Close Menu
    What's Hot

    மேகேதாது விவகாரம்: கர்நாடக எல்லையில் பதற்றம்… ஓசூரில் நிறுத்தப்பட்ட தமிழக பேருந்துகள்!

    கார்கில் வெற்றி தினம்: உயிர் நீத்த வீரர்களுக்கு தமிழக ஆளுநர் அஞ்சலி!

    புதுச்சேரி;   கார்கில் வெற்றி தினம்… போர் நினைவுச் சின்னத்தில் ஆளுநர், முதலமைச்சர் மரியாதை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இளையோர் ஆசிய ஹாக்கி: பாகிஸ்தானை 7-3 என வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
    Featured

    இளையோர் ஆசிய ஹாக்கி: பாகிஸ்தானை 7-3 என வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

    Editor web2By Editor web2July 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Indian Hockey
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சர்வதேச ஹாக்கி சம்மேளனம் (FIH) சார்பில் இளையோருக்கான ‘ஹாக்கி 5 ஆசிய சாம்பியன்ஷிப்’ போட்டி ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இத்தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற சப்-ஜூனியர் சிறுவர் பிரிவின் லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இந்திய அணி 7-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியின் போது மைதானத்தில் எதிர்பாராத திருப்பம் ஒன்று நிகழ்ந்தது. ஹாக்கி 5s விதிமுறைப்படி ஒரு அணிக்கு 5 வீரர்கள் மட்டுமே விளையாட வேண்டும் என்ற நிலையில், பாகிஸ்தான் அணி விதியை மீறி 6 வீரர்களுடன் விளையாடியது. இதனை உடனடியாகக் கண்டறிந்த நடுவர்கள் போட்டியை இடைநிறுத்தி பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தனர்.

    விதிமீறலுக்காகப் பாகிஸ்தான் அணியின் 2 வீரர்கள் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் ஆட்டத்தின் குறிப்பிட்ட பகுதியில் பாகிஸ்தான் அணி வெறும் 3 வீரர்களுடன் மட்டும் விளையாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. இந்திய வீரர்களின் சிறப்பான ஒருங்கிணைப்பும் தாக்குதல் ஆட்டமும் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

    அதேவேளையில், சப்-ஜூனியர் சிறுமியர் பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் இந்திய அணி, சீன அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய சிறுமியர் அணி 3-6 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் தோல்வியைத் தழுவியது.

    AsiaHockey5s IndianHockey IndiaVsPakistan Muscat2026
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதர்மேந்திர பிரதான் ராஜினாமாவை வரவேற்கிறேன்… கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவேண்டும் – நிர்மல்குமார்
    Next Article காமன்வெல்த் வரலாற்றில் புதிய மைல்கல்: 19-வது பதக்கம் வென்று தென் ஆப்பிரிக்க   வீரர் சாதனை!
    Editor web2
    • Website

    Related Posts

    மேகேதாது விவகாரம்: கர்நாடக எல்லையில் பதற்றம்… ஓசூரில் நிறுத்தப்பட்ட தமிழக பேருந்துகள்!

    July 26, 2026

    கார்கில் வெற்றி தினம்: உயிர் நீத்த வீரர்களுக்கு தமிழக ஆளுநர் அஞ்சலி!

    July 26, 2026

    புதுச்சேரி;   கார்கில் வெற்றி தினம்… போர் நினைவுச் சின்னத்தில் ஆளுநர், முதலமைச்சர் மரியாதை

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேகேதாது விவகாரம்: கர்நாடக எல்லையில் பதற்றம்… ஓசூரில் நிறுத்தப்பட்ட தமிழக பேருந்துகள்!

    கார்கில் வெற்றி தினம்: உயிர் நீத்த வீரர்களுக்கு தமிழக ஆளுநர் அஞ்சலி!

    புதுச்சேரி;   கார்கில் வெற்றி தினம்… போர் நினைவுச் சின்னத்தில் ஆளுநர், முதலமைச்சர் மரியாதை

    திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் 2-வது நாளாக ஆஜரானார் செந்தில் பாலாஜி!

    தென் மண்டல கவுன்சில்: முதல்வர் விஜய் தலைமையில் தமிழக பிரதிநிதிகள் அறிவிப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.