Author: Editor web2

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால முன் ஜாமீன் வழங்கியுள்ளது. 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் கொள்முதல், வாகன டெண்டர் மற்றும் காலி பாட்டில் சேகரிப்பு உள்ளிட்ட செயல்பாடுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டி, அப்போது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த ஜூலை 28-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு காவலில் வைத்து விசாரிப்பது அவசியம் எனக் கூறி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் முகுல் ரோஹத்கி…

Read More

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுக்கும் நிலையில், பேச்சுவார்த்தைக்காக முதலமைச்சர்  விஜய் கர்நாடகா செல்லும் முடிவை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கருகும் குறுவை பயிர்களைக் காப்பாற்ற  காவிரியில் வினாடிக்கு 3500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்ட பிறகும் கூட  தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக காங்கிரஸ் அரசு மறுக்கிறது; அங்குள்ள மக்களைத் தூண்டி விட்டு தமிழ்நாட்டுக்கு எதிராக போராட வைக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் கர்நாடகத்துக்கு சென்று அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருடன் பேச்சு நடத்தியே  தீருவேன் என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் பிடிவாதம் பிடிப்பது தமிழகத்திற்கு நலனுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது. காவிரி ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கக் கூடாது  என்று எதிர்ப்பு தெரிவித்துள்ள கன்னட அமைப்புகள் காவிரி பாயும் மாவட்டங்களில் முழு அடைப்பு…

Read More

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீசார் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தனர். இதையடுத்து, இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், தினமும் காலை 10.30 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் செந்தில்பாலாஜி மற்றும் அசோக்குமாருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி, இருவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்து முன்ஜாமீன் பெற்று, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தொடர்ந்து ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர். இதற்கிடையில், டாஸ்மாக் மதுபான கொள்முதல், வாகன டெண்டர் மற்றும் காலி பாட்டில் சேகரிப்பு ஒப்பந்தங்களில் ரூ.100 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக, செந்தில்பாலாஜி, டாஸ்மாக் முன்னாள்…

Read More

காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தைக்கு முன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஒருமித்த முடிவு எடுக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், த.வெ.க. அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாமல், ரூ.75 ஆயிரம் வரை மட்டுமே தள்ளுபடி செய்வதாக அறிவித்திருப்பது விவசாயிகளை ஏமாற்றும் நடவடிக்கை என குற்றம்சாட்டியுள்ளார். ”இந்த அறிவிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகஸ்ட் 6-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் தேர்தல் வாக்குறுதியின்படி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடியை அறிவிக்க வேண்டும். இல்லையெனில் அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகா தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை முழுமையாக திறக்கவில்லை. ஜூலை மாதத்திற்கான…

Read More

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக பரவி வரும் தகவல்கள் வதந்தி மட்டுமே என்றும், சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்பி மக்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும் மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூடுதல் மின் கட்டணம் விதிக்கப்பட்டதாக 3.70 லட்சம் பேர் புகார் தெரிவித்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது தவறான தகவல் என்று மறுத்தார். “சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப் உள்ளிட்ட தளங்களில் யாரோ பகிரும் தகவல்களை அடிப்படையாக வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவிக்கிறார். இதுபோன்ற தவறான தகவல்களால் பொதுமக்களை குழப்பக் கூடாது,” என்று அவர் கூறினார். திமுக ஆட்சிக் காலத்தில் 11.50 லட்சம் பேருக்கு மூன்று மடங்கு வரை மின் கட்டணம் வந்ததாகவும், தற்போது சுமார் 9 லட்சம் பேருக்கு மட்டுமே அதிக கட்டண விவரங்கள் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பாக வழக்கமான ஆய்வு (Routine Check-up)…

Read More

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்காக கர்நாடகா செல்லவிருக்கும் தமிழக முதல்வர் விஜய், தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய பெ. சண்முகம், காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக முதல்வர் கர்நாடகா செல்லும் முடிவை கடுமையாக விமர்சித்தார். காவிரி விவகாரத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டே உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரின் அளவை உறுதி செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அந்தத் தீர்ப்பு நடைமுறையில் இருக்கும் நிலையில், கர்நாடகாவுடன் தனியாக இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவது தமிழகத்தின் சட்டப்பூர்வ உரிமைகளை பலவீனப்படுத்தும் என்று தெரிவித்தார். பேச்சுவார்த்தை என்ற பெயரில் கர்நாடகா செல்வது, மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் எடுத்துள்ள சட்டப்பூர்வ நிலைப்பாட்டை தளர்த்தும் அபாயத்தை ஏற்படுத்தும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. அந்தத்…

Read More

காவிரி நதிநீர்ப் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்துச் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீரைத் திறந்து விடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட்ட போதிலும், கர்நாடக அரசு அதனைச் செயல்படுத்தாமல் தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும், மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தச் சூழலில், காவிரி மற்றும் மேகதாது விவகாரத்திற்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சியாக, முதலமைச்சர் விஜய் கர்நாடகாவிற்கு நேரில் சென்று அம்மாநில நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளார். இந்தச் சந்திப்பிற்குத் தமிழ்நாட்டின் விவசாயச் சங்கங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த கன்னட அமைப்புகள் தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதனையடுத்து இன்று காலை சென்னை…

Read More

தமிழ் திரையுலகின் பழம்பெரும் பின்னணிப் பாடகி ஜமுனா ராணி (88) நேற்று பெங்களூருவில் காலமானார். இனிமை, நளினம், தெளிவான தமிழ் உச்சரிப்பு ஆகியவற்றால் தனக்கென தனி முத்திரை பதித்த அவர், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் உள்ளிட்ட மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் ஜமுனா ராணி. ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜமுனா ராணி, சிறுவயதிலேயே திரையுலகில் அறிமுகமானார். தமிழில் ‘கல்யாணி’ திரைப்படம் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமான அவர், டி.எம். சௌந்தரராஜனுடன் இணைந்து பாடிய ‘குலுங்கிடும் பூவில் எல்லாம்’, ‘ஓ தேவதாஸ்’, ‘மாமா மாமா’, ‘செந்தமிழ்த் தேன்மொழியாள்’, ‘அத்திக்காய் காய் காய்’, ‘ஆதி மனிதன் காதலுக்குப் பின்’, ‘யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட ஏராளமான பாடல்கள் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன. ‘மகாதேவி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காமுகர் நெஞ்சில் நீதியில்லை’ பாடலை அவரைப் பாடவைக்க கவியரசர் கண்ணதாசன் பிடிவாதமாக வலியுறுத்திய சம்பவம் திரையுலகில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.…

Read More

தமிழக முதல்வர் குறித்து அவதூறாகவும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவைத் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வர் விஜய்யின் எலும்பை உடைப்பேன் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த 20-ம் தேதி அவரைக் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு மேலாகச் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மாவட்ட நீதிபதி சுபாதேவி முன்னிலையில் நடைபெற்ற இந்த ஜாமீன்…

Read More

மேகதாது அணை கட்டப்படக் கூடாது என்று ராகுல் காந்தி வெளிப்படையாக அறிவித்தால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இருந்து பாமக விலகத் தயாராக இருப்பதாக அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சவால் விடுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் கர்நாடகாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவது தமிழ்நாட்டின் நலனுக்கு பாதகமாக அமையும் என்றார். தமிழ்நாடு ஏற்காத, அங்கீகரிக்காத திட்டம் குறித்து கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை திரும்பப் பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பலமுறை உத்தரவிட்டும், கர்நாடகா தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க மறுத்து வருவதாக குற்றம்சாட்டிய அன்புமணி, மேகதாது அணை கட்டப்பட்டால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் குடிநீருக்குக் கூட தட்டுப்பாடு ஏற்படும்…

Read More