Close Menu
    What's Hot

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூடியது சட்டசபை!! தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்!!

    ஒரே கிளிக்கில் டாஸ்மாக் மதுபானம்.. புதிய இணையதளம் மூலம் நாளை முதல் சேவை!

    6, 7ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மாற்றம்.. ஒரே புத்தக முறையை கொண்டு வரும் பள்ளிக்கல்வித்துறை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஒரே கிளிக்கில் டாஸ்மாக் மதுபானம்.. புதிய இணையதளம் மூலம் நாளை முதல் சேவை!
    Featured

    ஒரே கிளிக்கில் டாஸ்மாக் மதுபானம்.. புதிய இணையதளம் மூலம் நாளை முதல் சேவை!

    editor5By editor5August 5, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 11 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று மதுபானம் வாங்கும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆன்லைன் முன்பதிவு திட்டம் நாளை (வியாழன்) முதல் அமலுக்கு வருகிறது. Tasmace2e.in என்ற புதிய இணையதளம் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளின் தற்போதைய மதுபான இருப்பை பார்வையிட்டு, விரும்பும் பிராண்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

    இணையதளத்தில் முதலில் லாக்-இன் செய்து, தங்கள் வயது 21 அல்லது அதற்கு மேல் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதன்பிறகு 5 கி.மீ. அல்லது 25 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள கடைகள், கடை எண் அல்லது மாவட்டம் அடிப்படையில் தேடி, பிடித்த மதுபானத்தை தேர்வு செய்து ஆன்லைனில் பணம் செலுத்தலாம். ஆர்டர் முடிந்ததும் QR கோட் உருவாகும். இந்த QR கோட்டை 21 வயதுக்கு மேற்பட்ட எவரும் கடைக்கு எடுத்துச் சென்று காட்டினால், எம்.ஆர்.பி. விலையிலேயே மதுபானத்தை உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.

    சென்னையில் இருந்தபடியே திருநெல்வேலி கடையில் ஆர்டர் செய்வதும் சாத்தியம். இருப்பு விவரங்கள் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும். தேர்ந்தெடுத்த மதுபானம் கிடைக்காவிட்டால் பணம் திரும்ப வழங்கப்படும் அல்லது வேறு கடையில் வாங்கும் வசதி உண்டு. இணையதளம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இயங்கும். ஒவ்வொரு மதுபானத்தின் எம்.ஆர்.பி. விலை, சப்ளையர் விவரங்கள் மற்றும் கடைக்குச் செல்லும் வழிகாட்டியும் கிடைக்கும். இது அதிக விலை வசூல் மற்றும் குறிப்பிட்ட பிராண்டுகளை மட்டும் தள்ளுபடி செய்யும் நடைமுறையைக் கட்டுப்படுத்த உதவும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ரெயில்டெல் குழுமம் உருவாக்கிய இந்த அமைப்புக்கு மாவட்ட அதிகாரிகள் மற்றும் விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டத்தில் சில தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படலாம் என்றாலும் காலப்போக்கில் சரிசெய்யப்படும். மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் ஆன்லைன் விற்பனையுடன் வீட்டுக்கு டெலிவரி உள்ள நிலையில், தமிழகத்தில் சுயமாகப் பெற்றுக்கொள்ளும் முறை அறிமுகமாகிறது.

    மதுவிலக்கு கோரும் குரல்கள் இருக்கும் நிலையில், இந்த புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு எழ வாய்ப்புள்ளது என்றாலும், வாடிக்கையாளர்களுக்கு வசதியையும் வெளிப்படைத்தன்மையையும் அதிகரிக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

    liquor online booking Tasmac
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article6, 7ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மாற்றம்.. ஒரே புத்தக முறையை கொண்டு வரும் பள்ளிக்கல்வித்துறை!
    Next Article பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூடியது சட்டசபை!! தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்!!
    editor5

    Related Posts

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூடியது சட்டசபை!! தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்!!

    August 5, 2026

    6, 7ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மாற்றம்.. ஒரே புத்தக முறையை கொண்டு வரும் பள்ளிக்கல்வித்துறை!

    August 5, 2026

    விவசாயிகளின் பிரச்சினைகளைத் திசைதிருப்பவே தவெக அரசு தன்னை கைது செய்தது!- உதயநிதி

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூடியது சட்டசபை!! தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்!!

    ஒரே கிளிக்கில் டாஸ்மாக் மதுபானம்.. புதிய இணையதளம் மூலம் நாளை முதல் சேவை!

    6, 7ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மாற்றம்.. ஒரே புத்தக முறையை கொண்டு வரும் பள்ளிக்கல்வித்துறை!

    விவசாயிகளின் பிரச்சினைகளைத் திசைதிருப்பவே தவெக அரசு தன்னை கைது செய்தது!- உதயநிதி

    ஆகஸ்ட் 11-ஐ சுதந்திர தினமாக அறிவித்தது பலுசிஸ்தான்: உலக நாடுகளின் அங்கீகாரத்தைக் கோரி பலுச் தலைவர்கள் அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.