Close Menu
    What's Hot

    இதயத்தை பாதுகாக்கும் கோவிட் தடுப்பூசிகள்!. கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்!. புதிய ஆய்வின் உண்மை!

    இமாசல பிரதேசத்தில் பயங்கர சாலை விபத்து..!! கார் பள்ளத்தில் பாய்ந்து 7 பேர் உயிரிழப்பு..!!

    அமைதி ஒப்பந்தம்; “இது எளிதானதல்ல”!. டிரம்ப் சொன்னதை கவனித்தீர்களா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும்?
    Featured

    சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும்?

    Editor web2By Editor web2June 18, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TN 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு நாளை (19-ந் தேதி) முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.

    சென்னை, தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் இன்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. தமிழக பொறுப்பு கவர்னரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தனது உரையை ஆங்கிலத்தில் பேசினார்.

    சட்டசபை கூட்டம் அவர் பேசி முடித்ததும், கவர்னர் உரையை தமிழில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வாசித்தார். அவர் வாசித்து முடித்ததும் இன்றைய சட்டசபை கூட்டம் முடிவடைந்தது. தொடர்ந்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    TN Speaker

    கவர்னர் உரைக்கு நன்றி சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “வரும் 22-ந் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கும். 23-ந் தேதி பதில் உரை இடம்பெறும்.

    உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் நாளை (19-ந் தேதி) முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். மூத்த தலைவர்கள் மறைவுக்கும் இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்படும். சனி, ஞாயிறு விடுமுறை. மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் கேள்வி நேரம் இருக்காது. சட்டசபை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 2 முறை தேசிய கீதம் பாடப்பட்டதில் எந்த தவறும் இல்லை” என்றார்.

    இந்த அலுவல் ஆய்வுக்குழுவில் முதல்-அமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், நிர்மல்குமார், ராஜேஷ்குமார், வன்னியரசு, அரசு தலைமைக் கொறடா சபரிநாதன், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் (தி.மு.க.), எ.வ.வேலு (தி.மு.க.), எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க.), ஓ.எஸ்.மணியன் (அ.தி.மு.க.), சவுமியா அன்புமணி (பா.ம.க.), செல்லசுவாமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு), சையது பாரூக் பாஷா (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    SpeakerJCDPrabhakar GovernorAddress2026 TamilNaduAssembly TNpolitics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்த அரசு மக்களுக்கான அரசு என உறுதி செய்தார் ஆளுநர்..!! வைகோ பாராட்டு..!!
    Next Article கோவை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை..!! வாகனங்களில் தீவிர வேட்டை..!!
    Editor web2
    • Website

    Related Posts

    இதயத்தை பாதுகாக்கும் கோவிட் தடுப்பூசிகள்!. கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்!. புதிய ஆய்வின் உண்மை!

    June 18, 2026

    இமாசல பிரதேசத்தில் பயங்கர சாலை விபத்து..!! கார் பள்ளத்தில் பாய்ந்து 7 பேர் உயிரிழப்பு..!!

    June 18, 2026

    அமைதி ஒப்பந்தம்; “இது எளிதானதல்ல”!. டிரம்ப் சொன்னதை கவனித்தீர்களா?

    June 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இதயத்தை பாதுகாக்கும் கோவிட் தடுப்பூசிகள்!. கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்!. புதிய ஆய்வின் உண்மை!

    இமாசல பிரதேசத்தில் பயங்கர சாலை விபத்து..!! கார் பள்ளத்தில் பாய்ந்து 7 பேர் உயிரிழப்பு..!!

    அமைதி ஒப்பந்தம்; “இது எளிதானதல்ல”!. டிரம்ப் சொன்னதை கவனித்தீர்களா?

    செங்கல்பட்டு RTO அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை

    திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ. 1 லட்சம் பறிமுதல்; லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.