Author: Editor web2
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை நிரப்ப, தேடுதல் குழு பரிந்துரைத்துள்ள பட்டியலில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்து நியமிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததுடன், அதுதொடர்பான வழக்கை மீண்டும் விசாரித்து முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. மேலும், வழக்கில் இறுதி முடிவு வரும் வரை புதிய துணைவேந்தர் நியமனங்கள் செய்யப்படமாட்டாது என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்திருந்தது. இந்த நிலையில், அந்தச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கும், பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை நிரப்ப உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கக் கோரிய மற்றொரு வழக்கும் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.…
காமராஜர் காலை உணவுத் திட்டப் பணிகள் தற்போது புதிதாக தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் தவறானது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டு நகர்ப்புறப் பகுதிகளில் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே, ஒப்பந்தப்புள்ளி மூலம் தேர்வு செய்யப்பட்ட சேவை வழங்குநர்கள் (Service Providers) மூலமாகவே உணவு தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதும் அதே நடைமுறையே தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருவதாகவும், புதிதாக எந்த தனியார் நிறுவனத்திற்கும் ஒப்பந்தம் வழங்கப்படவில்லை என்றும் நகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. இதனால், காமராஜர் காலை உணவுத் திட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும், பொதுமக்கள் உறுதி செய்யப்படாத தகவல்களை நம்பவோ, பகிரவோ வேண்டாம் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், தவறான தகவல்களை பரப்புவது…
மக்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்கள் நடத்திய போராட்டம் குறித்து பேசியபோது, ஆளுங்கட்சி பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. ராகுல் காந்தி தனது பேச்சின்போது, “மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறை அல்லது வெறுப்பின் வெளிப்பாடு அல்ல. அது நாட்டின் இளைஞர்களின் உணர்வுகள், எதிர்காலம் குறித்த அச்சம் மற்றும் எதிர்பார்ப்புகளின் ஜனநாயகபூர்வமான வெளிப்பாடு. இந்த போராட்டத்தை எந்த அரசியல் கட்சியும் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. ஆளும் பாஜக உட்பட அனைத்து கட்சிகளும் மாணவர்களின் ஜனநாயக உரிமையை மதிக்க வேண்டும்” என்றார். மேலும், “பாஜக தலைவர்கள் தங்களது சொந்த குழந்தைகளிடம் இந்த மாணவர் போராட்டம் குறித்து கேட்டுப் பாருங்கள். போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் பக்கமே அவர்களது குழந்தைகளின் ஆதரவு இருப்பதை உணர்வார்கள். இந்த போராட்டத்தில் எந்தத் தவறும் இல்லை. மாறாக, ஒவ்வொரு இந்தியரும் பெருமையுடன் பார்க்க வேண்டிய நிகழ்வு…
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழுவில் முக்கிய மாற்றங்கள் நடைபெற உள்ளன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) செயலாளர் தேவஜித் சைக்கியா, உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஷே மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் ஆகியோரின் ஒப்பந்தங்கள் நிறைவடைந்துள்ளதாகவும், அவை நீட்டிக்கப்படாது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த பயிற்சியாளர் குழுவின் காலகட்டத்தில் இந்திய அணி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறப்பான வெற்றிகளைப் பெற்றது. 2025 ஆசியக் கோப்பையை கைப்பற்றிய இந்தியா, 2026-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையையும் வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டது. இருப்பினும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இழந்ததோடு, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சொந்த மண் தொடரிலும் தோல்வியை சந்தித்தது. 2021 முதல் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இருந்த டி. திலீப், இந்திய அணியின் பீல்டிங் தரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகித்தார். அவரது பயிற்சிக் காலத்தில் இந்தியா 2024 டி20…
2026-ஆம் ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வரும் நவம்பர் 25-ஆம் தேதி முதல் டிசம்பர் 15-ஆம் தேதி வரை சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற உள்ளது. உலக சதுரங்க கூட்டமைப்பு (FIDE) அதிகாரப்பூர்வமாக இந்தத் தேதிகளை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியில் இந்தியாவின் நடப்பு உலக சாம்பியனும், சென்னைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டருமான டி. குகேஷ், உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிண்டரோவை எதிர்கொள்கிறார். இந்த உலக சாம்பியன்ஷிப் பல்வேறு வகைகளில் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதன்முறையாக 20 வயதிற்குட்பட்ட இரண்டு இளம் வீரர்கள் இறுதிப் பட்டத்திற்காக மோதவுள்ளனர். 2024-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்று, உலகின் இளம் செஸ் சாம்பியனாக குகேஷ் சாதனை படைத்திருந்தார். தற்போது அந்த பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் அவர் களமிறங்குகிறார். இந்தத் தொடர் மொத்தம் 14 கிளாசிக்கல் ஆட்டங்களைக் கொண்டதாக இருக்கும். முதலில் 7½ புள்ளிகள் பெறும் வீரர்…
சென்னை அடையாறு காந்தி நகர் பகுதியில் கயல்விழிக்குச் சொந்தமான கட்டிடத்தில் எஸ்பிஐ வங்கி வாடகைக்கு செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அந்த கட்டிடத்தின் லிஃப்ட் பழுதடைந்து செயல்படாததால், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் சிரமம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முதலில் கயல்விழியின் உதவியாளரிடம் வங்கி மேலாளர் ஹர்ஷீன்சிங் புகார் தெரிவித்ததாகவும், பின்னர் நேரடியாக கயல்விழியிடமும் பழுதை சரிசெய்ய வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, கடந்த 20-ஆம் தேதி கயல்விழி நேரடியாக வங்கி கிளைக்கு சென்று மேலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில், அவர் வங்கி மேலாளர் ஹர்ஷீன்சிங்கின் கன்னத்தில் அறைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, வங்கி மேலாளர் கடந்த 24-ஆம் தேதி சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் கயல்விழி மீது அத்துமீறி நுழைதல்,…
திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராதா நகர், பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நடராஜ். அவரது மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு நந்திதா (10) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், வெண்ணிலா குழந்தைகளை விட்டுவிட்டு வேறொருவரை திருமணம் செய்து சென்றதாக கூறப்படுகிறது. அதேபோல், தந்தையான நடராஜும் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது. இதனால், இரு குழந்தைகளையும் நடராஜின் தாயார் பொன்னம்மாள் என்ற மூதாட்டி கூலி வேலை செய்து வளர்த்து வந்தார். நந்திதா, திருப்பூர் மன்னரை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். பெற்றோர் தங்களை கவனிக்க வராத ஏக்கம் ஒருபுறமும், வயதான பாட்டி கடும் வறுமையில் உழைத்து தங்களை வளர்ப்பதை பார்த்த வேதனை மறுபுறமும் சிறுமியை கடந்த சில நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தன்று பள்ளி முடிந்து…
கடந்த 2022 ஆகஸ்ட் 8-ஆம் தேதி புதுச்சேரி எழில் நகரில், அமைச்சர் மரிய வில்சன், தனது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, மரிய குலோத் மற்றும் அவரது மனைவி கெரோலினை தாக்கியதாக கூறி, லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த குற்றவியல் வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மரிய வில்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கை நேரடியாக முடிவு செய்யாமல், இருதரப்பும் சமரசத் தீர்வு மையத்தை அணுகி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரசத் தீர்வு மையத்தில் ஏற்கனவே இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தாலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து, இன்று மூன்றாவது முறையாக சமரசத் தீர்வு மைய…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சுக்கிரவார்பட்டியில் செயல்பட்டு வந்த தனியார் காகித ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான காகித பண்டல்கள் எரிந்து சேதமடைந்தன. சிவகாசி அருகேயுள்ள சுக்கிரவார்பட்டியில் குருசாமி என்ற தொழிலதிபருக்குச் சொந்தமான காகித மறுசுழற்சி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் மறுசுழற்சிக்காக அதிகளவில் காகித பண்டல்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், திடீரென காகித பண்டல்களில் தீப்பிடித்தது. காகிதங்கள் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்ததால், தீ வேகமாக பரவி ஆலையின் பெரும்பாலான பகுதிகளை சூழ்ந்தது. தகவல் அறிந்ததும் சிவகாசி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற தீவிர போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான காகித…
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தின் பெயர் ‘பண்டிதர் அயோத்திதாசர் நவீன பேருந்து நிலையம்’ என மாற்றம் செய்யப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை எனத் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) விளக்கம் அளித்துள்ளன. கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு ’கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தப் பெயரை மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக, கடந்த சில நாட்களாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன. இது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், உண்மைத் தன்மை குறித்துத் தகவல் சரிபார்ப்பகம் ஆய்வு செய்தது. இது குறித்துச் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அளித்துள்ள அதிகாரப்பூர்வ விளக்கத்தில், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றம் செய்ய இருப்பதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலில் எந்தவித உண்மையும்…