Close Menu
    What's Hot

    மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் புதிய சைக்கிள் திட்டம்.. அமைச்சர் மாஸ் அறிவிப்பு!

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூடியது சட்டசபை!! தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்!!

    ஒரே கிளிக்கில் டாஸ்மாக் மதுபானம்.. புதிய இணையதளம் மூலம் நாளை முதல் சேவை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூடியது சட்டசபை!! தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்!!
    Featured

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூடியது சட்டசபை!! தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்!!

    editor5By editor5August 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 12 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான முதல் நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் இந்த முதல் பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் சமர்ப்பித்தார். பட்ஜெட் தயாரிப்புக்கு முன்பே முதலமைச்சர் விஜய் அனைத்துத் துறை அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கடந்த ஜூலை மாதம் விரிவான ஆலோசனைகளை நடத்தினார்.

    ஒவ்வொரு துறையிலும் நடைமுறையில் உள்ள திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளின் நிலையை விரிவாக அறிக்கையாகச் சமர்ப்பிக்க உத்தரவிட்டார். மாநிலத்தின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு முக்கியத் திட்டங்களைத் தேர்வு செய்தார். இந்தப் பட்ஜெட்டின் சிறப்பம்சமாக சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் ‘வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டம்’ அறிவிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தேர்தலுக்கு முன் தவெக அளித்த வாக்குறுதிகளான குடும்பத் தலைவிகளுக்கு 60 வயது வரை மாதம் ரூ.2,500 வழங்கும் மதிப்புமிகு மகளிர் திட்டம், ஆண்டுக்கு ஆறு இலவச கேஸ் சிலிண்டர்கள், வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை மற்றும் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் போன்றவை இந்த நிதிநிலை அறிக்கையில் எந்த அளவுக்கு இடம்பெறும் என்பதில் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியது. நிதி அமைச்சர் மரிய வில்சன் 2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையைத் தொடங்கினார். முதலமைச்சர் விஜய் இந்தப் பட்ஜெட் மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்று முன்கூட்டியே வலியுறுத்தியிருந்தார். மாநிலத்தின் வளர்ச்சி, சமூக நலன் மற்றும் வாக்குறுதி நிறைவேற்றம் ஆகியவற்றை மையப்படுத்திய அறிவிப்புகள் வர வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    budget tn assembly TVK Government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒரே கிளிக்கில் டாஸ்மாக் மதுபானம்.. புதிய இணையதளம் மூலம் நாளை முதல் சேவை!
    Next Article மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் புதிய சைக்கிள் திட்டம்.. அமைச்சர் மாஸ் அறிவிப்பு!
    editor5

    Related Posts

    மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் புதிய சைக்கிள் திட்டம்.. அமைச்சர் மாஸ் அறிவிப்பு!

    August 5, 2026

    ஒரே கிளிக்கில் டாஸ்மாக் மதுபானம்.. புதிய இணையதளம் மூலம் நாளை முதல் சேவை!

    August 5, 2026

    6, 7ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மாற்றம்.. ஒரே புத்தக முறையை கொண்டு வரும் பள்ளிக்கல்வித்துறை!

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் புதிய சைக்கிள் திட்டம்.. அமைச்சர் மாஸ் அறிவிப்பு!

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூடியது சட்டசபை!! தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்!!

    ஒரே கிளிக்கில் டாஸ்மாக் மதுபானம்.. புதிய இணையதளம் மூலம் நாளை முதல் சேவை!

    6, 7ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மாற்றம்.. ஒரே புத்தக முறையை கொண்டு வரும் பள்ளிக்கல்வித்துறை!

    விவசாயிகளின் பிரச்சினைகளைத் திசைதிருப்பவே தவெக அரசு தன்னை கைது செய்தது!- உதயநிதி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.