Close Menu
    What's Hot

    சொத்துக்காக இப்படியா?. பார்வையற்ற தாயை எட்டி உதைத்த மகனின் கொடூர செயல்!.

    மக்களே உஷார்..!! அடுத்த 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தப்போகுது..!! வானிலை அப்டேட்..!!

    நள்ளிரவில் வீடு வீடாக கதவைத் தட்டி மர்ம நபர்கள் அட்டகாசம்..!! குடியாத்தத்தில் பரபரப்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»எ.வ.வேலு வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
    தமிழ்நாடு

    எ.வ.வேலு வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

    Editor web2By Editor web2July 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    supreme court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.3.23 கோடி முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, அரசு அதிகாரிகள் 9 பேர் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர் ஒருவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

    இதையடுத்து கடந்த ஜூன் 25-ஆம் தேதி சென்னை, திருவண்ணாமலை, கரூர், திண்டுக்கல், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் புகார்தாரர் அளித்த தகவல்களின் அடிப்படையில் விசாரணைக்காக எ.வ.வேலுவுக்கு கடந்த 3ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க முதல் சம்மன் அனுப்பப்பட்டது.

    அதன்படி ஆஜராக வேண்டிய நாளில், சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் இருதய சிகிச்சை பெற்று வருவதால் நேரில் ஆஜராக இயலாது என்றும், சிகிச்சை முடிந்ததும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அவர் வழக்கறிஞர்கள் மூலம் விளக்க மனு தாக்கல் செய்து கால அவகாசம் கோரியிருந்தார்.

    இதனையடுத்து, வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட  தமிழக அரசு லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது.

    இந்த தடையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கோரப்படாத நிவாரணம் தொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக வாதிட்டார். இதற்கு நீதிபதிகள், “தற்போது அவர் திரும்பி வந்துவிட்டாரே. அவரிடம் விசாரணை நடத்துவதில் என்ன பிரச்சினை? அவரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்திருக்கிறார்.

    விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தனியாக உத்தரவிட வேண்டிய அவசியமில்லை; அவர் ஒத்துழைப்பார் என நம்புகிறோம்” எனக் கூறி,  தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

    மேலும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்வைக்கலாம் என்றும், இந்த விவகாரத்தில் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

    DVAC EVVelu supremecourt tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆடி மாதம் வந்தாலே தள்ளுபடி ஏன்..?? பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யம்..!!
    Next Article சோனம் வாங்சுக் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்..!! டெல்லி ஐகோர்ட்டுக்கு ஓடிய வழக்கறிஞர்..!!
    Editor web2
    • Website

    Related Posts

    சொத்துக்காக இப்படியா?. பார்வையற்ற தாயை எட்டி உதைத்த மகனின் கொடூர செயல்!.

    July 15, 2026

    மக்களே உஷார்..!! அடுத்த 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தப்போகுது..!! வானிலை அப்டேட்..!!

    July 15, 2026

    நள்ளிரவில் வீடு வீடாக கதவைத் தட்டி மர்ம நபர்கள் அட்டகாசம்..!! குடியாத்தத்தில் பரபரப்பு..!!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சொத்துக்காக இப்படியா?. பார்வையற்ற தாயை எட்டி உதைத்த மகனின் கொடூர செயல்!.

    மக்களே உஷார்..!! அடுத்த 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தப்போகுது..!! வானிலை அப்டேட்..!!

    நள்ளிரவில் வீடு வீடாக கதவைத் தட்டி மர்ம நபர்கள் அட்டகாசம்..!! குடியாத்தத்தில் பரபரப்பு..!!

    அரசு பள்ளி வளாகத்தில் பகீர் சம்பவம்..!! 12ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து..!! சக மாணவன் வெறிச்செயல்..!!

    திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!. தடுக்க வந்த தாயை கொலை செய்த நபர் கைது!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.