Author: Editor web2
நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) மற்றும் இந்திய மாணவர் சங்கம் (SFI) சார்பில் திருப்பூரில் நடைபெற்ற போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி மற்றும் தாக்குதலை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் மாணவர் அமைப்புகள் திருப்பூர் ரயில் நிலையம் அருகே இருந்து பேரணியாக புறப்பட்டு தலைமை தபால் நிலைய அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். போராட்டத்தின் போது, மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர…
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட போராட்டம், பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டுகால மத்திய ஆட்சியில் அவர் சந்திக்கும் மிக முக்கியமான மற்றும் முதல் பரவலான மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. கடந்த காலத்தில் பிரதமர் மோடி சந்தித்த குஜராத் நர்மதா பச்சாவ் அந்தோலன் போராட்டம், பட்டிதார் சமூக போராட்டம், சிஏஏ & என்ஆர்சி எதிர்ப்பு போராட்டம் மற்றும் ஓராண்டு காலம் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் போன்றவை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மாநிலம், சமூகம் அல்லது தொழிற்துறை சார்ந்த குறிப்பிட்ட குழுக்களின் போராட்டங்களாகவே அமைந்தன. ஆனால், தற்போது ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) அமைப்பின் அழைப்பைத் தொடர்ந்து டெல்லியில் வெடித்துள்ள இப்போராட்டம், எவ்வித குறிப்பிட்ட எல்லைகளோ அல்லது சமூகக் கட்டுப்பாடுகளோ இன்றி, நாட்டின் அனைத்துத் தரப்பு இளைஞர்களையும் ஒரே புள்ளியில் இணைத்துள்ளது. டெல்லி காவல்துறை மற்றும் அதிவிரைவுப்…
நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தின் போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை. நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது. நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல்…
நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், கல்வித் துறைச் சீர்திருத்தங்களை வலியுறுத்தியும் மும்பையின் தாதர், சிவாஜி பார்க் மற்றும் சைத்யபூமி பகுதிகளில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் அமைப்பாளர்கள் நூற்றுக்கணக்கானோருக்கு, மும்பை காவல்துறை அதிகாலை வேளையில் வாட்ஸ்அப் மூலம் சம்மன் நோட்டீஸ் அனுப்பி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை சிவசேனா (UBT), என்சிபி (SP), மற்றும் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) அமைப்பினருடன் இணைந்து மாணவர்கள் நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, காவல்துறை அனுமதி பெறாமல் கூடியதாகக் கூறி சுமார் 900 பேர் மீது 7 எஃப்.ஐ.ஆர்-களை மும்பை காவல்துறை பதிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக, செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.45 மணி முதலே போராட்டக்காரர்களின் வாட்ஸ்அப் எண்களுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. புதிய பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டத்தின் பிரிவு 35(3)-ன் கீழ் இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. 7 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனைக்குரிய குற்ற…
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ரகுராமபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில், குழந்தைக்கு வழங்கப்பட்ட முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வயது குழந்தைக்கு ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மூன்று முட்டைகளில் ஒன்றை பெற்றோர் உடைத்துப் பார்த்தபோது, அதில் இறந்த நிலையில் அழுகிய கோழிக்குஞ்சு இருந்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், அந்த முட்டையை அங்கன்வாடி மையத்திற்கு எடுத்துச் சென்று ஊழியரிடம் முறையிட்டுள்ளனர். அப்போது அங்கன்வாடி ஊழியர் அலட்சியமாக பதிலளித்ததாக பெற்றோர் குற்றம்சாட்டினர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அங்கன்வாடி மேற்பார்வையாளர் கூறுகையில்,”பெற்றோரிடம் வழங்கப்பட்ட முட்டைகளில் ஒன்றில் கோழிக்குஞ்சு இருந்ததாக புகார் வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் பராமரிப்பு குறித்து…
கர்நாடகாவில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் ரசாயனக் கழிவுகளை தடுக்கவும், 2,000 ஏக்கர் ‘பைமாசி’ நிலங்களுக்கு பட்டா வழங்கவும் வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், கர்நாடகாவில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து கலக்கப்படும் ரசாயன மற்றும் கழிவுநீரை தடுக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன நடைபயணமும் மனு அளிக்கும் போராட்டமும் நடைபெற்றது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை ரசாயனக் கழிவுகள், சுத்திகரிப்பு இன்றி கெலவரப்பள்ளி அணை வழியாக தென்பெண்ணை ஆற்றில் கலப்பதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஓசூர் வட்டாரத் தலைவர் ராஜா ரெட்டி தலைமையில், கெலவரப்பள்ளி அணையில் தொடங்கிய பேரணி ஓசூர் சார் ஆட்சியர்…
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், தேர்வு முறைகேடுகள் மற்றும் கல்வித் துறை பிரச்சினைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட டெல்லி காவல்துறை நடவடிக்கை நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து, டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிடும் நோக்கில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டக்காரர்களுடன் இன்று பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், போராட்ட களத்திற்கு வந்த பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், கல்வித்துறை விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயார் எனத் தெரிவித்து போராட்டத்தைக் கைவிடுமாறு ராகுல் காந்தியிடம் கேட்டுக்கொண்டார். இருப்பினும், “மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழித்ததற்காகக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும். மேலும், மாணவர்…
நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை மட்டும் எதிர்ப்பதல்ல, நீட் தேர்வு முறையே முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வுக் குளறுபடிகளை மட்டும் எதிர்க்கவில்லை. நீட் தேர்வு என்பது அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு. ஓட்டுக்காக நீட்டை நாங்களே நீக்குவோம் என்று மக்களை ஏமாற்றும் மோசடி அரசியல் வேலையில் தவெக ஒருபோதும் ஈடுபடாது. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க…
நீட் தேர்வு முறைகேடுகள் காரணமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சியினர்டெல்லியில் நடத்தி வரும் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் களமிறங்கி உள்ளதால் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று, டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் காயமடைந்த மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் மாணவர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த விவகாரத்தில், மத்திய அரசிடம் காங்கிரஸ் 5 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும். உள்துறை அமைச்சர்…
தெரு நாய் பிரச்னையை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை என தமிழக அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தெரு நாய்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக பிடிக்கப்படும் நாய்களை மீண்டும் அதே பகுதிகளில் விடாமல், பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் போதுமான இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்களை ஏற்படுத்த வேண்டும், தடுப்பூசி மையங்களில் போதுமான கால்நடை மருத்துவர்கள், ஊழியர்களை நியமிக்க வேண்டும், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுகளை அமல்படுத்தும் வகையில், அனைத்து உயர்நீதிமன்றங்களும் தாமாக முன் வந்து வழக்குகளை…