Close Menu
    What's Hot

    திருவள்ளூர் அருகே சோகம் : தொழிற்சாலையில் வாயுக் கசிவு… 7   பேர் பலி!

    நகராட்சி பெயரில் போலி ரசீது; கோவில்பட்டியில் இப்படியும் ஒரு வசூல்

    கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல் ; பேராசிரியரைக்  கைது செய்த சிங்கப் பெண்படை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்!
    உலகம்

    ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்!

    Editor web2By Editor web2June 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Strait of Hormuz
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    லெபனான் மீது இஸ்​ரேல் தாக்​குதல் நடத்தி வரு​வது, அமைதி ஒப்​பந்த விதி​மீறல் என்​ப​தால் ஹார்​முஸ் ஜலசந்​தியை மூடு​வ​தாக ஈரான் அறி​வித்​துள்​ளது.

    ஈரான் – அமெரிக்கா இடையே கடந்த 2 மாதங்​களுக்கு மேலாக நீடித்து வந்த அமைதி ஒப்​பந்த பேச்​சு​வார்த்தை கடந்த வெள்​ளிக்​கிழமை முடிவுக்கு வந்​தது. இருதரப்பு இடையே ஏற்​பட்ட அமைதி ஒப்​பந்​தத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கி​யான் ஆகியோர் கையெழுத்​திட்​டனர்.

    அமைதி ஒப்​பந்​தத்​தில் 14 அம்​சங்​கள் இடம்​பெற்​றிருந்​தன. இதையடுத்து ஹார்​முஸ் ஜலசந்தி திறக்​கப்​பட்டு கப்​பல் போக்​கு​வரத்து தொடங்​கியது. அடுத்த 60 நாட்​களுக்கு ஹார்​முஸ் ஜலசந்​தியை கடக்​கும் கப்​பல்​களுக்கு கட்​ட​ணம் வசூலிக்க மாட்​டோம். அதன்​பிறகு கட்​ட​ணம் வசூலிப்​போம் என்று ஈரான் கூறி வரு​கிறது.

    மேலும், ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் அமெரிக்க கடற்​படை​யும் தனது முற்​றுகையை படிப்​படி​யாக விலக்கி கொள்ள முன்​வந்​தது. இதையடுத்து கச்சா எண்​ணெய் கப்​பல்​கள் ஈரான் துறை​முகம் செல்ல அனு​மதி அளிக்​கப்​பட்​டது.

    இதனால் ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் இயல்பு நிலை திரும்பி கப்​பல் போக்​கு​வரத்து தொடங்​கியது. இந்​நிலை​யில் லெப​னான் மீது இஸ்​ரேல் படை நேற்று திடீர் தாக்​குதல் நடத்​தி​யது.
    அமைதி ஒப்​பந்​தத்​தில் லெப​னான் உட்பட அனைத்து முனை​களி​லும் போர் நிறுத்​தம் உடனடி​யாக அமல்​படுத்​தப்பட வேண்​டும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

    இதை மீறி லெப​னான் மீது இஸ்​ரேல் நேற்று தாக்​குதல் நடத்​தி​யது, ஒப்​பந்த விதி​முறை மீறல் எனக் கூறிய ஈரான், இதற்கு பதிலடி​யாக ஹார்​முஸ் ஜலசந்​தியை மூடு​வ​தாக அறி​வித்​தது.

    ஈரான் அரசு விடுத்​துள்ள செய்​தி​யில், ‘‘அமைதி ஒப்​பந்த விதி​முறை மீறலுக்கு முதல் நடவடிக்​கை​யாக ஹார்​முஸ் ஜலசந்தி மூடப்​பட்​டுள்​ளது. விதி​முறை மீறல் தொடர்ந்​தால் மேல் நடவடிக்​கைகள் எடுக்​கப்​படும்’’ என எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இதுகுறித்து அமெரிக்கா மற்றும் ஈரான் குழுவினர் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

     

    IranUSTalks JDVance MiddleEastCrisis StraitOfHormuz
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டவேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்
    Next Article கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல் ; பேராசிரியரைக்  கைது செய்த சிங்கப் பெண்படை
    Editor web2
    • Website

    Related Posts

    திருவள்ளூர் அருகே சோகம் : தொழிற்சாலையில் வாயுக் கசிவு… 7   பேர் பலி!

    June 21, 2026

    மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டவேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

    June 21, 2026

    நீட் மறு தேர்வு தொடங்கியது… 22.79 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருவள்ளூர் அருகே சோகம் : தொழிற்சாலையில் வாயுக் கசிவு… 7   பேர் பலி!

    நகராட்சி பெயரில் போலி ரசீது; கோவில்பட்டியில் இப்படியும் ஒரு வசூல்

    கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல் ; பேராசிரியரைக்  கைது செய்த சிங்கப் பெண்படை

    ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்!

    மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டவேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.