Author: Editor web2
தாமிரபரணி ஆற்றில் ஆடைகள் மற்றும் பிற பொருட்களை வீசுவதற்கு தடை விதித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, சடங்குகள் என்ற பெயரில் ஆற்றை மாசுபடுத்துவதை தடுக்க நெல்லை மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த சிவனுபாண்டியன் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு, அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஆனந்த விலாஸ் மண்டபத்தை பாபநாச சுவாமி கோவில் நிர்வாகம் உடனடியாக தனது கட்டுப்பாட்டில் எடுத்து, தொல்லியல் துறையுடன் இணைந்து அதன் பாரம்பரிய வடிவத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், தாமிரபரணி ஆற்றில் ஆடைகள் மற்றும் சடங்கு பொருட்களை வீசுவதால் ஆற்றின் இயல்பு பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், இனிமேல் ஆற்றை மாசுபடுத்துவது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். உத்தரவை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் வகையில்…
நாடாளுமன்றத்தில் ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடியை விமர்சித்து பிரியங்கா காந்தி குறிப்பிட்டதாக கூறப்படும் கருத்துக்கு எதிராக, 215-க்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள், முன்னாள் துணைவேந்தர்கள் உள்ளிட்ட கல்வியாளர்கள் கடிதம் வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தக் கருத்து ஒரு தனிநபரை மட்டுமல்ல, இந்தியாவின் அறிவியல் மற்றும் கல்வி நிறுவனங்களின் கண்ணியத்தையே பாதிக்கும் வகையில் இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் தேர்வுச் சீர்திருத்த பணிக்குழு தொடர்பாக மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, அக்குழுவில் இடம்பெற்றுள்ள ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடியை “கோமூத்திர நிபுணர்” என்று குறிப்பிட்டது இந்தியாவின் அறிவியல் நிறுவனங்களின் கண்ணியத்தை பாதிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கருத்து ஒரு தனிநபர் மீதான விமர்சனத்தைத் தாண்டி, கல்வியாளர்கள் நடத்தப்படும் விதம் மற்றும் இந்தியாவின் கல்வி நிறுவனங்களின் கண்ணியம் குறித்த விரிவான கவலைகளை எழுப்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பேராசிரியர் வி. காமகோடி…
தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த புறநகர் மின்சார ரயில், சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. ரயிலில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்ய ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றினர். 30 நிமிடங்களுக்கும் மேலாக ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். மேலும், இந்த கோளாறு காரணமாக அதே வழித்தடத்தில் இயக்கப்படும் பிற புறநகர் ரயில்களும் பல்வேறு நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் புறநகர் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதுடன், அலுவலக நேர பயணிகளும் கடும் அவதியடைந்தனர்.
போராட்டங்களை கலைக்க காவல்துறையினர் பயன்படுத்தும் பெலட் துப்பாக்கிகளை (Pellet Guns) முற்றிலும் தடை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் உளவுத்துறை (IB) சிறப்பு இயக்குநர் யசோவர்தன் ஆசாத் மற்றும் ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் பெலட் காயமடைந்த இருவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது. விசாரணையின் போது நீதிபதி ஜோய்மால்யா பாக்சி, “விதிவிலக்கான சூழல்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பெலட் துப்பாக்கிகளை பயன்படுத்த காவல்துறை விதிமுறைகள் அனுமதிக்கின்றன. அந்த விதிமுறைகளையே அரசியலமைப்புச் சட்டம் 21-க்கு முரணானவை என சவால் செய்யாமல், பெலட் துப்பாக்கிகளுக்கு முழுமையான தடை கோர முடியாது” என்று தெரிவித்தார். மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விருந்தா குரோவர், ரப்பர் அல்லது பிளாஸ்டிக் பெலட்டுகள் அல்லாமல், மெட்டாலிக் பெலட்டுகள் மாணவர்கள் மீது பயன்படுத்தப்பட்டதாகவும், அவை காயமடைந்தவர்களின் உடலிலிருந்து அகற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான…
போராட்டக்காரர்களை கலைக்க மெட்டாலிக் பெலட் (Metallic Pellet) துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, காவல்துறை விதிமுறைகளையே நேரடியாக சவால் செய்யும் வகையில் திருத்தி தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் உளவுத்துறை (IB) சிறப்பு இயக்குநர் யசோவர்தன் ஆசாத் மற்றும் ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற ‘சன்சத் சலோ’ மாணவர் போராட்டத்தில் காயமடைந்த இருவர் தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விருந்தா குரோவர், அமைதியான மாணவர் போராட்டத்தின் மீது ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் (RAF) மெட்டாலிக் பெலட் குண்டுகளை பயன்படுத்தியதாகவும், இரு மனுதாரர்களின் உடலில் இருந்து அந்த பெலட்டுகள் அகற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். ரப்பர் அல்லது பிளாஸ்டிக் பெலட்டுகள் அல்ல, மெட்டாலிக் பெலட்டுகள்தான் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் வாதிட்டார். இதற்கு பதிலளித்த நீதிபதிகள், சில விசேஷ சூழல்களில்…
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான நெய்மர் (34), சர்வதேசக் கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முறைப்படி அறிவித்துள்ளார். இதன் மூலம், சுமார் 16 ஆண்டுகள் நீடித்த அவரது சர்வதேச கால்பந்து பயணம் முடிவுக்கு வந்துள்ளது. நெய்மரின் இந்த அறிவிப்பு, உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சான்டோஸ் (Santos) கிளப் அணியின் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நெய்மர், “தேசிய அணியுடனான எனது பயணம் இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது. பிரேசில் அணிக்காக விளையாடியதில் சரித்திரம் படைத்திருக்கிறேன். தேசிய அணிக்காக எனது ரத்தத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்தேன். இனி பிரேசில் அணிக்காக விளையாடப் போவதில்லை” என உருக்கமாகத் தெரிவித்தார். உலகக் கோப்பைத் தொடரில் பிரேசில் அணி ‘ரவுண்ட் 16’ சுற்றோடு வெளியேறியதைத் தொடர்ந்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு பிரேசில் அணியில் அறிமுகமான நெய்மர், இதுவரை 129 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 80 கோல்களை…
தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்திற்கு சுமார் 4 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54-வது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக, தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரைக்கு எதிராக கர்நாடக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், அந்த முறையீட்டை பரிசீலித்த ஆணையம், ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று உத்தரவு பிறப்பித்தது. கூட்டத்தில் கர்நாடக அரசு தரப்பில், காவிரிப் படுகை முழுவதும் போதிய மழைப்பொழிவு இல்லாததால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவாக இருப்பதாகவும், தற்போது தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத சூழல் நிலவுவதாகவும் வாதிடப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பிலிகுண்டுலுவில் 30,748 கனஅடி நீர்…
டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டி, அப்போதைய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது கடந்த ஜூலை 28-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு காவலில் வைத்து விசாரிப்பது அவசியம் எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில்…
நீட் தேர்வையும், பொருளாதார அடிப்படையிலான 10 சதவீத (EWS ) இடஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் இன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்த வாகனப் பிரசாரப் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இருந்து நான்கு நாள் விழிப்புணர்வு பயணம் தொடங்க இருந்த நிலையில், அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, நுழைவாயிலில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதையடுத்து, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, இளைஞரணி, மாணவர் கழகம் மற்றும் மகளிர் பாசறை சார்பில் நடைபெற இருந்த இருசக்கர வாகனப் பிரசாரப் பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், நீட் விலக்கு மற்றும் EWS இடஒதுக்கீடு ரத்து கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பிரசாரப் பயணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவித்தார். கடைசி நேரத்தில் காவல்துறை…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் முன்னாள் ராணுவ வீரரை போலீசார் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி அருகே அர்ஜுனாபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஆடல், பாடல் நிகழ்ச்சியில் கண்ணமங்கலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துருகம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ்பாபு மற்றும் தற்போது ராணுவத்தில் பணியாற்றி வரும் பிரபாகரன் ஆகியோர் நடனமாடியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசாருக்கும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் தலைமை காவலர் சபரி, சிறப்பு உதவி ஆய்வாளர் திருமால் உள்ளிட்ட போலீசார் ரமேஷ்பாபுவை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, காவல்துறையினரை தாக்கியதாக தலைமை காவலர் சபரி அளித்த புகாரின் பேரில், ரமேஷ்பாபு மற்றும் பிரபாகரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு…