Author: Editor web2
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் (MTC) அப்ரெண்டீஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொறியியல் பட்டதாரிகள், டிப்ளமோ மற்றும் பொதுப் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுவோருக்கு ஓராண்டு கால பயிற்சி வழங்கப்படும். பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.12,300 உதவித்தொகையும், டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.10,900 உதவித்தொகையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகர போக்குவரத்து கழகத்தின் அறிக்கையின்படி, தொழில் பழகுநர் பயிற்சிக்கான விண்ணப்பங்களை தேசிய அப்ரெண்டீஸ் பயிற்சி திட்டத்தின் (NATS) இணையதளமான https://nats.education.gov.in மூலம் வரும் ஆகஸ்ட் 28, 2026-க்குள் பதிவு செய்ய வேண்டும். இயந்திரப் பொறியியல், வாகனப் பொறியியல், சிவில் பொறியியல், மின் மற்றும் மின்னணுப் பொறியியல், கணினித் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் பொறியியல் பட்டம் அல்லது டிப்ளமோ பெற்றவர்களும், B.A., B.Sc., B.Com., B.B.A., B.C.A./B.C.M. உள்ளிட்ட பொதுப் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 2022, 2023, 2024, 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில்…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்தார். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், குறிப்பாக தொடக்கக் கல்வியில் பெற்றோர் அரசு பள்ளிகளை அதிகம் விரும்பி தேர்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார். “அரசுப் பள்ளிகள் எங்கள் கண்கள். அந்தக் கண்களுக்கு புதிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது. கல்வித் தரம் உயர்ந்ததன் காரணமாகவே மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் வகையில், ஆறாம் வகுப்பு முதலே கணினி அறிவியல் பாடப்புத்தகத்தை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கணினி அறிவியல் பயிற்றுநர்கள் தொடர்பான திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களை வெளிப்படையாகக் கண்காணிக்கும் நோக்கில், ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட உள்ளது. அந்தக் குழு பள்ளிக் கட்டண…
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாகத் தமிழ்நாடு – கர்நாடகா இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ள நிலையில், கர்நாடக மாநிலம் மண்டியாவில் முதல்வர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்துக்கு நேற்று முதல் 15 நாட்களுக்குத் தினமும் 3,500 கனஅடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்குமுறை குழு உத்தரவிட்டது. ஆனால், போதிய தண்ணீர் இல்லை எனக் கூறி இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தக் கர்நாடகா மறுத்து வருகிறது. இதற்கிடையே, தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கக் கூடாது என வலியுறுத்திப் பெங்களூரு, மண்டியா, மைசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன்னட மற்றும் விவசாய அமைப்பினர் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மண்டியாவில் உள்ள குருஸ்ரீ திரையரங்கை முற்றுகையிட்ட ’உதய சேனா’ என்ற கன்னட அமைப்பினர், திரையரங்கின் முகப்பில் ஒட்டப்பட்டிருந்த ‘ஜனநாயகன்’ படப் போஸ்டர்களைக் கிழித்து எறிந்து எதிர்ப்புத்…
பீகார், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் காலியாக உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை (ஜூலை 30) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. பீகாரின் பங்கிப்பூர் தொகுதி, பா.ஜ.க. எம்.எல்.ஏ. நிதின் நபின் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றதைத் தொடர்ந்து காலியானது. மத்திய பிரதேசத்தின் தாட்டியா தொகுதி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேந்திர பாரதி தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் காலியாகியது. குஜராத்தின் மஞ்சள்பூர் தொகுதி, பா.ஜ.க. எம்.எல்.ஏ. யோகேஷ்பாய் நரேந்தாஸ் படேல் மறைவையடுத்து காலியாக அறிவிக்கப்பட்டது. இந்த மூன்று தொகுதிகளுக்கும் ஜூலை 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், பதிவாகும் வாக்குகள் ஆகஸ்ட் 3-ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதையடுத்து பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், மூன்று தொகுதிகளிலும் அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்ய கூடுதல்…
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்திய வீராங்கனைகளும் வீரர்களும் தொடர் பதக்கங்களை வென்று அசத்தி வருகின்றனர். குறிப்பாகக் குத்துச்சண்டைப் பிரிவில் இன்று ஒரே நாளில் 5 பேர் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கங்களை உறுதி செய்துள்ளனர். ஆடவருக்கான 90 கிலோவுக்கு அதிகமானோர் பிரிவில் இந்திய வீரர் நரேந்தர் பெர்வால் அபாரமாக விளையாடி அரையிறுதிக்குத் தகுதி பெற்றார். அவரைத் தவிர சாக்ஷி சவுத்ரி, அருந்ததி சவுத்ரி, சச்சின் சிவாச் மற்றும் அங்குஷ் ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறும் வீராங்கனைகளுக்குக் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் உறுதி என்பதால், இந்தப் பிரிவில் மட்டும் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன. தற்போது வரை இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு மகளிருக்கான 48…
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும் என்றும், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, கடந்த ஜூலை 22-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய பேரணியின்போது போலீசார் மேற்கொண்ட அடக்குமுறையை கடுமையாக விமர்சித்தார். மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும், ஆணிகள் பொருத்தப்பட்ட லத்திகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். “இந்த நடவடிக்கைக்கு அமித் ஷா நேரடியாக உத்தரவிட்டிருந்தால் அது மிகப்பெரிய தவறு. அவர் உத்தரவிடவில்லை என்றால், தனது கட்டுப்பாட்டில் உள்ள போலீசார் என்ன செய்கிறார்கள் என்பது கூட தெரியாத திறமையற்ற அமைச்சராக இருக்கிறார். எந்த வகையிலும் அவர் பதவியில் தொடரக்கூடாது,” என்று ராகுல் காந்தி தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக அமித்…
திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு விஸ்வேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 213 ஏக்கர் நிலத்தை தனிநபர்களின் பெயரில் பத்திரப்பதிவு செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தை தனிநபர்களின் பெயரில் பதிவு செய்ய முயற்சிகள் நடைபெறுவதாகக் கூறி, கோயில் செயல் அலுவலர் ஏற்கனவே திருப்பூர் சார் பதிவாளருக்கு கடிதம் அனுப்பி, எந்தவித பத்திரப்பதிவும் மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தியிருந்தார். இந்தக் கடிதத்தை எதிர்த்து ஏ.ஆர். சண்முகசுந்தரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கோயில் செயல் அலுவலர் அனுப்பியிருந்த கடிதத்தை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து கோயில் நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் என். மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில், கோயில் செயல் அலுவலர் திருப்பூர் சார் பதிவாளருக்கு அனுப்பியிருந்த…
வங்கதேச கிரிக்கெட் அணியின் அனுபவம் மிக்க விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ், அந்த அணியின் ஒருநாள் (ODI) கிரிக்கெட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஏற்கனவே டி20 அணியின் கேப்டனாக இருந்த லிட்டன் தாஸ், தற்போது வங்கதேசத்தின் ஒயிட்-பால் (White-ball) கிரிக்கெட்டின் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்த மெஹிதி ஹசன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) அறிவித்துள்ளது. 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரை அவர் கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2027 உலகக் கோப்பை போட்டி தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 முதல் நவம்பர் 21 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் 14 அணிகள் பங்கேற்க உள்ளன. 31 வயதான லிட்டன் தாஸ், 2015-ம் ஆண்டு சர்வதேச…
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டுள்ள வந்தே மாதரம் சட்டத் திருத்த மசோதாவிற்குத் தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “வந்தே மாதரம் பாடலை அவமதிப்பதாகக் கூறி சட்டத் திருத்தம் கொண்டுவருவது என்பது தேசிய உணர்வைத் திணிக்கும் முயற்சியே ஆகும். இதன் மூலம் தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக முதல் பாடலாகப் பாடப்பட்டு வரும் ‘தமிழ்த்தாய் வாழ்த்தை’ நிரந்தரமாக இருட்டடிப்பு செய்யும் மறைமுக வேலையை மத்திய பா.ஜ.க அரசு செய்கிறது. மாநில மொழிகளின் உரிமைகளிலும், கலாச்சார அடையாளங்களிலும் கை வைக்கும் இத்தகைய மசோதாக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆளுநரின் உத்தரவின்படி மூன்றாவது பாடலாகப் பாடப்பட்ட சம்பவத்தையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், மத்திய அரசின் இந்த நகர்வுகள் மாநில…
கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் எச்.ஐ.வி. பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு ஆலோசனை முகாம்களை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக அரசு மற்றும் விஸ்வேஷ்வரயா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (VTU) இணைந்து இந்த சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்துகிறது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கலை, அறிவியல், பொறியியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மாணவர்களுக்கான பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி. தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. 2023–24-ஆம் ஆண்டில் 44,500 பேராக இருந்த பாதிப்பு எண்ணிக்கை, 2025–26-ஆம் ஆண்டில் 66,600 ஆக உயர்ந்துள்ளது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் தகவலின்படி,…