Close Menu
    What's Hot

    TNPSC: குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு!

    ”அந்த பட்டியலை வெளியிடட்டுமா?” – அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் கேள்வி

    “ஓலைப்பாயில் தண்ணீர் ஊற்றியதுபோல உதயநிதி பேசக்கூடாது?”  – தவெக விளாசல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“ஓலைப்பாயில் தண்ணீர் ஊற்றியதுபோல உதயநிதி பேசக்கூடாது?”  – தவெக விளாசல்
    Featured

    “ஓலைப்பாயில் தண்ணீர் ஊற்றியதுபோல உதயநிதி பேசக்கூடாது?”  – தவெக விளாசல்

    Editor web2By Editor web2June 23, 2026Updated:June 23, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    udhayanithi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி முன்வைத்த குற்றச்சாட்டுகளும், அதற்கு முதலமைச்சர் விஜய் கொடுத்த பதிலடியும்  ஆளும் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே ஒரு கடுமையான வார்த்தை போராக மாறியுள்ளது.

    குறிப்பாக “திரைப்படப் பாணியில் பேசுகிறார் முதலமைச்சர் விஜய்” என்று  உதயநிதி முன்வைத்த விமர்சனத்திற்கு தவெக தரப்பில் மிகக் காரசாரமான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தவெக ஐடி விங் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  “சினிமா பாணியில் பேசினார் என்ற ஒரு டொக்கு விழுந்த பாத்திரத்தையே மீண்டும் மீண்டும் உருட்டுகிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர். ‘முதல்வர் ஸ்க்ரிப்ட் கொண்டு வந்து பேசுகிறார்’ என்று பக்கம் பக்கமாக எழுதப்பட்ட ஸ்க்ரிப்ட் ஃபைலை வைத்துக்கொண்டு சபையில் பேசியவர் சொல்கிறார். அதைவிட காமெடி என்னவென்றால், ஸ்க்ரிப்ட் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ப்ரஸ் மீட் கொடுத்ததுதான் ஒரு கல் ஒரு கண்ணாடி காமெடியைவிட ஹைலைட் காமெடி.

    பெண்கள் பாதுகாப்பு, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு குறித்து நமது வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெளிவாகப் பதில் கொடுத்தார். ஆனால், அதைக் காதில் வாங்காமல், தன் இஷ்டத்திற்குப் பேசி, தன் வாயால் தன்னையே கிழிகிழியென்றுக் கிழித்துக்கொள்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.

    போராட்டங்களைத் தூண்டிவிடும் அரசியல் கட்சி என்ற அர்த்தத்தில்தான் நம்முடைய மக்கள் விரும்பும் முதல்வர் அவர்கள் பேசினார். ஆனால், ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்று தாங்கள் செய்யும் மறைமுக வேலையை திரு.உதயநிதியே பொதுவெளியில் உளறி உடைத்து இருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.

    Party fund சொன்னதும் ஏன் பதறுகிறது திமுக?. அப்படியெனில் அந்த party fund கொள்ளையில் ஈடுபட்டது யார் என்று மக்களுக்குத் தெரிந்துவிட்டது. மக்களால் ஆட்சி அதிகாரத்தில் இருந்து cut செய்யப்பட்ட திமுக, ஆக்‌ஷன் கட் பற்றிப் பேசுவது டென்ஷனில் உளறுவதுபோலவே இருக்கிறது.

    ஓலைப்பாயில் தண்ணீர் ஊற்றியதுபோல மதிப்புமிக்க எதிர்க்கட்சித் தலைவர் வாய்க்கு வந்ததை உளறுவதை இனியாவது நிறுத்த வேண்டும்.

    நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஷூட்டிங் போல இருக்கிறது என்கிறார் திரு.உதயநிதி. ஷூட்டிங் என்பது துப்பாக்கி சுடுதலையும் குறிக்கும். அப்படித்தான் எங்களின் முதலமைச்சரின் பேச்சு திமுகவை துப்பாக்கியின் தோட்டாக்களைப் போலத் துளைத்தெடுத்திருக்கிறது போலும்.

    தங்கள் குடும்பத்தை தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வந்துவிடவே கூடாது. அப்படி வந்தால் அன்று ஒருவர் சட்டையைக் கிழித்துக்கொண்டு சட்டசபையில் இருந்து ஓடி வந்தார். இன்று ஒருவர் ஆட்சி அதிகாரம் இழந்த சோகத்தில், சபையில் இருந்து பதிலளிக்க இயலாமல் வெளிநடப்பு என்ற பெயரில் விரக்தியில் வெளியே ஓடி இருக்கிறார்.

    எங்கள் வெற்றித் தலைவர் திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சொன்னால், அதற்கு ஒருநாளும் பதில் சொல்லத் திராணி இல்லை. மாறாக, தனிப்பட்டத் தாக்குதலில் இறங்குவதே திமுகவின் தரம். தங்கத்தைப் பார்த்து தகரம் குறை சொல்வது தரம் குறைந்த செயல் என்றுதான் மக்கள் சொல்கின்றனர்.

    பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பது மட்டுமே தெரியும். பதிலளிக்கச் சொன்னால் பதறுவோம் என்கிற பரிதாப நிலையில் மதிப்புமிகு எதிர்க்கட்சி இருக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

    CMVijaySpeech DMKvsTVK TNAssembly2026 UdhayanidhiStalin
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅறிமுகமான இதே நாளில் ‘பத்மஸ்ரீ’ விருது!. இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஹிட்மேன் ரோஹித் சர்மா!
    Next Article ”அந்த பட்டியலை வெளியிடட்டுமா?” – அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் கேள்வி
    Editor web2
    • Website

    Related Posts

    TNPSC: குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு!

    June 23, 2026

    ”அந்த பட்டியலை வெளியிடட்டுமா?” – அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் கேள்வி

    June 23, 2026

    அறிமுகமான இதே நாளில் ‘பத்மஸ்ரீ’ விருது!. இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஹிட்மேன் ரோஹித் சர்மா!

    June 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    TNPSC: குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு!

    ”அந்த பட்டியலை வெளியிடட்டுமா?” – அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் கேள்வி

    “ஓலைப்பாயில் தண்ணீர் ஊற்றியதுபோல உதயநிதி பேசக்கூடாது?”  – தவெக விளாசல்

    அறிமுகமான இதே நாளில் ‘பத்மஸ்ரீ’ விருது!. இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஹிட்மேன் ரோஹித் சர்மா!

    விஜய் அமிர்தராஜ், மம்மூட்டி, மாதவன் உள்பட 65 பேருக்கு பத்ம விருதுகள்; குடியரசுத் தலைவர் வழங்கினார்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.