றுத்திறனாளி விசாரணைக் கைதி மரணம்: தலைமை வார்டன் உள்பட 3 காவலர்கள் அதிரடி கைது!

    வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: திரளான பக்தர்கள் ‘அரோகரா’ முழக்கத்துடன் வழிபாடு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.