Author: Editor web2
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகளுக்கு காட்டமாக பதிலளித்தார். அப்போது பேசிய அவர், மேகதாது விவகாரத்தில் திமுக அரசின் சட்டப் போராட்டம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார். உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு வழக்கை சரியாக கையாளவில்லை என்ற அவரது குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்றும், இதுகுறித்து உரிய சட்ட நிபுணர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். கர்நாடக அரசு மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையைத் தயாரிக்கலாம்; ஆனால் அதற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்தே திமுக தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருவதாக ரகுபதி விளக்கமளித்தார். “மேகதாது அணையையே கட்டக்கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப் பணியை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் , உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்புக்கு எதிராக நாளை காலை தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 31 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதன்படி முதலமைச்சர் விஜய், கடந்த 10-ம் தேதி கரூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த அரசாணையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை, அரசுப் பணி வழங்கிய அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும்,…
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 31 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு வழங்கிய அரசுப் பணியை ரத்து செய்து, அதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையையும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கடந்த 10 -ம் தேதியன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேர்தலுக்கு முந்தைய தனது கரூர் பிரசாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களைச் சேர்ந்த 31 வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். முன்னதாக இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அன்றைய தினம் காலை இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், வேலை வழங்க உடனடியாக தடை விதிக்கவில்லை என்றபோதிலும், வழங்கப்படும் வேலை நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது எனக் கூறி இருந்தது. இந்த நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உயிரிழந்தோரின்…
2025-ஆம் ஆண்டிற்கான உயரிய ’60-ஆவது ஞானபீட விருது’ பெற்ற கவிஞர் வைரமுத்துவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அமித்ஷா அனுப்பி உள்ள கடிதத்தில், ”இந்த உயரிய விருது, தங்களின் பல ஆண்டுகால தளராத அர்ப்பணிப்பு, ஆழமான அறிவுத்திறன் மற்றும் சிறந்த படைப்பாற்றலுக்குக் கிடைத்த தகுந்த, நடுநிலையான அங்கீகாரமாகும். தங்களுக்கு ஞானபீட விருது வழங்கி கௌரவிப்பது, தங்களின் இணையற்ற இலக்கியத் திறமைக்கான தேசிய அளவிலான பாராட்டாக மட்டுமல்லாமல், இந்திய மொழிகளின் செழுமையான பாரம்பரியத்தைப் பெருமையுடன் போற்றும் ஒரு சிறப்புமிக்க நிகழ்வாகவும் திகழ்கிறது. தமிழ் இலக்கியத்தின் சிறந்த கவிஞர், பாடலாசிரியர் மற்றும் அறிஞரான தங்களின் பங்களிப்பு, இந்திய இலக்கியத்தையும் கலாச்சாரத்தையும் ஆழமாகச் செழுமைப்படுத்தியுள்ளது. தங்களின் படைப்புகள் மனித உணர்வுகள், இயற்கை, காதல், சமூக விழிப்புணர்வு மற்றும் இந்தியத் தத்துவங்களின் அற்புதமான ஒருங்கிணைப்பைப் பிரதிபலிக்கின்றன. தங்களின் எழுத்துக்களின் வாயிலாகத் தமிழ் மொழிக்குத்…
திருப்பூர் மாவட்டத்தில் ரயிலின் குளிர்சாதன பெட்டியில் மறைத்து கடத்தி வரப்பட்ட 40 கிலோ கஞ்சாவை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பல்லடம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர்கள் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் பெருமளவில் கஞ்சா திருப்பூருக்கு கடத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, திருப்பூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது…
நீட் தேர்வு முறைகேடு விவகாரம் மற்றும் மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து, தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எதிர்க்கட்சிகள் குறிவைத்துள்ளன. மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கி, அமித் ஷா நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய பேரணியை கலைக்க காவல்துறையினர் தடியடி, கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் பெல்லட் கன் உள்ளிட்ட பலத்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தச் சம்பவத்தில் பல மாணவர்கள் மற்றும் ஒரு செய்தியாளர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி, மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும்…
நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெற்ற மாணவர் போராட்டங்களின்போது காவல்துறையினர் மேற்கொண்டதாகக் கூறப்படும் அத்துமீறல்கள் தொடர்பான மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், “போராட்டம் நடைபெறுகிறது என்பதற்காகவே காவல்துறையினர் அளவுக்கு மீறிய பலத்தைப் பயன்படுத்தவோ, தடியடி நடத்தவோ முடியாது” என்று கடுமையாகக் கருத்து தெரிவித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று விசாரித்தது. டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் நீட் போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக மனுக்களில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. விசாரணையின்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த், “அமைதியான, சட்டபூர்வமான போராட்டம் நடத்துவது அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமையாகும். போராட்டம் நடைபெறுகிறது என்பதற்காகவே காவல்துறையினர் அளவுக்கு மீறிய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது” என்று தெரிவித்தார். மேலும், போராட்டங்களை கையாள்வதற்கான தெளிவான நடைமுறை (Protocol) அவசியம் என்றும், மக்கள் தங்களது…
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர் போராட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியும், பாஜக முன்னாள் அறிவுசார் பிரிவு தலைவருமான டி.ஜி. மோகன்தாஸ் வெளியிட்டுள்ள கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பொறுப்புக்கூற வேண்டும் என வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் 36 நாட்கள் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்குப் பிறகு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகிய நிலையில், கேரளாவைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதி டி.ஜி. மோகன்தாஸ் தனது கருத்துகளை யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளார். ஜூலை 26-ஆம் தேதி வெளியிடப்பட்ட காணொளியில், ” போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தில் நான் மட்டும் இருந்திருந்தால் அந்தப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருப்பேன். மூன்று முறை கலைந்து செல்லுமாறு எச்சரித்த பிறகும் மக்கள் செல்லவில்லை என்றால் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டிருப்பேன். சிலர் உயிரிழப்பார்கள், சிலர் காயமடைவார்கள். நான்கு மணி நேரத்தில் நிலைமை…
சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்ந்து செல்போன் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் தொல்லை கொடுத்து வருவது தொடர்பாக, வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் சந்தித்துச் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். மேயர் பிரியா அளித்துள்ள புகாரில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது அதிகாரப்பூர்வ அலுவலக எண்ணிற்கும், தனிப்பட்ட தொலைபேசி எண்ணிற்கும் தொடர்ந்து தொடர்பு கொண்டு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் தொந்தரவு செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக வலைதளங்களில் தன்னை பற்றித் தவறான தகவல்களையும், அவதூறான கருத்துக்களையும் சித்தரித்துப் பரப்பி வருவதாகவும், இதனால் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட நபரைக் கண்டறிந்து அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இப்புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் ஆணையர், உடனடியாக இது…
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளைஞர் அருணாச்சலத்தின் குடும்பத்தினரை, முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம், கடந்த ஜூலை 17-ஆம் தேதி சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாகக் கூறி தென்பாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது காவல் நிலையத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருணாச்சலம், கடந்த ஜூலை 23-ஆம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு காவல்துறையினரின் தாக்குதலே காரணம் என குற்றம்சாட்டிய உறவினர்கள், உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஜூலை 24-ஆம் தேதி பிரேதப்…