Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஆடி மாதம் வந்தாலே தள்ளுபடி ஏன்..?? பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யம்..!!
    Featured

    ஆடி மாதம் வந்தாலே தள்ளுபடி ஏன்..?? பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யம்..!!

    editor5By editor5July 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 18 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் ஜூலை 17-ம் தேதி ஆடி மாதம் பிறக்கவுள்ள நிலையில், பல ஜவுளிக் கடைகள் ஏற்கெனவே 15 நாட்களுக்கு முன்பாகவே ஆடித் தள்ளுபடி விற்பனையை தொடங்கிவிட்டன. இந்தச் சீசன் சலுகை இன்று தமிழகம் முழுவதும் பிரபலமாக இருந்தாலும், அதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான வரலாறு உள்ளது.

    தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. ஆடிப் பெருக்கு, அம்மன் கோயில் திருவிழாக்கள் என பல விழாக்கள் இம்மாதத்தில் நடைபெறும். ஆனால், திருமணம், காதுகுத்து, வீடு கட்டுதல் போன்ற சுபகாரியங்கள் இந்த மாதத்தில் தவிர்க்கப்படும். புதுமணத் தம்பதிகளைப் பிரித்து வைக்கும் சம்பிரதாயங்களும் உண்டு. இதனால் ஜவுளி, நகை உள்ளிட்ட விற்பனை பெருமளவில் குறையும்.

    முந்தைய காலங்களில் விவசாயமே முக்கியத் தொழிலாக இருந்தது. “ஆடிப் பட்டம் தேடி விதை” எனும் பழமொழி இதைச் சுட்டும். ஆடி மாதத்தில் நெல் நடவு, கரும்பு நடவு போன்ற பணிகளுக்காக விவசாயிகள் தங்கள் கையிருப்பை முழுவதுமாகச் செலவழித்துவிடுவர். கடன் வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில், ஜவுளிக் கடை உரிமையாளர்களுக்கு ஆடி மாதம் பெரும் சவாலாக இருந்தது. சம்பளம் கொடுக்கக் கூட பணம் இல்லாத நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையை மாற்ற வேண்டும் என வியூகம் வகுத்தனர் கடை உரிமையாளர்கள். ஆண்டுதோறும் விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்த பழைய ஸ்டாக் துணிகளை “ஆடிக் கழிவு” எனப் பெயரிட்டு, சற்றுக் குறைந்த லாபத்தில் தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய முடிவு செய்தனர். இதைப் பொதுமக்களிடையே விளம்பரப்படுத்தினர்.

    எதிர்பார்த்ததை விட பெரும் வரவேற்பு கிடைத்தது. மக்கள் தள்ளுபடி விலையில் துணி வாங்க கடைகளுக்கு ஆர்வமுடன் வந்தனர். ஒரே நேரத்தில் இரண்டு நோக்கங்கள் நிறைவேறின. ஒன்று, தேங்கிய ஸ்டாக் காலியானது. இரண்டாவது, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு புதிய ஸ்டாக் வாங்க பணம் கிடைத்தது.

    இன்று ஆடித் தள்ளுபடி 5 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை விரிவடைந்துள்ளது. பெருநகரங்கள் முதல் சிற்றூர்கள் வரை அனைத்து ஜவுளிக் கடைகளிலும் இந்தச் சலுகை ஜோராக நடைபெறுகிறது. நவீன காலத்தில் கடன் அட்டைகள், EMI வசதிகள் இருந்தாலும், ஆடித் தள்ளுபடியின் ஈர்ப்பு குறையவில்லை.

    இந்தத் தள்ளுபடி விற்பனை, பொருளாதார ரீதியாக ஜவுளித் தொழிலுக்கு உயிர் கொடுத்தது மட்டுமல்லாமல், நுகர்வோருக்கும் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆடி மாதத்தின் பாரம்பரியத்துடன், வணிக யுக்தியும் இணைந்து உருவான இந்தத் தள்ளுபடி பாரம்பரியம், இன்றும் தமிழக வணிக உலகில் தொடர்கிறது.

    aadi month discount
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு அலுவலகங்களில் இனி லஞ்சமா.. வாய்ப்பே இல்ல..!! ஊழல் ஒழிப்பில் தமிழக அரசு அதிரடி..!!
    Next Article எ.வ.வேலு வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
    editor5

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.